தொங்கோட் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
தொங்கோட் மாவட்டம்; (மலாய்: Daerah Tongod; ஆங்கிலம்: Tongod District) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் (Sandakan Division) உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தொங்கோட் (Tongod Town) நகரம்.[1]
தொங்கோட் மாவட்டம் Tongod District Daerah Tongod | |
---|---|
ஆள்கூறுகள்: 5°15′36″N 116°59′07″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | சண்டக்கான் |
தலைநகரம் | தொங்கோட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,092 km2 (3,897 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 42,742 |
• அடர்த்தி | 4.2/km2 (11/sq mi) |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | SU SS (1980-2018) SM (2018-) SK SA (1980-2018) SY (2018-2023) SJ (2023-) ST (1980-2018) SW (2018-) |
இணையதளம் | https://pdtongod.sabah.gov.my/index.php |
சபா மாநிலத்தில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் இந்தத் தொங்கோட் மாவட்டம், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1747 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து தெற்கே, ஏறக்குறைய 254 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
இந்த மாவட்டம் முதன்முதலில் 1977-ஆம் ஆண்டு கினபாத்தாங்கான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக (Daerah Kecil) நிறுவப்பட்டது. நிர்வாகப் பொறுப்புகள் கெனிங்காவ் மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் அன்டாவ் (Charles Andau) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவர் உதவி மாவட்ட அதிகாரியாகவும், கினபாத்தாங்கான் மாவட்டத்தின் மாவட்ட அதிகாரிக்கு துணை அதிகாரியாகவும் இருந்தார். 1 மார்ச் 1999-இல், தொங்கோட் துணை மாவட்டம் ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப்பட்டது.
24 மே 1999-இல், ரானாவ் மாவட்டத்தை சேர்ந்த மேத்யூ சேட்டர் (Major Matthew Sator) என்பவர் முதல் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு செயலகக் கட்டடத்திற்குப் பதிலாக ஒரு புதிய நிர்வாகக் கட்டடம் கட்டப்பட்டது.
2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 35,341 ஆகும்.
தொங்கோட் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 10,052 சதுர கி.மீ. இது ஒரு குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். ஓராங் சுங்கை (Orang Sungai) மற்றும் கடசான்-டூசுன் (Kadazan-Dusun) ஆகிய இரு இனக்குழுக்கள் இந்த மாவட்டத்தில் முதன்மையான இனக்குழுக்களாக உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.