From Wikipedia, the free encyclopedia
மலேசிய மாநிலங்களை நெகிரி (மலாய்: Negeri) என்றும், கூட்டரசு நிலப்பகுதிகளை (மலாய்: Wilayah Persekutuan) என்றும் அழைக்கிறார்கள்.
மலேசியாவில் பதின்மூன்று மாநிலங்கள், மூன்று கூட்டரசு நிலப்பகுதிகள் உள்ளன. இவற்றுள் தீபகற்ப மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரு கூட்டரசு நிலப்பகுதிகளும் உள்ளன. இவை மேற்கு மலேசியா மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
போர்னியோ தீவில் இருக்கும் சரவாக், சபா மாநிலங்கள், லாபுவான் கூட்டரசு நிலப்பகுதியை, கிழக்கு மலேசியா என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகளை நடுவண் அரசும், மாநில அரசும் பகிந்து கொள்கின்றன. கூட்டரசு நிலப்பகுதிகளை நடுவண் அரசு நேரடியாக நிர்வாகம் செய்கிறது.[1][2]
மலேசியாவின் 13 மாநிலங்கள் வரலாற்று மலாய்ப் பேரரசுகளைச் சார்ந்தவையாகும். இவற்றுள் 9 மாநிலங்கள், மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய ஆளுநர் எனும் சுல்தான் முதன்மைத் தலைவராக இருக்கிறார். நிருவாகத் தலைவராக முதலமைச்சர் எனும் மந்திரி பெசார் இருக்கிறார்.
மலேசியாவின் அனைத்து 13 மாநிலங்களும் வரலாற்று மலாய்ப் பேரரசுகளைச் சார்ந்தவையாகும். இவற்றுள் 9 மாநிலங்கள், மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய ஆளுநர் எனும் சுல்தான் முதன்மைத் தலைவராக இருக்கிறார். நிருவாகத் தலைவராக முதலமைச்சர் எனும் மந்திரி பெசார் (மலாய்: Menteri Besar) இருக்கிறார்.
சொகூர், கெடா, கிளாந்தான், பகாங், பேராக், சிலாங்கூர், திரங்கானு ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்பவர்களைச் சுல்தான்கள் என்று அழைக்கிறார்கள். தேர்வு மூலம் தெரிவு செய்யப்படும் நெகிரி செம்பிலான் ஆளுநர் யாம் துவான் பெசார் (மலாய்: (Yamtuan Besar) என்று அழைக்கப்படுகிறார். பெருலிசு ஆளுநர் இராசா என்று அழைக்கப்படுகிறார்.
நடுவண் அரசின் மன்னரை மாட்சிமை தங்கிய பேரரசர் (மலாய்: (Yang di-Pertuan Agong) அல்லது யாங் டி பெர்துவான் அகோங் என்று அழைக்கப் படுகிறார். தமிழில் மாமன்னர் என்று அழைக்க வேண்டும்.[சான்று தேவை] மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள சுல்தான்கள், பெர்லிஸ் ராஜா; யாங் டி பெர்துவா நெகிரி; யாம் துவான் பெசார்களில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாமன்னராகத் தேர்வு செய்யப்படுகிறார்.[3] கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது 13 திசம்பர் 2017 மலெசியவின் 15-வது மாமன்னராக அரியனை ஏரினார்.
தீபகற்ப மலேசியாவில் இருக்கும் பினாங்கு, மலாக்கா மாநிலங்களும், கிழக்கு மலேசியாவில் இருக்கும் சபா, சரவாக் மாநிலங்களும், பிரித்தானியர்களின் தனிப்பட்ட காலனிகளாக இருந்தவை. ஆகவே, அவற்றின் ஆட்சி செய்யும் தலைவரை கவர்னர் (மலாய்: Yang di-Pertua Negeri) யாங் டி பெர்துவா நெகிரி என்று அழைக்கிறார்கள். அந்த மாநிலங்களின் முதலமைச்சர் மந்திரி பெசார் (மலாய்: Ketua Menteri) என்று அழைக்கப்படுகிறார்.
மாநிலக் கொடி | மாநிலம் | தலைநகரம் | மக்கள் தொகை 2010 | பரப்பளவு சதுர கி.மீ. | மக்கள் தொகை அடர்த்தி | வாகன அட்டை முன்எழுத்து | தொலைபேசி எண்கள் முன்குறியீடு | மாநிலப் பெயர் சுருக்கம் | ஐ.எசு.ஓ. ISO 3166-2 |
எப்.ஐ.பி.எசு. FIPS 10-4 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோலாலம்பூர் நடுவண் கூட்டரசு | கோலாலம்பூர் | 1,627,172 | 243 | 6696 | W / V | 03 | KUL | MY-14 | ||
லபுவான் நடுவண் கூட்டரசு | விக்டோரியா, லபுவான் | 85,272 | 91 | 937 | L | 087 | LBN | MY-15 | MY15 | |
புத்திராசெயா நடுவண் கூட்டரசு | புத்திராசெயா | 67,964 | 49 | 1387 | Putrajaya / F | 03 | PJY | MY-16 | ||
சொகூர் | சொகூர் பாரு | 3,233,434 | 19,210 | 168 | J | 07, 06 (மூவார் & தங்காக்) | JHR | MY-01 | MY01 | |
கெடா | அலோர் சிடார் | 1,890,098 | 9,500 | 199 | K | 04 | KDH | MY-02 | MY02 | |
கிளாந்தான் | கோத்தா பாரு | 1,459,994 | 15,099 | 97 | D | 09 | KTN | MY-03 | MY03 | |
மலாக்கா | மலாக்கா | 788,706 | 1,664 | 474 | M | 06 | MLK | MY-04 | MY04 | |
நெகிரி செம்பிலான் | சிரம்பான் | 997,071 | 6,686 | 149 | N | 06 | NSN | MY-05 | MY05 | |
பகாங் | குவாந்தான் | 1,443,365 | 36,137 | 40 | C | 09, 03 (கெந்திங் மலை), 05 (கேமரன் மலை) | PHG | MY-06 | MY06 | |
பேராக் | ஈப்போ | 2,258,428 | 21,035 | 107 | A | 05 | PRK | MY-08 | MY07 | |
பெருலிசு | கங்கார் | 227,025 | 821 | 277 | R | 04 | PLS | MY-09 | MY08 | |
பினாங்கு | சார்ச்சு டவுன் | 1,520,143 | 1,048 | 1451 | P | 04 | PNG | MY-07 | MY09 | |
சபா | கோத்தா கினபாலு | 3,120,040 | 73,631 | 42 | S | 087-089 | SBH | MY-12 | MY16 | |
சரவாக் | கூச்சிங் | 2,420,009 | 124,450 | 19 | Q | 081-086 | SRW | MY-13 | MY11 | |
சிலாங்கூர் | சா ஆலாம் | 5,411,324 | 8,104 | 668 | B | 03 | SGR | MY-10 | MY12 | |
திரங்கானு | கோலா திரங்கானு | 1,015,776 | 13,035 | 78 | T | 09 | TRG | MY-11 | MY13 |
Seamless Wikipedia browsing. On steroids.