கோலோக் ஆறு
மலேசியா தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ஆறு From Wikipedia, the free encyclopedia
மலேசியா தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ஆறு From Wikipedia, the free encyclopedia
கோலோக் ஆறு என்பது (மலாய்: Sungai Golok; ஆங்கிலம்: Golok River; தாய்: แม่น้ำโก-ลก) என்பது மலேசியா மற்றும் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ஓர் ஆறு. இந்த ஆறு மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தையும்; தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டு உள்ளது.
கோலோக் ஆறு Golok River Maenam Kolok | |
---|---|
சுக்கிரின் மாவட்டத்தில் கோலோக் ஆற்று ஓரங்களில்... | |
பெயர்க்காரணம் | அகலக்கத்தி ஆறு |
அமைவு | |
நாடு | தாய்லாந்து / மலேசியா |
மாநிலங்கள் | கிளாந்தான் / நாரதிவாட் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | தித்திவாங்சா மலைத்தொடர் |
நீளம் | 103 km (64 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | தாய்லாந்து வளைகுடா |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாலங்கள் | மலேசிய-தாய் நட்பு பாலம் |
இந்த ஆற்றைக் கடப்பதற்கு ஒரே ஒரு பொதுவான பாலம் உள்ளது. அதன் பெயர் ரந்தாவ் பாஞ்சாங்-சுங்கை கோலோக் பாலம். இந்தப் பாலம் மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தையும்; தாய்லாந்து, நாராதிவாட் (Narathiwat) மாநிலத்தின் சுங்கை கோலோக் (Sungai Kolok) நகரத்தையும் இணைக்கின்றது.[1]
இந்தப் பாலத்தை அமைதிப் பாலம் (ஆங்கிலம்: Harmony Bridge; மலாய் மொழி: Jambatan Muhibah) என்றும் அழைக்கிறார்கள். ரந்தாவ் பாஞ்சாங் சுங்கவரி இல்லாத பகுதியாகும்.[2]
கோலோக் ஆறு தாய்லாந்து வளைகுடாவில் நாராதிவாட் மாநிலத்தின் தக் பாய் மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. பருவமழைக் காலத்தின் போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.[2] 2009 டிசம்பர் 21-ஆம் தேதி, வழக்கத்திற்கு மாறாக பெரிய வெள்ளம் ஏற்பட்டது, இதனால் கிளந்தான் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஆறு தாய்லாந்து சுக்கிரின் மாவட்டத்தின் தித்திவாங்சா மலைத்தொடரில் உருவாகின்றது. பின்னர் வாங் ஆறு; மற்றும் சுங்கை கோலோக் ஆறு வழியாக தக் பாய் மாவட்டத்தில் பாய்கிறது. இந்த ஆறு 103 கிலோமீட்டர் (64 மைல்) நீளம் கொண்டது.
இந்த ஆறு பாயும் பகுதிகளில் ஒன்றான சுக்கிரின் மாவட்டத்தில், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் ஒரு செழிப்பான தங்கச் சுரங்கம் இருந்தது. இன்று முன்பு போல் பரபரப்பாக இல்லாவிட்டாலும், சுக்கிரின் மக்களின் தங்கம் தேடுதல் தொழில் இன்னும் தொடர்கிறது.
உள்ளூர்ச் சுற்றுலாத் துறை சுக்கிரின் மக்களின் கூடுதல் வருமானத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. பழைய தங்கச் சுரங்கங்களின் அனுபவங்களைச் சுற்றுலாவிற்கு வருபவர்களிடம் பகிர்ந்து கொண்டு வருமானம் தேடிக் கொள்கின்றனர்.[3]
சுக்கிரின் மாவட்டத்தில் கோலோக் ஆற்று ஓரங்களில் தங்க மண் தேடுவது, இன்றும் ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது. ஆற்று ஓரங்களில் காணப்படும் மணல் படுகைகளில் தங்கத் துகடுகள் ஆங்காங்கே காணப் படுகின்றன. அவற்றை அகன்ற பானைகளில் மூலமாக அலசி எடுத்து உள்ளூர் தங்கத் தரகர்களிடம் மலிவான விலையில் விற்கின்றனர்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.