![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Black_Panther_Logo_Black.svg/langta-640px-Black_Panther_Logo_Black.svg.png&w=640&q=50)
பிளாக் பான்தர்
From Wikipedia, the free encyclopedia
பிளாக் பான்தர் (ஆங்கில மொழி: Black Panther) என்பது 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான பிளாக் பாந்தர் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
பிளாக் பான்தர் | |
---|---|
![]() | |
இயக்கம் | ரையன் கூக்லர்[1] |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | |
திரைக்கதை | |
இசை | லுட்விக் கர்ரான்சன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரேச்சல் மோரிசன் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 29, 2018 (2018-01-29) (டால்பி திரையரங்கம்) பெப்ரவரி 16, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200 மில்லியன் |
மொத்த வருவாய் | $1.348 மில்லியன் |
இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினெட்டாவது திரைப்படம் ஆகும். கேவின் பிகே[4] என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ரையன் கூக்லர் என்பவர் இயக்க,[5] ரையன் கூக்லர் மற்றும் 'ஜோ ராபர்ட் கோல்'[6] ஆகியோர் கதை எழுதியுள்ளார்கள். இப்படத்தில் சட்விக் போஸ்மேன்,[7] மைக்கேல் பி. ஜோர்டான்,[8] லுபிடா நியாங்கோ, டானாய் குரைரா, மார்ட்டின் பிறீமன்,[9] தானியேல் கலுயா, லெட்டிடியா ரைட், வின்ஸ்டன் துயூக், அங்கெலா பாசெட், பாரஸ்ட் விடேக்கர், மற்றும் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிளாக் பாந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 29, 2018 அன்று ஒளிபரப்பப்பட்டது, பிப்ரவரி 16, 2018 இல் அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[10]இப்படம் விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்கள் இது மார்வலின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது. சிறந்த திரைப்படம் , சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவு உட்பட 91 வது அகாடமி விருதுகளில் ஏழு பரிந்துரைகள் கிடைத்தன. 'பிளாக் பாந்தர்' சிறந்த படம் என்று பரிந்துரைக்கப்பட்ட முதல் மீநாயகன் படம், அத்துடன் அகாதமி விருதை வென்ற முதல் மார்வல் படம் ஆகும். இத்திரைப்படம் 76 வது கோல்டன் குளோப் விருதுகளில் மூன்று பரிந்துரைகள், 25 வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் 24 வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளில் (மூன்று வெற்றி பெற்றது) பன்னிரண்டு பரிந்துரைகளும் பெற்றன.