கெமாமான் மாவட்டம்
மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கெமாமான் மாவட்டம் (ஆங்கிலம்: Kemaman District; மலாய்: Daerah Kemaman; சீனம்: 甘马挽县; ஜாவி: كمامن) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
கெமாமான் மாவட்டம் | |
---|---|
Kemaman District | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°15′N 103°10′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | கெமாமான் |
தொகுதி | சுக்காய் |
உள்ளூராட்சி | கெமாமான் நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுசுமான் இப்ராகிம் (Jusman Bin Ibrahim)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,535.60 km2 (979.00 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,66,434 |
• மதிப்பீடு (2020)[3] | 2,15,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 24xxx |
தொலைபேசி | +6-09-8 |
போக்குவரத்து எண் | T |
கெமாமன் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது.
கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள் கிஜால், கெர்த்தே மற்றும் கெமாசிக். இந்த மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது. கிட்டத்தட்ட 1000 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. உலு திராங்கானு மாவட்டத்திற்கு அடுத்த நிலையில், இது மூன்றாவது பெரிய மாவட்டமாகும்.
கெமாமான் மாவட்டம் 12 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4] அவை:
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கெமாமான் நகராண்மைக் கழகத்தின் நிர்வாகப் பகுதியில் 167,824 குடியிருப்பாளர்கள் இருந்தனர்.
1940-ஆம் ஆண்டுகள் வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புகளில், கோலா திராங்கானு மற்றும் பெசுட் மாவட்டங்களுக்குப் பிறகு இந்தக் கெமாமான் மாவட்டம் தான் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாகும். 1970-களில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்கள்தொகை அமைப்பு மாற்றம் கண்டது.
Seamless Wikipedia browsing. On steroids.