குவா மூசாங் மாவட்டம்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
குவா மூசாங் (மலாய் மொழி: Jajahan Gua Musang; ஆங்கிலம்: Gua Musang District; சீனம்: 话望生县; ஜாவி: ڬوا موسڠ; கிளாந்தான் மலாய்: Guo Musae) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்; ஒரு மாவட்டம்; ஒரு நாடாளுமன்றத் தொகுதி; கிளாந்தானின் மிகப்பெரிய மாவட்டமாகும்.
குவா மூசாங் மாவட்டம் | |
---|---|
Gua Musang District | |
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 4°53′N 101°58′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | குவா மூசாங் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,979.77 km2 (3,081.01 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 90,057 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 18300 |
தொலைபேசி எண்கள் | +6-09 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
குவா மூசாங்; குவா மூசாங் மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது. குவா மூசாங் மாவட்டத்தின் தெற்கே பகாங் மாநிலம்; கிழக்கே திராங்கானு மாநிலம்; மேற்கே பேராக் மாநிலம்; வடக்கே கோலா கிராய் மாவட்டம்; ஜெலி மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[2]
மாநிலத் தலைநகர் கோத்தா பாருவிற்கு தெற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஒரு சிறிய இரயில் நகரமும் உள்ளது. தும்பாட் நகரில் இருந்து கிம்மாஸ் நகரம் வரையில் இணைக்கிறது.
லோஜிங் தன்னாட்சி துணை மாவட்டம் (Jajahan Kecil Lojing) குவா மூசாங் தொகுதியின் மேற்குப் பகுதியில் உள்ளது.
குவா மூசாங் என்றால் மரநாய்க் குகை (Civet Cat Cave) என்று பொருள். இந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் குவா மூசாங் குன்று எனும் ஒரு கற்பாறை குன்று உள்ளது. அதன் உயரம் 105 மீட்டர். அதன் உட்புறத்தில் ஒரு பெரிய குகை உள்ளது.
இந்தக் குன்றுக்கும் குவா மூசாங் நகருக்கும் இடையில் இரயில் பாதை உள்ளது. இந்தக் குகையில் நிறைய மர நாய்கள் இருந்ததால், அருகில் இருந்த நகரத்திற்கும் அந்தப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
1948-ஆம் ஆண்டில், குவா மூசாங் கம்யூனிஸ்டுகளால் ஆட்சி செய்யப்பட்டது. கம்யூனிஸ்டுகளுக்கும் அரச மலாய் படைப் பிரிவுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று உள்ளன. பலர் கொல்லப்பட்டனர். இன்று வரை குவா மூசாங் வரலாற்றில் அந்த நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாக உள்ளது.[3]
2010-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி குவா மூசாங் மக்கள்தொகை 90,057. பெரும்பான்மை கிளாந்தான் மலாய் மக்கள் 76%. சகாய்; தெமியார்; மென்ரிக்; பாத்தேக் பூர்வீகக் குடியினர் 13%. மலேசிய சீனர்கள் 5%. மலேசியர்கள் அல்லாதவர்கள் 5%. மலேசிய இந்தியர் 1%.
இடம் | மாவட்டம்/முக்கிம் | மக்கள் தொகை 2000 |
---|---|---|
1 | காலாஸ் | 31,814 |
2 | சிக்கு | 26,251 |
3 | பெர்த்தாம் | 16,923 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.