இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ராஜ் ஸ்ரீகாந்த் தாக்கரே (Raj Shrikant Thackeray], பிறப்பு சுவரராஜ் ஸ்ரீகாந்த் தாக்கரே ; 14 ஜூன் 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும், பிராந்திய அரசியல் கட்சியான மகாராட்டிரா நவநிர்மான் சேனாவின் நிறுவனத் தலைவரும் ஆவார். ராஜ் 2006 இல் கட்சியை நிறுவும் வரை சிவ சேனாவின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். இவர் பால் தாக்கரேவின் மருமகன் ஆவார்.
ராஜ் தாக்ரே | |
---|---|
மகாராட்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மார்ச்சு 2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூன் 1968 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (2006–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | சிவ சேனா ( 2006க்கு முன்னர்) |
துணைவர் | சர்மிளா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | சிவாஜி பூங்கா, தாதர், மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முன்னாள் கல்லூரி |
|
தொழில் | அரசியல்வாதி, கேலிச்சித்திர வரைஞர், பேச்சாளர் |
ராஜ் தாக்கரேயின் இயற்பெயர் சுவரராஜ் என்பதாகும். இவரது பெற்றோர் ஸ்ரீகாந்த் தாக்கரே ( பால் தாக்கரேவின் இளைய சகோதரர்) மற்றும் குந்தா தாக்கரே (பால் தாக்கரேவின் மனைவி மீனா தாக்கரேவின் தங்கை). சிறுவயதில் கைம்முரசு இணை, கித்தார் மற்றும் வயலின் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். [1] தாக்கரே மும்பையின் சர் ஜேஜே பயன்பாட்டு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். பட்டப்படிப்பு முடிந்ததும் பால் தாக்கரேவின் வார இதழான மர்மிக்கில் கேலிச்சித்திர வரைஞராக சேர்ந்தார். [1]
பாரதிய வித்யார்த்தி சேனா என்ற சிவசேனாவின் மாணவர் பிரிவைத் தொடங்கியதன் மூலம் தாக்கரே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1990 மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது இவர் முக்கியத்துவம் பெற்றார். 1990 களில், ராஜ் தனது மாமா பால் தாக்கரேவின் வாரிசு தான்தான் என்று நம்பினார். இருப்பினும், பால் தாக்கரே தனது சொந்த மகன் உத்தவ் மீது அதிக விருப்பம் காட்டினார்.
பால்தாக்கரே கட்சியின் மற்ற தலைவர்களால் ஒதுக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ் தாக்கரே 27 நவம்பர் 2005 அன்று சிவசேனாவில் இருந்து வெளியேறி புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார். மும்பையில் 9 மார்ச் 2006 அன்று, தாக்கரே மகாராட்டிரா நவநிர்மாண் சேனாவை நிறுவினார். அது இப்போது மகாராட்டிராவில் ஆளும் கட்சியின் கூட்டணியாக உள்ளது. [3]
பிப்ரவரி 2008 இல், ராஜ் தாக்கரே வட இந்திய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களீருந்து மகாராட்டிராவில் உள்ள அதன் வணிகத் தலைநகரான மும்பையில் குடியேறியவர்களுக்கு எதிராக வன்முறை இயக்கத்தை வழிநடத்தினார். மும்பை மற்றும் மகாராட்டிராவில் இவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தால், அவர்களை மாநகரை விட்டு வெளியேறச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சிவாஜி பூங்காவில் நடந்த பேரணியில் ராஜ் எச்சரித்தார். ராஜ் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மியுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். ஆனால் ₹15,000 (US$190) அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டார்.
ஆத்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவரது கட்சி, சிவசேனாவுடன் இணைந்து 2010 இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் மும்பையில் விளையாட தடை விதித்தனர். [4]
ஜூலை 2008 இல், மும்பையில் உள்ள கடைகளில் ஏற்கனவே உள்ள ஆங்கில விளம்பர பதாகைகளுக்கு கூடுதலாக மராத்தி விளம்பர பதாகைககள் இருக்க வேண்டும் என்று ராஜ் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, இவரது கட்சித் தொண்டர்கள் மராத்தி அல்லாத விளம்பர பதாகைகளை கருப்பாக்கத் தொடங்குவார்கள் என்று எச்சரித்தார். பெருநகரமும்பை மாநகராட்சியால் இதற்கு முன்பே சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அது அமல்படுத்தப்படவில்லை. [5] செப்டம்பர் 2008 இல், சேனாவின் தொண்டர்கள் கடைகளைத் தாக்கி, பலகைகளை கருப்பாக்கினர். அதன் பிறகு பெரும்பாலான கடை உரிமையாளர்கள் மராத்தியில் விளம்பர பதாகைகளை வைத்தனர். இந்தப் போராட்டத்தில் கட்சித் தொண்டர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். [6]
நடிகையும் சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினருமான செய பாதுரி பச்சன், துரோணா என்ற இந்தித் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ' நாங்கள் உத்தரபிரதேச மக்கள், எனவே இந்தியில் பேசுவோம். மகாராட்டிரா மக்களே, மன்னிக்கவும்' என்றார். [7] மகாராட்டிரர்களை புண்படுத்தியதற்காக பொது மன்றத்தில் ஜெயா மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது கணவர் அமிதாப் பச்சன் படங்களையும் தடை செய்வதாக இவர் மிரட்டினார். மகாராட்டிரா நவநிர்மாண் சேனாவின் தொண்டர்கள் அமிதாப் பச்சன் நடித்த திரைப்படங்கள் இடம்பெறும் திரையரங்குகளைத் தாக்கத் தொடங்கினர். அமிதாப் மன்னிப்பு கேட்ட பிறகுதான் திரையிடல் மீண்டும் தொடங்கியது. [8] ராஜின் மிரட்டலைத் தொடர்ந்து, மகாராட்டிரா காவல்துறை ராஜுக்கு எதிராகச் செயல்பட்டது. ஊடகங்களிடம் பேசுவதைத் தடுக்கும் ஒரு ஆணையையும் பிறப்பித்தது. [9]
அக்டோபர் 2008 இல், ஜெட் ஏர்வேஸ் 800 தற்காலிக பணியாளர்களை பணிநீக்கம் செய்து மேலும் 1100 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் மராத்தி மற்றும் வட இந்தியர்களும் அடங்குவர். தாக்கரே இப்பிரச்சினையில் தலையிட்டார். இதைத் தொடர்ந்து, இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் நிறுவனத்திற்கு பாதுகாப்பு வைப்புத்தொகையைச் செலுத்தியுள்ளதாகவும், அவர்களது வழக்கை வாதிடுவதற்காக ஜெட் நிர்வாகத்தை சந்திப்பதாகவும் ராஜ் தாக்கரே அறிவித்தார். ஜெட் ஏர்வேஸ் ஆட்குறைப்புகளை ரத்து செய்யாவிட்டால், மகாராட்டிராவில் உள்ள எந்த விமான நிலையத்திலிருந்தும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை இயக்க தனது கட்சி அனுமதிக்காது என்றார். ராஜ் தாக்கரே அறிவித்த 12 மணி நேரத்திற்குள், ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்தார்.
ராஜ் தாக்கரே மற்றும் இவரது கட்சியான மகாராட்டிரா நவநிர்மாண் சேனா, மராத்தி அரசியல்வாதிகளின் செல்வாக்கால் மகாராட்டிரா மாநிலம், மராத்தி மொழி மற்றும் மராத்தியர் ஆகியவை அடிபணிந்துவிட்டதாகக் கூறுகின்றனர். [10] உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மகாராட்டிராவிற்கு குடிபெயர்வதை இவர் எதிர்த்தார். [11]
கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் சார்க்கண்டு ஆகிய மாநிலங்களில் பிரபலமான சத் பூசையை அரசியலாக்கியதற்காக வட இந்தியத் தலைவர்களை ராஜ் கண்டித்துள்ளார். சத் பூஜை என்பது வட இந்திய வாக்குகளை கவர சில கட்சிகளின் அரசியல் வித்தை என்று இவர் கூறினார். [12] இவரது கருத்துக்கு எதிராக பிப்ரவரி 8 ஆம் தேதி பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. [13] இவரது அறிக்கைகள் அரசியல் தலைவர்களால், குறிப்பாக வட இந்திய மாநிலங்களிலிருந்து விமர்சிக்கப்பட்டது. [12] இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமான மகாராட்டிராவில் வேலை தேடுவதற்காக புலம்பெயர்ந்தோர் அதிகளவில் வருவதாக இவர் குற்றம் சாட்டினார். [14] . [15]
தாக்கரேவும் இவரது கட்சியினரும் தங்கள் போராட்டங்களின் போது வன்முறையைப் பயன்படுத்தியதற்காக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து குடியேறியவர்களை நோக்கி. வன்முறையைப் பயன்படுத்துவது குறித்து தாக்கரே கூறுகையில், இந்திய அரசியலில் நடக்கும் அனைத்து போராட்டங்களிலும் வன்முறை ஒரு பகுதியாகும். மேலும் பிற கட்சிகள் மற்றும் அமைப்புகளாலும் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார். இவரைப் பொறுத்தவரை, இவரது கட்சி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் வட இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களால் தேவையற்ற முறையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என நினைக்கிறார். [11]
தாக்கரே ஆரம்பத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியின் ஆட்சிக்காகவும், அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் குசராத்தின் வளர்ச்சிக்காகவும் பாராட்டினார். [16] 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். [17] பின்னாளில், மோடிக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்த இவர், அன்றிலிருந்து அவரையும் அவரது அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 2019 மக்களவைத் தேர்தலில், மகாராட்டிரா நவநிர்மாண் சேனா, எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக தாக்கரே கட்சி ஆதரவாளர்களை தேசியவாத காங்கிரசு கட்சி - காங்கிரசு கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார். தாக்கரே இந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். [18]
இவரது கட்சி, இசையமைப்பாளர் அட்னான் சாமிக்கு அசல் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறி, இந்திய அரசு பத்மசிறீ விருதை வழங்கியதை விமர்சித்தது.[19] மேலும், தாக்கரே மசூதியில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். [20]
தாக்கரே மராத்தி சினிமா புகைப்படக் கலைஞரும், தயாரிப்பாளரும் இயக்குனருமான மோகன் வாக்கின் மகள் சர்மிளா என்பவரை மணந்தார். இவர்கள் மும்பையில் டிசம்பர் 11, 1990 அன்று திருமணம் செய்து கொண்டனர். [21] இவர்களுக்கு அமித் தாக்கரே என்ற மகனும் ஊர்வசி தாக்கரே என்ற மகளும் உள்ளனர். [22] [23] [24]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.