கேப்டன் மார்வெல் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
கேப்டன் மார்வெல் (ஆங்கில மொழி: Captain Marvel) என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு பெண்[4] மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான கேரோல் டான்வெர்ஸ் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ்[5] என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
கேப்டன் மார்வெல் | |
---|---|
![]() | |
இயக்கம் | அன்னா போடன் மற்றும் ரியான் புளெக் |
தயாரிப்பு | கேவின் பிகே[1] |
மூலக்கதை | கேப்டன் மார்வெல் (ஸ்டான் லீ) கரோல் டான்வர்ஸ் (ராய் தாமஸ், ஜீன் கோலன்) |
திரைக்கதை |
கதை |
இசை | பினார் தொப்ராக் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பென் டேவிஸ் |
படத்தொகுப்பு | எலியட் கிரகாம் தெப்பி பெர்மன் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 27, 2019 (2019-02-27) (லண்டன்) மார்ச்சு 8, 2019 (அமெரிக்கா) |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $152–175 மில்லியன் |
மொத்த வருவாய் | $1.128 பில்லியன்[3] |
இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஒன்றாவது திரைப்படமும் ஆகும். இப்படம் கேவின் பிகே[6][7] என்பவர் தயாரிப்பில் அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[8] ஆகியோர் இயக்கத்தில் பிரி லார்சன், சாமுவேல் எல். ஜாக்சன், பென் மெண்டல்சோன், திஜிமோன் கவுன்சோ, லீ பேஸ், இலக்சனா இலிஞ்சு, ஜெம்மா சான், அன்னெட் பெனிங், கிளார்க் கிரெக் மற்றும் ஜூட் லோ ஆகியோர் நடிப்பில் உருவானது. 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த கதை டான்வர்ஸைப் பின்தொடர்கிறது, ஏனெனில் இவர் இரண்டு வெவ்வேறு சூழலில் வாழ்ந்து எப்படி கேப்டன் மார்வெல் என்ற மீநாயகனாக மறுக்கின்றார் என்பதை கூறுகின்றது.
இப் படம் லண்டனில் பெப்ரவரி 27, 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் ஐக்கிய அமெரிக்காவில் மார்ச்சு 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் $1.1 பில்லியனை வசூலித்தது. முதல் பெண் தலைமையிலான மீநாயகன் படம் என்ற பெருமையை பெற்றது. இது 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக[9] அமைந்தது. மற்றும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 23 வது படமாகும். இந்த திரைப்படத்தின் நடிகர்களின் நடிப்புக்காக, குறிப்பாக லார்சனின் நடிப்பு மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தி மார்வெல்ஸ் என்ற திரைபபடம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.