Remove ads
மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
டாமன்சாரா, (மலாய்: Damansara; ஆங்கிலம்: Damansara; சீனம்: 白沙罗); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் ஆகும். பெட்டாலிங் மாவட்டத்தில் 36 முக்கிம்கள் உள்ளன.
டாமன்சாரா Damansara | |
---|---|
ஆள்கூறுகள்: 3°3′7″N 101°33′29″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 478++ |
மலேசியத் தொலைபேசி எண் | +603-61x, +603-76x |
மலேசிய போக்குவரத்துப் பதிவெண் | B |
இருப்பினும் பெட்டாலிங் ஜெயா பெருநகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகவும் விளங்குகிறது. அருகில் ஓடும் டாமன்சாரா நதியின் (Sungai Damansara) பெயரால் இந்தப் புறநகர்ப் பகுதி அழைக்கப் படுகிறது.[1]
மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் டாமன்சாரா புறநகர்ப் பகுதியும் ஒன்றாகும்.
முன்பு காலத்தில் டாமன்சாரா என்பது எல்லை வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. காலப் போக்கில் மாறிவிட்டது. 1974-க்கு முன்னர், டாமன்சாரா என்பது ஒரு முக்கிம். கிள்ளான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக இருந்தது.
சிலாங்கூர் மாநிலத் தலைநகர் சா ஆலாம், சுபாங் ஜெயா, பண்டார் சன்வே, கிளானா ஜெயா, கோத்தா கெமுனிங், புத்ரா அயிட்ஸ் போன்ற பகுதிகள், முன்னர் காலத்தில் டாமன்சாரா துணை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த வகையில் சா ஆலாம், சுபாங் மற்றும் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதிகளுடன் டாமன்சாரா முக்கிம் தோராயமாக இணைந்துள்ளது.
இன்றைய நிலையில், டாமன்சாராவின் எல்லை வரையறை பெரிய அளவில் பரந்து விரிந்து உள்ளது. பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வடக்குப் புறநகர்ப் பகுதி; கெப்போங், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதிகள்; மற்றும் கிழக்கில் சிகாம்புட் புறநகர்ப் பகுதி; தெற்கில் கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி போன்ற பல புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.[2]
டாமன்சாரா முதலில் ஒரு சிறிய துறைமுகம் போன்ற குடியேற்றமாகத் தான் இருந்தது. கிள்ளான் ஆற்றின் குறுக்கே டாமன்சாரா ஆற்றின் முகப்புக்கு அருகில் அமைந்து இருந்தது.[3][4]
1870-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், கோம்பாக் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு சந்திப்பிற்கு அருகில் உள்ள கோலாலம்பூரின் மையப்பகுதி வரை நீராவிப் படகுகள் செல்ல முடியவில்லை. கிள்ளானில் இருந்து டாமன்சாரா வரை தான் செல்ல முடிந்தது.
அதனால், கிள்ளானில் இருந்து கோலாலம்பூர் வரை பயணிக்க பிரித்தானியர்கள் பயன்படுத்திய நீராவிப் படகுகளின் இறுதி இலக்காக டாமன்சாரா அமைந்து இருந்தது. அதாவது கிள்ளானில் இருந்து டாமன்சாரா வரை தான் நீராவிப் படகுகள் செல்ல முடிந்தது. அதற்குப் பிறகு பயணிகள், கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் வரை டாமன்சாரா காட்டுச் சாலை வழியாகப் போய் இருக்கிறார்கள்.
அப்போது இரயில் பாதைகளும் இல்லை. நான்கு சக்கர வாகனங்களும் இல்லை. மாட்டு வண்டிகள்; குதிரை வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சில சமயங்களில் கேவேறு கழுதை வண்டிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
டாமன்சாரா பகுதி பல நகரங்களுக்கு உறைவிடமாக உள்ளது. பெரும்பாலான உட்பிரிவுகள் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. பின்வரும் நகரங்களை உள்ளடக்கியது:
பெட்டாலிங் ஜெயாவின் "தங்க முக்கோணம்" என்று டாமன்சாரா அழைக்கப் படுகிறது. வணிக ரீதியில் சிறப்பாகச் செயல்படும் இடத்தில் அமைந்துள்ளது. தெஸ்கோ (Tesco), ஐ.பி.சி. வணிக மையம் (IPC Shopping Centre), ஒன் உத்தாமா (One Utama), தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய அய்கியா (IKEA) வணிக மையம் போன்றவை இங்கு உள்ளன.
சிலாங்கூர்; பெட்டாலிங் மாவட்டம்; டாமன்சாரா புறநகர்ப் பகுதியில் 9 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2274 மாணவர்கள் பயில்கிறார்கள். 191 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
டாமன்சாரா வட்டாரத்தின் பகுதிகள்:
சா ஆலாம் புறநகர்ப் பகுதி;
சுபாங் புறநகர்ப் பகுதி;
கோத்தா ராஜா புறநகர்ப் பகுதி;
பெட்டாலிங் ஜெயா வடக்குப் புறநகர்ப் பகுதி;
கெப்போங் புறநகர்ப் பகுதி;
சுங்கை பூலோ புறநகர்ப் பகுதி;
சிகாம்புட் புறநகர்ப் பகுதி;
கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD8452 | பண்டார் உத்தாமா | SJK(T) Ldg Effingham[5] | எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி | 47800 | பெட்டாலிங் ஜெயா | 305 | 28 |
BBD8459 | சா ஆலாம் | SJK(T) Hicom[6] | ஐகோம் தமிழ்ப்பள்ளி | 40000 | சா ஆலாம் | 140 | 15 |
BBD8461 | பத்து தீகா | SJK(T) Ladang Ebor[7][8] | ஈபோர் தோட்டத் தமிழ்பள்ளி | 40000 | சா ஆலாம் | 109 | 10 |
BBD8462 | கிளன்மேரி | SJK(T) Ldg Glenmarie[9] | கிளன்மேரி தமிழ்ப்பள்ளி | 40000 | சா ஆலாம் | 95 | 14 |
BBD8463 | சா ஆலாம் | SJK(T) Ladang Midlands[10][11] | மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 40000 | சா ஆலாம் | 146 | 17 |
BBD8466 | சுபாங் | SJK(T) Ldg Rasak Shah Alam[12] | இராசாக் தோட்டத் தமிழ்பள்ளி | 40160 | சா ஆலாம் | 103 | 12 |
BBD8468 | சா ஆலாம் | SJK(T) Sg Renggam[13] | சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி | 48000 | சா ஆலாம் | 735 | 56 |
BBD8469 | சுபாங் ஜெயா | SJK(T) Ldg Seafield[14] | சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி | 47630 | சுபாங் ஜெயா | 85 | 12 |
BBD8470 | சுபாங் ஜெயா | SJK(T) Tun Sambanthan[15] | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) | 47630 | சுபாங் ஜெயா | 556 | 37 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.