செத்தியா வங்சா

From Wikipedia, the free encyclopedia

செத்தியா வங்சாmap

செத்தியா வங்சா, (மலாய்: Setiawangsa; ஆங்கிலம்: Setiawangsa; சீனம்: 实达旺沙); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகர்ப் பகுதியாகும்.[1]

விரைவான உண்மைகள் செத்தியா வங்சாSetiawangsa, நாடு ...
செத்தியா வங்சா
Setiawangsa
புறநகர்
Thumb
செத்தியா வங்சா, 2023
Thumb
ஆள்கூறுகள்: 3°11′6.91″N 101°44′47.27″E
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
தொகுதிசெத்தியா வங்சா மக்களவைத் தொகுதி
அரசு
  நகராட்சிகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
54200
மலேசியத் தொலைபேசி எண்+603
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my
மூடு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் புறநகருக்கு அருகில் அம்பாங் புறநகரம் அமைந்துள்ளது. செத்தியா வங்சா புற நகர்ப் பகுதியில் 4 முக்கிய குடியிருப்புகள் உள்ளன.[2]

  1. தாமான் செத்தியா வங்சா - Taman Setiawangsa
  2. தியாரா செத்தியா வங்சா - Tiara Setiawangsa
  3. புக்கிட் செத்தியா வங்சா - Bukit Setiawangsa
  4. புஞ்சாக் செத்தியா வங்சா - Puncak Setiawangsa

பொது

தாமான் செத்தியா வங்சா (Taman Setiawangsa) மற்றும் தியாரா செத்தியா வங்சா (Tiara Setiawangsa) ஆகியவை செத்தியா வங்சா புறநகர்ப் பகுதியின் பரபரப்பான இஅடத்தில் அமைந்துள்ளன. புஞ்சாக் செத்தியா வங்சா (Puncak Setiawangsa) மற்றும் புக்கிட் செத்தியா வங்சா (Bukit Setiawangsa) ஆகியவை அமைதியான சூழலில் மலைகளின் மேல் அமைந்துள்ளன.[1]

ஐலண்ட் & பெனின்சுலர் (Island & Peninsular (I&P) Group Sdn Bhd) எனும் நிறுவனத்தால் இந்த தாமான் செத்தியா வங்சா குடியிருப்பு உருவாக்கப்பட்டது. 1980-களில் இந்தக் குடியிப்பின் அடிவாரத்திலும்; நடு மலைப் பகுதிகளிலும் கட்டுமானங்கள் தொடங்கப்பட்டன.[2]

டூத்தா - உலு கிள்ளான விரவுச்சாலை

முன்பு காலத்தில் இந்தப் பகுதிக்கு புக்கிட் டிண்டிங் (Bukit Dinding) என்று பெயர். கட்டுமானங்கள் முடிந்த பின்னர் புக்கிட் செத்தியா வங்சா என மறுபெயரிடப்பட்டது. ஆகக் கடைசியாக 1995-இல், புஞ்சாக் செத்தியா வங்சா கட்டுமானத்துடன் இந்த வீடைப்புத் திட்டம் நிறைவு அடைந்தது.

செத்தியா வங்சா புறநகர்ப் பகுதிக்கு மக்களின் குடியிருப்பு எண்ணிக்கை கூடியவாறு உள்ளது. டூத்தா-உலு கிள்ளான விரவுச்சாலை (Duta–Ulu Klang Expressway) (DUKE, E33 ) இந்தப் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்வதால், கோலாலம்பூர்; பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் இங்கு குடியேறுவதற்கு எளிதாகின்றது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

அத்துடன் டெக்சஸ் இன்சுட்ரூமென்ட்ஸ் (Texas Instruments), ஐ & பி, ரைட் பேலன்ஸ் குரூப் (Right Balance Group), பிடின் யுனிவர்சல் (Fidin Universal), தஞ்சோங் (Tanjung) மற்றும் ஆர்பி ஹெலிகாப்டர் (RB Helicopters) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டுத் தளங்களை இந்த செத்தியா வங்சாவில் கொண்டுள்ளன.[3]

இயற்கை பேரழிவுகள்

நிலச்சரிவு

2012 டிசம்பர் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புஞ்சாக் செத்தியா வங்சா குன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தக் குன்று 50 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டது. செத்தியா வங்சா குன்றின் சொகுசு மாளிகைகளில் இருந்த மூன்று குடும்பங்கள் இடம் பெயர்க்கப்பட்டனர்.[4]

புஞ்சாக் செத்தியா வங்சா குன்றின் தடுப்புச் சுவருக்கு அருகில் இருந்த 13 கடைகளையும் காலி செய்யுமாறு கட்டளையிடப் பட்டது.

தடுப்புச்சுவர் உடைப்பு

2022 பிப்ரவரி மாத வாக்கில், பலத்த மழைக்குப் பிறகு, தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் நில அரிப்புகளைத் தவிர்க்க கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) தடுப்புச் சுவர்களைச் சீரமைத்தது.[5]

மேற்கோள்கள்

மேலும் காண்க

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.