சட்விக் போஸ்மேன்
அமெரிக்க நடிகர் / From Wikipedia, the free encyclopedia
சட்விக் ஆரோன் போஸ்மேன்[5] (Chadwick Aaron Boseman, நவம்பர் 29, 1977 - ஆகஸ்ட் 28, 2020) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2002 முதல் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தாலும், 2013 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான '42'[6] என்ற படத்தில் நடித்தபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ப்ரௌன் சுயசரிதை படமான 'கெட் ஆன் அப்'[7] மற்றும் 2017 ஆம் ஆண்டு 'மார்ஷலின்' போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சட்விக் போஸ்மேன் | |
---|---|
பிறப்பு | சட்விக் ஆரோன் போஸ்மேன் நவம்பர் 29, 1977[1][2][3] ஆண்டர்சன், தென் கரோலினா அமெரிக்கா |
இறப்பு | ஆகஸ்ட் 28, 2020 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா (43 வயது) |
இறப்பிற்கான காரணம் | பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹோவர்ட் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–2020[4] |
2016 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், பிளாக் பான்தர் (2018), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'பிளாக் பான்தர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[8]
இவர் 2016 ஆம் ஆண்டு பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் யால் பாதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து சிகிக்சை பலனின்றி ஆகஸ்ட் 28, 2020 தனது 43 வயதில் காலமானார்.[9]