பெக்கான் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பெக்கான் மாவட்டம் (ஆங்கிலம்: Pekan District; மலாய்: Daerah Pekan; சீனம்: 北根縣; ஜாவி: ڤکن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் பெக்கான்.
பெக்கான் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°30′N 103°25′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | பெக்கான் |
தொகுதி | பெக்கான் |
உள்ளூராட்சி | பெக்கான் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,846.14 km2 (1,485.00 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,21,158 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 26xxx |
தொலைபேசி | +6-09 |
போக்குவரத்து எண் | C |
இந்த மாவட்டத்தின் வடக்கில் குவாந்தான் மாவட்டம், கிழக்கில் தென் சீனக் கடல், மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் தெற்கில் ரொம்பின் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களும்,[1] இப்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக்[2] அவர்களும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் தந்தையார்தான் துன் அப்துல் ரசாக்.
பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா. இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர்.
மாரான் மாவட்டத்தில் 11 முக்கிம்கள் உள்ளன:[3]
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P85 | பெக்கான் மக்களவைத் தொகுதி | முகமது புசி அலி (Mohmed Puzi Ali) | பாரிசான் (அம்னோ) |
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P85 | பெக்கான் | நஜீப் துன் ரசாக் | தேசிய முன்னணி |
பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P85 | N20 | புலாவ் மானிஸ் | கைருடின் முகமட் | தேசிய முன்னணி |
P85 | N21 | பெராமு ஜெயா | இப்ராஹிம் அகமட் முகமட் | தேசிய முன்னணி |
P85 | N22 | பேபார் | இஷாக் முகமட் | தேசிய முன்னணி |
P85 | N23 | சினி | அபு பாக்கார் ஹருண் | தேசிய முன்னணி |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1991 | 86,179 | — |
2000 | 97,751 | +13.4% |
2010 | 1,05,587 | +8.0% |
2020 | 1,21,158 | +14.7% |
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
பூமிபுத்ரா | 101,953 | 96.9% |
சீனர் | 1,373 | 1.3% |
இந்தியர் | 392 | 0.4% |
மற்றவர் | 1,500 | 1.4% |
மொத்தம் | 105,218 | 100% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.