போர்டிக்சன் மாவட்டம்
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
போர்டிக்சன் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Port Dickson; ஆங்கிலம்: Port Dickson District; சீனம்: 波德申縣) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். போர்டிக்சன் மாவட்டத்தின் முக்கிய நகரம் போர்டிக்சன் (Port Dickson) நகரம்.
போர்டிக்சன் மாவட்டம் Port Dickson District Daerah Port Dickson | |
---|---|
நெகிரி செம்பிலான் | |
போர்டிக்சன் மாவட்டம் உட்பிரிவுகள் | |
ஆள்கூறுகள்: 2°30′N 101°55′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
தொகுதி | போர்டிக்சன் மக்களவைத் தொகுதி |
உள்ளூராட்சி | போர்டிக்சன் உள்ளூராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | கைரி மாமோர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 572.35 km2 (220.99 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,10,617 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 71xxx |
தொலைபேசி எண்கள் | +6-06 |
வாகனப் பதிவெண்கள் | N |
இணையதளம் | போர்டிக்சன் நகராட்சி |
போர்டிக்சன் ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாக, மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இடமாகும். கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. உள்ளூர் மக்களால் பி.டி. (PD) என்று சுருக்கமாக அழைக்கப் படுகிறது.[2]
கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகள் மூலமாக எளிதில் அடையக் கூடியதாக இடத்தில் அமைந்து உள்ளது. 10 மைல் நீளத்திற்கு அமைதியான கடற்கரைகள் நீண்டுள்ளன. நெகிரி செம்பிலானில் ஒரே கடற்கரை மாவட்டம்.
மீனவர்கள் வசிக்கும் ஒரு சிறிய மலாய்க் கிராமமாகப் போர்டிக்சன், தன் வரலாற்றைத் தொடங்கியது. உள்ளூர் மலாய்க்காரர்கள் தஞ்சோங் என்று அழைத்தார்கள். எனினும் அங்கு வாழ்ந்த சீனர்களும், இந்தியர்களும் ஆராங் (Arang) என்று அழைத்தனர். அந்தப் பெயர் ஓர் உள்ளூர் நிலக்கரி சுரங்கத்தின் பெயராகும்.
1820-களில், போர்டிக்சன் நகரில் இருந்து 7 கி.மீ. வடக்கே உள்ள லுக்குட் எனும் நகரில் ஈயப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[3] அதுவே சீனர்களின் வருகைக்கு வழிவகுத்தது. 1840-ஆம் ஆண்டுகளில் போர்டிக்சன் பகுதியில் காபி, மிளகுத் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.
பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில், சர் பிரடெரிக் டிக்சன் (Sir Frederic Dickson) எனும் பிரித்தானிய அதிகாரி, ஈயம் கொண்டு செல்வதற்கான துறைமுகமாகப் போர்டிக்சனை மாற்றி அமைத்தார்.
போர்டிக்சன் உள்ளூராட்சி மன்றத்தால் போர்டிக்சன் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது. போர்டிக்சன் மாவட்டத்தில் 5 முக்கிம்கள் உள்ளன.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அமினுடின் அருண் (Aminuddin Harun) | பாக்காத்தான் அரப்பான் | 42,013 | 52.40 | 18.92 ▼ | |
பா. கமலநாதன் (P. Kamalanathan) | பாரிசான் நேசனல் | 18,412 | 22.96 | 7.23 ▼ | |
ரபி முசுதபா (Rafei Mustapha) | பெரிக்காத்தான் நேசனல் | 18,235 | 22.74 | 22.74 | |
அகமட் இடாம் அகமட் நசுரி (Ahmad Idham Ahmad Nazri) | தாயக இயக்கம் | 1,084 | 1.35 | 1.35 | |
அப்துல் ராணி குலுப் அப்துல்லா (Abdul Rani Kulup Abdullah) | சுயேச்சை | 441 | 0.55 | 0.55 | |
மொத்தம் | 80,185 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 80,185 | 98.46 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,251 | 1.54 | |||
மொத்த வாக்குகள் | 81,436 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,04,450 | 78.00 | 19.40 | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [5] |
மலேசிய மக்களவையில் போர்டிக்சன் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P132 | போர்டிக்சன் | அன்வார் இப்ராகிம் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் போர்டிக்சன் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P132 | N29 | சுவா | யெக் டியூ சிங் | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
P132 | N30 | லுக்குட் | சூ கென் குவா | பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க) |
P132 | N31 | பாகன் பினாங் | அயிருடின் அபு பக்கார் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P132 | N32 | லிங்கி | ரகுமான் ரெட்சா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P132 | N33 | ஸ்ரீ தஞ்சோங் | ரவி முனுசாமி | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
நெகிரி செம்பிலான்; போர்டிக்சன் மாவட்டத்தில் (Port Dickson District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,563 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இங்குள்ள சில தோட்டங்கள் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டவை. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[7]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD2034 | போர்டிக்சன் | SJK(T) Port Dickson[8][9] | போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி | 71000 | போர்டிக்சன் | 323 | 26 |
NBD2035 | போர்டிக்சன் (தாமான் உத்தாமா) | SJK(T) Ldg St Leonard[10] | செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி | 71010 | போர்டிக்சன் | 48 | 9 |
NBD2037 | லுக்குட் | SJK(T) Ladang Sendayan[11] | செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71010 | போர்டிக்சன் | 58 | 11 |
NBD2038 | சிருசா (SiRusa) |
SJK(T) Kem Askar Melayu[12] | இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி | 71050 | போர்டிக்சன் | 54 | 10 |
NBD2039 | செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் | SJK(T) Ladang Sengkang[13] | செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71250 | போர்டிக்சன் | 56 | 10 |
NBD2040 | சுங்காலா தோட்டம் | SJK(T) Ldg Sungala[14] | சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71050 | சிருசா | 37 | 10 |
NBD2041 | சுவா பெத்தோங் தோட்டம் | SJK(T) Ldg Sua Betong[15][16] | சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | போர்டிக்சன் | 29 | 8 |
NBD2042 | தானா மேரா தோட்டம் | SJK(T) Ladang Tanah Merah[17][18] | தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71010 | லுக்குட் | 93 | 13 |
NBD2043 | சாலாக் தோட்டம் | SJK(T) Ladang Atherton[19] | அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 21 | 8 |
NBD2044 | பிரட்வால் தோட்டம் | SJK(T) Ldg Bradwall[20] | பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 24 | 9 |
NBD2045 | ஸ்பிரிங் ஹில் | SJK(T) Bandar Spring Hill[21] | ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி | 71010 | லுக்குட் | 297 | 30 |
NBD2046 | லுக்குட் | SJK(T) Sungai Salak[22] | சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி | 71010 | லுக்குட் | 170 | 18 |
NBD2047 | சகா தோட்டம் | SJK(T) Ldg Sagga[23][24] | சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 80 | 10 |
NBD2048 | சிலியாவ் தோட்டம் | SJK(T) Ldg Siliau[25] | சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 40 | 11 |
NBD2049 | லின்சம் தோட்டம் | SJK(T) Ladang Linsum | லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 71 | 11 |
NBD2051 | தம்பின் லிங்கி தோட்டம் | SJK(T) Ladang Tampin Linggi[26] | தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 34 | 12 |
NBD2052 | புக்கிட் பிளாண்டோக் | SJK(T) Mukundan[27] | முகுந்தன் தமிழ்ப்பள்ளி | 71960 | போர்டிக்சன் | 128 | 14 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.