From Wikipedia, the free encyclopedia
தீபகற்ப மலேசியாவில் மாவட்டம் என்பது மாநிலத்தின் ஒரு துணைநிலைப் பிரிவாகும். மாநிலத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு நிருவாக அலகைக் குறிக்கும்.
மாவட்டம் District Jajahan (கிளாந்தான்) பிரிவு (சபா / சரவாக்) | |
---|---|
வகை | இரண்டாம் நிலை நிர்வாகப் பிரிவு |
அமைவிடம் | மலேசியா |
எண்ணிக்கை | 162 87 - 3 மாந்கரங்கள் (தீபகற்ப மலேசியா) 28 (சபா) 43 (சரவாக்) 1 மாநகரம் (லபுவான்) (as of 2020) |
மக்கள்தொகை | மிகப்பெரியது: பெட்டாலிங் மாவட்டம் சிலாங்கூர் — 1,812,633 (2010) சிறியது: பெக்கான் மாவட்டம், பகாங்—15,480 (2010)[1] |
பரப்புகள் | மிகப்பெரியது: காப்பிட் பிரிவு, சரவாக்—38,934 km2 (15,033 sq mi) சிறியது: புத்தாத்தான் மாவட்டம், சபா—29.7 km2 (11.5 sq mi) |
அரசு | மாநகர் மன்றம், மாநகர் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்ட மன்றம் லபுவான் & புத்ராஜெயா) நகர சபை (கூடாட், சபா) மேம்பாட்டு நிர்வாகம் பிந்துலு, சரவாக்) |
உட்பிரிவுகள் | முக்கிம் மாவட்டம் - Daerah - District (கிளாந்தான், சபா & சரவாக்) |
மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[2] ஆங்கிலம்: (District), மலாய் மொழியில் (Daerah) என்று அழைக்கப் படுகின்றது. கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் சாஜகான் (Jajahan) என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு மலேசியாவில் ஒரு பெரிய மாவட்டத்தை பிரிவு அல்லது கோட்டம் (Division, டிவிசன்) என்று அழைக்கிறார்கள். அந்தக் கோட்டத்தின் கீழ் பல சிறுமாவட்டங்கள் வருகின்றன.[3] ஒரு மாநிலத்தைக் கோட்டங்களாகப் பிரித்து, அந்தக் கோட்டங்களை மாவட்டங்களாகப் பிரித்துள்ளார்கள்.
ஒரு மாவட்டம் என்பது ஒரு கோட்டத்தில் ஒரு துணைக் கோட்டமாகும்.[4] சபா மாநிலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. அந்த ஐந்து கோட்டங்களையும் 25 மாவட்டங்களாகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.[5]
சரவாக் மாநிலத்தில் 11 கோட்டங்கள் உள்ளன. அவற்றை 29 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[6]
மலேசியாவில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.