From Wikipedia, the free encyclopedia
த இன்கிரிடிபில் ஹல்க் (ஆங்கில மொழி: The Incredible Hulk)[2] என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் வரைகதைகளில் தோன்றும் ஹல்க் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
த இன்கிரிடிபில் ஹல்க் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | லூயிஸ் லெட்டரியர்[1] |
தயாரிப்பு | அவி ஆராட் கலே அன்னே ஹர்ட் கேவின் பிகே |
மூலக்கதை | ஹல்க் படைத்தவர் ஸ்டான் லீ ஜாக் கிர்பி |
திரைக்கதை | ஜாக் பென் |
இசை | கிரேக் ஆம்ஸ்ட்ராங் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பீட்டர் மென்ஸீஸ் ஜூனியர். |
படத்தொகுப்பு | ஜான் ரைட் ரிக் ஷைன் வின்சென்ட் தபிலோன் |
கலையகம் |
|
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | ஜூன் 13, 2008 அமெரிக்கா |
ஓட்டம் | 112 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன் |
மொத்த வருவாய் | $264.8 மில்லியன் |
இது 2003 ஆம் ஆண்டு வெளியான ஹல்க் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாவது திரைப்படமும் ஆகும். அவி ஆராட், கலே அன்னே ஹர்ட் மற்றும் கேவின் பிகே ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை லூயிஸ் லெட்டரியர்[3] என்பவர் இயக்க, எட்வர்டு நார்டன், லிவ் டைலர், டிம் ரோத், டிம் பிளேக் நெல்சன் மற்றும் வில்லியம் கேர்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
த இன்கிரிடிபில் ஹல்க் என்ற படம் 8 ஜூன் 2008 அன்று கலிபோர்னியாவின் யுனிவர்சல் சிட்டியில் உள்ள கிப்சன் ஆம்பி திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் 13 ஜூன் 2008 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் இரண்டாவது திரைப்படமாக வெளியானது. இந்த படம் உலகளவில் 264.8 மில்லியனை வசூலித்தது, இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இன் மிகக் குறைந்த வசூல் படமாக அமைந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.