செரியான் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
செரியான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Serian; ஆங்கிலம்: Serian District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் செரியான் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம். செரியான் நகரம் இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்குகிறது.[1]
செரியான் மாவட்டம் | |
---|---|
Serian District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 1°10′0″N 110°34′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரியான் பிரிவு |
மாவட்டம் | செரியான் மாவட்டம் |
நிர்வாக மையம் | செரியான் நகரம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 89,078 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
செரியான் மாவட்டம், கூச்சிங் நகரில் இருந்து ஏறக்குறைய 64 கி.மீ. தொலைவில் உள்ளது. மக்கள் தொகையில் பிடாயூ மக்கள், இபான் மக்கள், மலாய்க்காரர்கள், ஆகிய மூன்று குழுவினரும் (90.1%) முன்னனி வகிக்கின்றனர். சீனர்கள் (9.3%); இந்தியர் (0.2%); மற்றும் இதர இனத்தவர் (0.3%); முக்கிய இனக்குழுக்கள் ஆகும்.[2][3]
செரியான் மாவட்டம் பிப்ரவரி 1955-இல் நிறுவப்பட்டது. இந்த மாவட்டம் இதற்கு முன்னர் சாடோங் மாவட்டத்தின் (Sadong District) ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு அப்போது ’மேல் சாடோங்’ (Upper Sadong) என்று பெயர். அதன்முதல் மாவட்ட அதிகாரி எச்.ஆர். ஆர்போ (H. R. Harbow).
செரியான் மாவட்டம் (Serian District) 1 ஆகஸ்டு 2015 முதல் செரியான் பிரிவில் (Serian Division) உள்ள மாவட்டங்களில் ஒன்றாக மாறியது. அதற்கு முன்பு, 1 சனவரி 1987-இல் சமரகான் பிரிவு (Samarahan Division) ஒரு பிரிவாக அறிவிக்கப் பட்டதும், செரியான் மாவட்டம் அந்தப் பிரிவின் மாவட்டங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது.
செரியான் மாவட்டம் அதன் டுரியான் பழங்களுக்கு பெயர் பெற்றது. செரியான் பகுதியில் கிடைக்கும் டுரியான் பழங்கள், சரவாக் மாநிலத்தில் சிறந்தவை என்று அறியப் படுகிறது.
"பழங்களின் ராஜா" (King of Fruits) என்று அழைக்கப்படும் டுரியான் பழங்களின் நினைவாக, செரியான் நகரச் சந்தை சதுக்கத்தின் நடுவில் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தைச் செரியான் மாவட்ட மன்றம் அமைத்து உள்ளது.
1990-ஆம் ஆண்டுகளில், செரியான் நகரத்தின் சில இடங்களில் புலிகளின் சிலைகள்; மற்றும் எருமைகளின் சிலைகள் போன்ற விலங்குகளின் சின்னங்கள் இருந்தன. செரியான் மாவட்டத்தின் காடுகளில் புலிகளும் எருமைகளும் குறைந்து போனதால், அவை அவற்றின் சிறப்புத் தன்மைகளை இழந்து விட்டன. அதற்கு மாறாக டுரியான் சின்னங்கள் வைக்கப் படுகின்றன்.
செரியான் நகரம் வளமான நிலப் பகுதியைக் கொண்டது. அதன் சாலை மற்றும் நீர் போக்குவரத்துகள் நன்கு இணைக்கப்பட்டு உள்ளன. காடுகளில் கிடைக்கும் அனைத்து வகையான காட்டுப் பொருட்களும் செரியான் நகரத்தில் கிடைக்கின்றன.
அண்மைய காலமாக, பெரும்பாலான விளைபொருட்கள் இந்தோனேசியா, கலிமந்தான் காடுகளில் இருந்து கொண்டு வரப் படுகின்றன. கலிமந்தான் காட்டுப் பொருட்களின் விலை குறைவாக உள்ளதாக அறியப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.