From Wikipedia, the free encyclopedia
பெக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pekan; ஆங்கிலம்: Pekan Federal Constituency; சீனம்: 北根国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெக்கான் மாவட்டம் (Pekan District); குவாந்தான் மாவட்டம் (Kuantan District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P085) ஆகும்.[5]
பெக்கான் (P085) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Pekan (P085) Federal Constituency in Pahang | |
பெக்கான் மக்களவைத் தொகுதி (P085 Pekan) | |
மாவட்டம் | பெக்கான் மாவட்டம்; குவாந்தான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 119,443 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெக்கான் |
முக்கிய நகரங்கள் | குவாந்தான், பெக்கான் |
பரப்பளவு | 3,846 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | செயிக் முகமது புசி செயிக் அலி (Sheikh Mohmed Puzi bin Sheikh Ali) |
மக்கள் தொகை | 161,106 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெக்கான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பெக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெக்கான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் பெக்கான். இந்த மாவட்டத்தின் வடக்கில் குவாந்தான் மாவட்டம், கிழக்கில் தென் சீனக் கடல், மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் தெற்கில் ரொம்பின் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா. இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா (இந்திரபுரம்) என்று அழைத்தனர். பெக்கான் நகரத்தின் அசல் பெயர் பூங்கா பெக்கான் (Bunga Pekan). பூங்கா பெக்கான் எனும் மலரின் பெயரில் இருந்து வந்தது. இங்கு பகாங் சுல்தானின் அரண்மனையும், அரச பள்ளிவாசலும் உள்ளன.
பெக்கான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் பாயா பெசார் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P062 | 1959–1963 | அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak Hussein) | மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P062 | 1963–1964 | அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak Hussein) | மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
3-ஆவது மக்களவை | 1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8] | ||
3-ஆவது மக்களவை | P062 | 1971–1973 | அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak Hussein) | மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P071 | 1974–1976 | ||
1976–1978 | நஜீப் ரசாக் (Najib Razak) | |||
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | முகமது அமீன் தாவூது (Mohamed Amin Daud) | ||
7-ஆவது மக்களவை | P077 | 1986–1990 | நஜீப் ரசாக் (Najib Razak) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P080 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P085 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | செயிக் முகமது புசி செயிக் அலி (Sheikh Mohmed Puzi bin Sheikh Ali) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
செயிக் முகமது புசி செயிக் அலி (Sheikh Mohmed Puzi bin Sheikh Ali) | பாரிசான் நேசனல் | 47,418 | 50.96 | 11.14 ▼ | |
முகமது பட்சில் நூர் அப்துல் கரீம் (Mohd Fadhil Noor Abdul Karim) | பெரிக்காத்தான் நேசனல் | 38,469 | 41.35 | 41.35 | |
முகமது நாயிம் சைனல் அபிதீன் (Mohd Naim Zainal Abidin) | பாக்காத்தான் அரப்பான் | 6,316 | 6.79 | 4.06 ▼ | |
முகமது ரட்சி அப்துல் ரசாக் (Mohammad Radhi Abdul Razak) | தாயக இயக்கம் | 472 | 0.51 | 0.51 | |
தெங்கு சைனல் இசாம் தெங்கு உசேன் (Tengku Zainul Hisham Tengku Hussin) | சுயேச்சை | 366 | 0.39 | 0.39 | |
மொத்தம் | 93,041 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 93,041 | 98.33 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,577 | 1.67 | |||
மொத்த வாக்குகள் | 94,618 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 94,618 | 3.44 ▼ | |||
Majority | 8,949 | 9.61 | 25.59 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.