தும்பாட் மாவட்டம்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
தும்பாட் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Tumpat; கிளாந்தான் மலாய் மொழி: Ttupak; ஆங்கிலம்: Tumpat District; தாய் மொழி: ตุมปัต; சீனம்: 道北县; ஜாவி: تومڤت ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாவட்டம்.
தும்பாட் மாவட்டம் Tumpat District Jajahan Tumpat | |
---|---|
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 6°10′N 102°10′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | தும்பாட் மாவட்டம் |
தொகுதி | தும்பாட் |
உள்ளூராட்சி | தும்பாட் நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | நோர்சமான் அப்துல் கனி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 169.5 km2 (65.4 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,52,168 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 16xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
தும்பாட் நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line (Malaysia) இறுதி முனையில் அமைந்துள்ளது. இந்த மலேசியக் கிழக்கு கடற்கரைதொடருந்துச் சேவை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் நகரில் தொடங்குகிறது.
தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் கோலோக் ஆறு; கிழக்கில் கிளாந்தான் ஆறு; தெற்கில் பாசீர் மாஸ், கோத்தா பாரு; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District) ஆகியவை உள்ளன.
2022-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மாவட்டத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய 183,100. பெரும்பான்மையான மக்கள் மலேசிய மலாயர் ஆவர். குறிப்பிடத்தக்க அளவில் மலேசிய சயாமியர் (Malaysian Siamese); மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய சீனர் வாழ்கின்றனர்.
Rank | மாவட்டம்/முக்கிம் | மக்கள் தொகை 2000 |
---|---|---|
1 | வக்காப் பாரு | 29,902 |
2 | பெங்காலான் கூபோர் | 20,642 |
3 | தும்பாட் | 19,896 |
4 | சுங்கை பினாங்கு | 16,622 |
5 | தெர்பாக் | 16,096 |
6 | கெபக்காட் | 14,663 |
7 | ஜாலான் பெசார் | 12,595 |
8 | பாலேக்பாங் | |
9 | கெலாபோரான் | |
10 | கம்போங் லாவுட் | |
11 | கோக் கெலி | |
12 | பெராங்கான் | |
13 | புனோகான் | |
14 | கெத்திங் | |
15 | மோராக் | |
16 | பாசீர் பெக்கான் | |
தும்பாட் நகரம், தாய்லாந்து நாட்டிற்கு மிக அருகில் இருப்பதால் அந்த நாட்டின் தாக்கங்கள் அதிகமாக உள்ளன. அந்த வகையில் தும்பாட் மாவட்டத்தில் பல பௌத்த ஆலயங்கள் உள்ளன.
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 149,371 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) | 106,131 | 70.07% | ▼ - 9.92% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) | 9.92 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) | 281 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) | 1,233 | ||
பெரும்பான்மை (Majority) | 34,793 | 33.24% | + 13.03 |
வெற்றி பெற்ற கட்சி: | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [2] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
கிடைத்த வாக்குகள் |
% | ∆% |
---|---|---|---|---|---|---|
மும்தாஸ் நவி (Mumtaz Md. Nawi) |
மலேசிய இசுலாமிய கட்சி | 104,659 | 65,426 | 62.51% | + 9.36% | |
சே அப்துல்லா மாட் நவி (Che Abdullah Mat Nawi) |
பாரிசான் நேசனல் | - | 30,633 | 29.27% | - 29.27% ▼ | |
வான் அலமது ஜொகாரி (Wan Ahmad Johari Wan Omar) |
பாக்காத்தான் அரப்பான் | - | 7,762 | 7.42% | - 5.48 % ▼ | |
சே முகமது அசுவாரி (Che Mohamad Aswari Che Ali) |
பூமிபுத்ரா கட்சி | - | 593 | 0.57% | + 0.57% | |
கைருல் அசுவான் கமருதீன் (Khairul Azwan Kamarrudin) |
வாரிசான் | - | 245 | 0.23% | + 0.23% |
தும்பாட் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் மிதமான மழையும், மீதமுள்ள மாதங்களில் கனமழையும் பொழிகின்றது.
தட்பவெப்ப நிலைத் தகவல், தும்பாட் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.2 (84.6) |
30.0 (86) |
31.3 (88.3) |
32.3 (90.1) |
32.5 (90.5) |
32.2 (90) |
31.7 (89.1) |
31.6 (88.9) |
31.5 (88.7) |
30.6 (87.1) |
29.3 (84.7) |
28.6 (83.5) |
30.9 (87.62) |
தினசரி சராசரி °C (°F) | 26.0 (78.8) |
26.2 (79.2) |
27.1 (80.8) |
27.9 (82.2) |
28.2 (82.8) |
27.9 (82.2) |
27.4 (81.3) |
27.4 (81.3) |
27.4 (81.3) |
26.9 (80.4) |
26.2 (79.2) |
25.7 (78.3) |
27.03 (80.65) |
தாழ் சராசரி °C (°F) | 22.6 (72.7) |
22.5 (72.5) |
22.9 (73.2) |
23.6 (74.5) |
24.0 (75.2) |
23.7 (74.7) |
23.2 (73.8) |
23.3 (73.9) |
23.3 (73.9) |
23.3 (73.9) |
23.2 (73.8) |
22.9 (73.2) |
23.21 (73.78) |
மழைப்பொழிவுmm (inches) | 172 (6.77) |
68 (2.68) |
80 (3.15) |
79 (3.11) |
130 (5.12) |
137 (5.39) |
129 (5.08) |
128 (5.04) |
177 (6.97) |
238 (9.37) |
553 (21.77) |
530 (20.87) |
2,421 (95.31) |
ஆதாரம்: Climate-Data.org[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.