அலோர் காஜா மாவட்டம்
மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
அலோர் காஜா மாவட்டம் என்பது (மலாய்:Daerah Alor Gajah; ஆங்கிலம்:Alor Gajah District; சீனம்:亚罗牙也县) மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கிழக்கில் ஜாசின் மாவட்டம்; தெற்கில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் அலோர் காஜா.
அலோர் காஜா மாவட்டம் | |
---|---|
Alor Gajah District | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°16′N 102°09′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | அலோர் காஜா |
தொகுதி | அலோர் காஜா நகரம் |
உள்ளூராட்சிகள் | அலோர் காஜா நகராட்சி (வடக்கு அலோர் காஜா) ஆங் துவா ஜெயா நகராட்சி (தென் கிழக்கு அலோர் காஜா) |
பரப்பளவு | |
• மொத்தம் | 660 km2 (250 sq mi) |
மக்கள்தொகை (2019[2]) | |
• மொத்தம் | 2,12,000[3] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 76100 - 78xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06-5 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | Majlis Perbandaran Alor Gajah அலோர் காஜா மாவட்டம் |
அலோர் காஜா என்பது மலாக்கா மாநிலத்தின் மக்களவைத் தொகுதியும் ஆகும். இந்த மாவட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; ரெம்பாவ் மாவட்டம்; மற்றும் போர்டிக்சன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.
அலோர் காஜா மாவட்டம் 31 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[4]
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அலோர் காஜா மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் (2023-ஆம் ஆண்டு மலாக்கா மாநிலப் பொதுத் தேர்தல் முடிவுகள்)
அலோர் காஜா மாவட்டப் பிரதிநிதிகள்
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P134 | மஸ்ஜித் தானா மக்களவை தொகுதி | மாஸ் எரிமாத்தி சம்சுடின் Mas Ermieyati Samsudin |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P135 | அலோர் காஜா மக்களவை தொகுதி | அட்லி சகாரி Mohd Redzuan Md Yusof |
பாக்காத்தான் (அமாணா) |
மலாக்கா மாநில சட்டமன்றத்தில் அலோர் காஜா மாவட்டப் பிரதிநிதிகள்; (2023-ஆம் ஆண்டு மலாக்கா மாநிலப் பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P134 | N1 | கோலா லிங்கி | ரோசுலி அப்துல்லா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N2 | தஞ்சோங் பிடாரா | அப்துல் ரவுப் யூசோ | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N3 | ஆயர் லீமாவ் | அமிட் பாசிரி | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N4 | லெண்டு | சுலைமான முகமட் அலி | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N5 | தாபோ நானிங் | சுல்கிப்லி சின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P135 | N6 | ரெம்பியா | முகமட் ஜெய்லானி காமிஸ் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P135 | N7 | காடேக் | சண்முகம் பிச்சை | பாரிசான் நேசனல் மஇகா |
P135 | N8 | மாச்சாப் ஜெயா | நிகுவே இ சான் | பாரிசான் நேசனல் (மசீச) |
P135 | N9 | டுரியான் துங்கல் | சகாரி காலில் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.