இலக்சனா இலிஞ்சு
From Wikipedia, the free encyclopedia
இலக்சனா ரஷேடா இலிஞ்சு[1] (ஆங்கில மொழி: Lashana Rasheda Lynch) (பிறப்பு: 27 நவம்பர் 1987)[2] என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 'இஸ்டில் இஸ்டார் கிராஸ்'[3][4][5] என்ற தொலைக்காட்சி தொடரில் ரோசலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார்.
விரைவான உண்மைகள் இலக்சனா இலிஞ்சு, பிறப்பு ...
இலக்சனா இலிஞ்சு | |
---|---|
பிறப்பு | இலக்சனா ரஷேடா இலிஞ்சு 27 நவம்பர் 1987 (1987-11-27) (அகவை 36) லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
மூடு
2012 ஆம் ஆண்டு 'பாஸ்ட் கேர்ள்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[6][7] அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கேப்டன் மார்வெல் (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[8][9]