கெப்போங்
கோலாலம்பூர் கூட்டரசு மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூர் கூட்டரசு மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
கெப்போங், (மலாய்: Kepong; ஆங்கிலம்: Kepong; சீனம்: 甲洞); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி நிலப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம். ’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.
கெப்போங் Kepong | |
---|---|
ஆள்கூறுகள்: 3°12′51.2″N 101°38′20.1″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
கூட்டரசு நிலப்பகுதி | கோலாலம்பூர் கூட்டரசு மாநிலம் |
அரசு | |
• உள்ளூராட்சி | கோலாலம்பூர் மாநகர் கழகம் |
• மேயர் | முகமட் அமின் நோர்டின் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 52xxx, 51xxx |
தொலைபேசி எண் | +603-62 |
போக்குவரத்துப் பதிவெண் | B |
கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா (சிலாங்கூர்), கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர்.
கோலாலம்பூரின் கூட்டாட்சிப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கெப்போங் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம் லிப் எங் (Lim Lip Eng) ஆவார்.[3]
கெப்போங் பகுதியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன. முதலாவது KA06 கெப்போங் இரயில் நிலையம் (KTM KA06). இரண்டாவது KA07 கெப்போங் சென்ட்ரல் நிலையம் (KA07 Kepong Sentral).
எம்.ஆர்.டி. சுங்கை பூலோ செர்டாங் புத்ராஜெயா இரயில் பாதை (MRT Sungai Buloh Serdang Putrajaya Line) உருவாக்கப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் சேவை தொடங்கப் படுகிறது.[4]
ரேபிட் கேஎல் (RapidKL); எஸ்.ஜே. பேருந்து (SJ Bus); மற்றும் சிலாங்கூர் ஆம்னிபஸ் (Selangor Omnibus) ஆகியவை கெப்போங் பகுதியில் பேருந்து போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகின்றன.
எம்ஆர்டி. (Mass Rapid Transit) சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடத்தில் (MRT Sungai Buloh Serdang Putrajaya Line), கெப்போங் சென்ட்ரல் கொமுட்டர் நிலையம் அமைந்துள்ளது.
புத்ராஜெயா வழித்தடம் (MRT Putrajaya Line) அல்லது எம்.ஆர்.டி., (Mass Rapid Transit 2) முன்பு சுங்கை சுங்கை பூலோ - செர்டாங் - புத்ராஜெயா - இரயில் சேவை என அழைக்கப்பட்டது (Sungai Buloh–Serdang–Putrajaya Line (SSP Line). இது பன்னிரண்டாவது இரயில் போக்குவரத்துப் பாதையாகும்.
கோலாலம்பூரில் இது இரண்டாவது விரைவுப் போக்குவரத்து (Mass Rapid Transit) பாதை. கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், நான்காவது முழுத் தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத சேவை. இந்தச் சேவை கோலாலம்பூரில் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (Kuala Lumpur known as the Klang Valley Integrated Transit System) எனவும் அழைக்கப் படுகிறது.[5]
கோலாலம்பூர் கூட்டரசு பகுதியான கெப்போங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி. 364 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
WBD0184 | கெப்போங் | SJK(T) Ladang Edinburgh | எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 52100 | கோலாலம்பூர் | 364 | 27 |
சுங்கை பூலோ - செர்டாங் - புத்ராஜெயா - இரயில் சேவை, 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.