பெர்லிஸ்
மலேசிய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
மலேசிய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
பெர்லிஸ் அல்லது பெர்லிஸ் இந்திரா காயாங்கான் (ஆங்கிலம்: Perlis Indera Kayangan; மலாய்: Perlis Indera Kayangan; சீனம்: 玻璃市英德拉卡央根; ஜாவி: ڤرليس ايندرا کايڠن); மலேசியாவின் மிகச் சிறிய மாநிலம். தீபகற்ப மலேசியாவின் ஆக வடப் பகுதியில் உள்ளது. தாய்லாந்தின் சாத்தூன் (Satun), சொங்காலா (Songkhla) மாநிலங்களுக்கு எல்லைப் பகுதியிலும் அமைந்து உள்ளது. அதன் தெற்கே கெடா மாநிலம் உள்ளது.
பெர்லிஸ் | |
---|---|
பெர்லிஸ் இந்திரா காயாங்கான் Perlis Indera Kayangan ڤرليس ايندرا کايڠن | |
பண்: அமேன் அமேன் யா ராபல்சாலில் Amin, Amin, ya Rabaljalil | |
ஆள்கூறுகள்: 6°30′N 100°15′E | |
தலைநகரம் | கங்கார் |
அரச நகரம் | ஆராவ் |
அரசு | |
• பெர்லிஸ் ராஜா | துவாங்கு சையட் சிராசுடின் (Tuanku Syed Sirajuddin) |
• மந்திரி பெசார் | முகமட் சுக்ரி ராம்லி (Mohd. Shukri Ramli) (பெரிக்காத்தான்-பாஸ்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 819 km2 (316 sq mi) |
உயர் புள்ளி | 553 m (1,814 ft) |
மக்கள்தொகை (2019) | |
• மொத்தம் | 2,54,400 |
• அடர்த்தி | 276.52/km2 (716.2/sq mi) |
மனித வளர்ச்சிச் சுட்டெண் | |
• HDI (2019) | 0.714 (medium) (மலேசிய மாநிலங்கள்) |
மலேசிய குறியீடு | 01xxx |
மலேசிய எண்கள் | 04 |
மலேசியப் பதிவெண்கள் | R |
கெடா தலைநகர் கோத்தா சேனா | 1653 |
சயாம் அயோத்தியா ஆட்சி | 1839 |
சயாம் மன்னராட்சி | 20 ஏப்ரல் 1843 |
மலாயா கூட்டமைப்பு | 1 பிப்ரவரி 1948 |
மலேசியா | 31 ஆகஸ்டு 1957 |
இணையதளம் | www |
பெர்லிஸ் மாநிலம் ( தாய் மொழி: ปะลิส), சயாமியர்களின் ஆட்சியில் இருந்த போது பாலிட் (Palit) என்று அழைக்கப் பட்டது. பெர்லிஸ் மாநிலத் தலைநகரத்தின் பெயர் கங்கார் (Kangar). அரச நகரம் ஆராவ் (Arau). மலேசியத் தாய்லாந்து எல்லையில் இருக்கும் இன்னொரு முக்கிய நகரம் பாடாங் பெசார் (Padang Besar).
பெர்லிஸ் மாநிலத்தின் முக்கியத் துறைமுகமாக கோலா பெர்லிஸ் (Kuala Perlis) விளங்குகிறது. இந்தத் துறைமுகப் பட்டினம் லங்காவி தீவுடன் பெர்லிஸ் மாநிலத்தை இணைக்கின்றது. மலேசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற பாம்புப் பண்ணை பெர்லிஸ் மாநிலத்தின் சுங்கை பத்து பகாட் (Sungai Batu Pahat) எனும் சிறுநகரில் அமைந்து உள்ளது.
பெர்லிஸ் மாநிலம் பல கால கட்டங்களில் சயாமியர்களின் ஆளுமையின் கீழ் இருந்து வந்துள்ளது. ஆனால், வரலாற்றின்படி அது கெடா மாநிலத்திற்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி ஆகும்.
கெடா சுல்தான்கள் பெர்லிஸ் மாநிலத்தைத் தங்களின் ஒரு பகுதியாகவே ஆட்சி செய்து வந்துள்ளனர். இருப்பினும் 1821-ஆம் ஆண்டு, கெடா மாநிலத்தை சயாமியர்கள் கைப்பற்றினர்.
சில ஆண்டுகள் கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் சயாமியர்களின் ஆட்சியின் கீழ், தனித்தனி மாநிலங்களாக இயங்கி வந்தன. 1842-ஆம் ஆண்டு, கெடா மாநிலம் மீண்டும் கெடா மாநில சுல்தானிடமே கொடுக்கப் பட்டது.
அதன் பின்னர், பெர்லிஸ் மாநிலம் கெடா மாநிலத்தின் ஒரு நிர்வாக மாநிலமாக மாறியது. 1909-ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
1942-இல் ஜப்பானியர்கள் படையெடுத்த போது பெர்லிஸ் மநிலம் மறுபடியும் சயாமியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் பெர்லிஸ் திரும்பவும் பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையில் பிரித்தானியர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
பெர்லிஸ் மாநிலத்தை சுமத்திராவின் ஆச்சே அரசு சில காலம் ஆண்டு வந்துள்ளது. 1821-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றியதும், மலாயாவில் இருந்த பிரித்தானியர்கள் கலக்கம் அடைந்தனர். அந்தச் சமயத்தில் பேராக், பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் இருந்தது.
சயாமியர்கள் எந்தக் கட்டத்திலும் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றலாம் என்று பிரித்தானியர்கள் அஞ்சினர். அதன் விளைவாக பர்னி அண்ட் லோ உடன்படிக்கை (Burney and Low Treaty) கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையில் கெடா, பெர்லிஸ், சயாம், பிரிட்டன் கையெழுத்திட்டன.
பர்னி அண்ட் லோ உடன்படிக்கையின்படி[2] நாடு கடத்தப்பட்ட கெடா சுல்தான் அகமட் தாஜுடின் (Ahmad Tajuddin) அரியணையில் அமர்த்தப்படவில்லை. அதனால், சுல்தான் அகமட் தாஜுடினும் அவருடைய ஆதரவாளர்களும் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தனர். 1830-இல் இருந்து 1842 வரை நடந்த அந்தப் போராட்டம் நீடித்தது. இறுதி வரையில் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. இதற்கு 'பெராங் மூசோ பிசிக்' (Perang Musuh Bisik) என்று பெயர்.
ஆனால், 1842-இல் சயாமியர்கள் விதித்த சில நிபந்தனையுடன் கூடிய கோரிக்கைகளைச் சுல்தான் அகமட் தாஜுடின் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் கெடா சுல்தானாக அரியணையில் அமர்த்தப் பட்டார். இந்தக் கட்டத்தில் பெர்லிஸ் மாநிலம், கெடா சுல்தானகத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. பெர்லிஸ் நேரடியாக பாங்காக் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
பின்னர் சாயிட் ஹுசேன் ஜமாலுலாயில் (Sayyid Hussain Jamalulail) என்பவர் பெர்லிஸ் சுல்தானாகப் பதவிக்கு வந்தார். இவர் அரபு நாட்டைச் சேர்ந்த ஹாட்ராமி அராப் சாயுட் (Hadhrami Arab Sayyid) [3] என்பவரின் தந்தைவழி பேரன் ஆவார். சுல்தான் எனும் அரசப் பதவி ராஜா என்று மாற்றம் அடைந்தது.
அதனால், பெர்லிஸ் சுல்தான் என்பவர் பெர்லிஸ் ராஜா என்றே இன்றும் அழைக்கப் படுகின்றனர். இவருடைய சந்ததியினர் தான் இன்றும் பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.
1909-ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ், கெடா மாநிலங்கள் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. அடுத்தக் கட்டமாக, பிரித்தானியர்கள் 'ரெசிடென்ட்' (Resident) எனும் ஆலோசகரை பெர்லிஸின் அரச நகரான ஆராவ் நகரில் நியமனம் செய்தனர். அவ்வாறு முதன் முதலில் நியமிக்கப்பட்ட ஆலோசகரின் பெயர் மீடோ புரோஸ்ட் (Meadow Frost).
1938-ஆம் ஆண்டு பெர்லிஸ் மாநில நிர்வாகக் கட்டடத்தையும் (Perlis State Secretariat Office) பிரித்தானியர்கள் கட்டினர்.[4]இரண்டாவது உலகப் போரின் போது பெர்லிஸ் சுல்தானகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, ஜப்பானின் நெருங்கிய தோழமை நாடாக சயாம் விளங்கியது. அந்த விசுவாசக் கடனுக்கு பெர்லிஸ் மாநிலம், சயாமுக்கு ஜப்பானியர்களால் அனபளிப்பாக வழங்கப் பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் மீண்டும் பெர்லிஸ் பிரித்தானியர்களின் கைகளுக்கே வந்து சேர்ந்தது.
பெர்லிஸ் 1957-இல் மலாயா கூட்டரசில் இணைந்து சுதந்திரம் அடைந்தது. 1963-இல் மலேசியாவில் ஒரு மாநிலம் ஆனது. 2000-ஆம் ஆண்டில் இருந்து துவாங்கு சையட் சிராஜுடின் என்பவர் பெர்லிஸ் மாநிலத்தின் பெர்லிஸ் ராஜாவாகப் பதவியில் இருந்து வருகிறார்.
இவர் 2001-ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரை மலேசியாவின் பேரரசராகவும் பதவி வகித்தார். அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய புதல்வர் துங்கு சையட் பைசுடின் புத்ரா (Tuanku Syed Faizuddin Putra) என்பவர் பெர்லிஸ் மாநில அரசராக நிர்வாகம் செய்தார். தற்சமயம் மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் (Malaysia University of Perlis) வேந்தராக அரியாசனம் செய்கின்றார்.[5]
தற்சமயம் (14.10.2022) பெர்லிஸ் மாநிலத்தின் மந்திரி பெசாராக முகமட் சுக்ரி ராம்லி (Mohd Shukri Ramli) என்பவர் இருக்கின்றார். இவர் ஆளும் கட்சியான பெரிக்காத்தான் கூட்டணியின் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
பெர்லிஸ் மாநிலத்தில் முக்கியமானது விவசாயம் தான்.[6] இங்கு நெல், கரும்பு, மூலிகைகள், பழ உற்பத்திகள் போன்றவை பிரதானமாக விளங்குகின்றன. தவிர, காட்டு மரங்களும் கட்டுப்பாட்டு முறையில் வெட்டப் படுகின்றன. பெர்லிஸ் மாநிலத்தில் அதிகமான தேக்கு மரங்கள் கிடைக்கின்றன. மீன் பிடித்தலுக்கு பெர்லிஸ் பெயர் போனது.
பெர்லிஸ் மீனவர்கள் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். அண்மைய காலங்களில் கோலா பெர்லிஸை இரு பெரிய துறைமுகமாக மாற்றுவதற்கு பெரும் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.
பெர்லிஸ் ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. இந்த மாநிலம் தாய்லாந்து நாட்டின் எல்லையுடன் ஒட்டி இருப்பதால், இங்கே தாய்லாந்து கலாசாரங்களைப் பரவலாகக் காண முடியும். தாய்லாந்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகிறவர்கள், பெர்லிஸ் மாநிலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அத்துடன், தாய்லாந்து நாட்டில தயாரிக்கப்பட்ட பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன. அதனால், வருடம் முழுமையும் சுற்றுப்பயணிகளை இங்கு காண முடியும்.
சுப்பிங் மலை அடிவாரத்தில் 22,000 ஹெக்டர் பரப்பளவில் ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது. சீனி தயாரிக்க இந்தத் தோட்டத்தில் உள்ள கரும்புகள் பயன்படுத்தப் படுகின்றன. கங்கார் நகரத்தில் இருந்து 23 கி.மீ தொலைவில் இந்த தோட்டம் அமைந்து இருக்கிறது.[7]
1987ஆம் ஆண்டு 77 மலேசியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட ஓர் அணைக்கட்டு.[8] இந்த அணைக்கட்டின் சுற்றிலும் இயற்கை கொஞ்சும் அழகிய குன்றுகள் உள்ளன. வார இறுதி நாட்களில் விடுமுறையைக் கழிக்க பலர் வருகின்றனர். பல சுற்றுலா மனைகளும் மிக மலிவான கட்டணத்தில் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் நீர், பெர்லிஸ் மாநில மக்களின் அன்றாடச் சேவைகளுக்குப் பயன் படுகிறது.
மலேசியாவில் மிகப் பெரிய பாம்புப் பண்ணை புக்கிட் பிந்தாங் வனக் காப்பகத்தில் இருக்கிறது. இந்த வனக் காப்பகம், சுங்கை பத்து பகாட் எனும் சிறுநகருக்கு அருகில் இருக்கிறது. மலேசியாவில் காணப்படும் 200 வகையான பாம்புகளும் இங்கே வளர்க்கப் படுகின்றன.[9]
இந்தப் பாம்புப் பண்ணையை மலேசிய மருத்துவ ஆய்வுக்கழகம் நடத்தி வருகின்றது. பாம்புகளில் இருந்து கிடைக்கும் விஷப் பொருட்கள், விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. பாம்புகளைத் தவிர முதலைகள், உடும்புகள், ஆமைகள், கீரிப்பிள்ளைகள் போன்ற ஊர்வனங்களும் இங்கே வளர்க்கப் படுகின்றன.[10]
ஹாருமானிஸ் என்பது மலேசியாவில் பெர்லிஸ் மாநிலத்தில் மட்டும் கிடைக்கும்[11] ஒரு வகையான மாம்பழம். மலேசியாவில் வேறு எங்கும் இந்தப் பழங்கள் கிடைக்கவில்லை.[12] மலேசிய மொழியில் ஹாரும் என்றால் மணம். மானிஸ் என்றால் இனிமை. வருடத்திற்கு ஒரு முறை தான் இந்தப் பழங்கள் கிடைக்கின்றன. இந்தப் பழங்களுக்கு அண்டை நாடான சிங்கப்பூரில் அதிகமான கிராக்கி.[13] இந்தப் பழங்கள் இந்தோனேசியாவிலும் ஏராளமாக விளைகின்றன.
கங்கார் நகரில் இருந்து 36 கி.மீ தொலைவில் இந்தக் குகை உள்ளது. முன்பு இங்கு இரும்பு எடுக்கப்பட்டது. இங்கு 370 மீட்டர் நீளமுள்ள ஒரு குகை உள்ளது. இதைப் பார்க்க சுற்றுப்பயணிகள் நிறைய பேர் வருகின்றனர். வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளையும் இந்தக் குகை கவர்ந்து வருகிறது.[14]
2010 ஆம் ஆண்டில் பெர்லிஸ் மாநிலத்தின் மக்கள் தொகை 227,025. இவர்களில்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.