மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்கள் என்பது மார்வெல் காமிக்ஸ் வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஒரு அமெரிக்க மீநாயகன் திரைப்படங்களின் தொடர் ஆகும். மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்பது அனைத்து மார்வெல் மீநாயகன்களின் திரைப்படங்களியும் உள்ளடக்கிய திரைப் பிரபஞ்சம் ஆகும்.
மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல் | |
---|---|
தயாரிப்பு |
|
மூலக்கதை | மார்வெல் காமிக்ஸ் |
நடிப்பு | See below |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் கொலம்பியா பிக்சர்ஸ் (2017–தற்போது வரை) |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் (2008–2011) யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (2008) வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் (2012–தற்போது வரை) சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் (2017–தற்போது வரை) |
வெளியீடு | 2008–தற்போது வரை |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | மொத்தம் (26 திரைப்படங்கள் ): $5.023–5.132 பில்லியன் |
மொத்த வருவாய் | மொத்தம் (26 திரைப்படங்கள் ): $23.698 பில்லியன் |
இந்த மீநாயகன் திரைப்படங்கள் 2007 முதல் மார்வல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்நிறுவனம் 26 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மார்வல் நிறுவனம் இப்படங்களின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் $23.6 பில்லியன் ஆகும். இதன் மூலம் மார்வல் நிறுவனம் திரைப்படங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய திரைப்பட உரிமையாளர் நிறுவனமாகியது. 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.
எல்லா திரைப்படங்களையும் கேவின் பிகே என்பவர் தயாரித்துள்ளார். இவருடன் இணைத்து அவி ஆராட் என்பவர் அயன் மேன் (2008), ஹல்க் 2 (2009) போன்ற திரைப்படங்களையும் கலே அன்னே கார்டு என்பவர் ஹல்க் 2 (2009) என்ற திரைப்படத்தையும், அமி பாஸ்கல் என்பவர் இசுபைடர் மேன் திரைப்படங்களையும் இஸ்டீபன் புரூஸார்ட் என்பவர் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்கள். இந்த திருப்பப்படம் பலவகையான நபர்களால் எழுதப்பட்டு மற்றும் இயக்கப்படுகின்றனது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், மற்றும் ஜெரமி ரெனர் உள்ளிட்ட பல நடிகர்கள் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
மார்வெல் ஸ்டுடியோஸ் தனது படங்களை "கட்டங்கள்" என்று குழுக்களாக வெளியிட்டது. அந்த கட்டத்தின் முதல் படமாக அயன்-மேன் என்ற திரைப்படம் 2008 ஆம் ஆண்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் த இன்கிரிடிபுள் ஹல்க் என்ற திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் விநியோகித்தது. அதன் பிறகு வெளியான அயன் மேன் 2 (2010), தோர் (2011) மற்றும் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011) ஆகிய திரைப்படங்களைபாரமவுண்ட் பிக்சர்ஸ் விநியோகம் செய்தது. 2012 இல் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் மார்வெலின் அனைத்து மீநாயகன்களையும் கொண்ட படமான தி அவென்ஜர்ஸ்[1] என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் மார்வெல் திரைப்படத்தின் விநியோகத்தை தொடங்கியது. இப்படத்துடன் மார்வல் நிறுவனத்தின் முதல் கட்டத் திரைப்படங்கள் முடிவு பெற்றன.
இரண்டாம் கட்டத் திரைப்படங்களில் அயர்ன் மேன் 3 (2013), தோர்:த டார்க் வேர்ல்ட் (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர் (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) மற்றும் ஆன்ட்-மேன் (2015) ஆகியவை அடங்கும்.
2016 ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் என்ற படம் மூன்றாவது கட்டத்தின் முதல் படமாக வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), தோர்: தி ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), கேப்டன் மார்வல் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) ஆகியப் படங்கள் மார்வல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மார்வல் வெளியிட்ட முதல் 23 படங்கள் (அயர்ன் மேன் முதல் ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் வரை) ஒட்டுமொத்தமாக "தி இன்பினிட்டி சகா" என்று அழைக்கப்படுகின்றன.[2] ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை, அவை நிதியளிக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்படுகின்றன.[3]
இந்த நான்காம் கட்டம் வாண்டாவிஷன் என்ற தொடருடன் தொடங்கியது, இது சனவரி 2021 இல் டிஸ்னி+[4][5][6] என்ற ஓடிடி தளத்தில் திரையிடப்பட்டது, அதே நேரத்தில் இந்த கட்டத்தில் முதல் திரையரங்கப் படம் பிளாக் விடோவ் ஆகும், இது ஜூலை 2021 இல் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது.