Remove ads
From Wikipedia, the free encyclopedia
மார்வெல் காமிக்ஸ் அல்லது அற்புத வரைகதை என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனமான மார்வெல் பப்ளிஷிங், இனக்., அமெரிக்க வரைக்கதை புத்தகங்கள் மற்றும் தொடர்புடைய ஊடகங்களின் வெளியீட்டாளரான மார்வெல் காமிக்ஸ் குழுமத்தின் நிறுவனஅடையாள பெயர் மற்றும் முதன்மை முத்திரையாகும். 2009 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி நிறுவனம் மார்வெல் வேர்ல்டுவைட்டின் தாய் நிறுவனமான மார்வெல் மகிழ்கலை நிறுவனம் வாங்கியது.[2][3]
மூல நிறுவனம் | மார்வெல் மகிழ்கலை (வால்ட் டிஸ்னி நிறுவனம்) |
---|---|
நிலைமை | செயலில் |
துவங்கப்பட்டது | சனவரி 12, 1939 |
துவங்கியவர் | மார்ட்டின் குட்மேன் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
தலைமையகம் | 135 வே. 50வது தெரு, நியூயார்க் நகரம் |
பரவல் | டயமண்ட் வரகதை விநியோகஸ்தர்கள் ஹச்செட் புத்தகக் குழு வாடிக்கையாளர் சேவைகள்[1] |
முக்கிய நபர்கள் |
|
Fiction genres |
இது 1939 ஆம் ஆண்டில் மார்ட்டின் குட்மேனால் டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் மற்றும் 1951 ஆம் ஆண்டில் அட்லஸ் காமிக்ஸ் என்று அறியப்பட்டது. மார்வெல் சகாப்தம் 1961 ஆம் ஆண்டில் தொடங்கியது, ஸ்டான் லீ, ஜாக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலரால் பென்டாஸ்டிக் போர் போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான டீசீ காமிக்ஸை தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்[4].
ஸ்பைடர் மேன், ஆன்ட் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வாஸ்ப், வால்வரின், பிளாக் பாந்தர், கேப்டன் மார்வெல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கோஸ்ட் ரைடர், பிளேட், டேர்டெவில், பனிஷர் போன்ற பல மார்வல் மீநாயகன் கதாபாத்திரங்கள் மற்றும் அவென்ஜர்ஸ், எக்ஸ்-மென், பென்டாஸ்டிக் போர், கார்டியன்சு ஒப் த கலக்சி போன்ற மீநாயகன் குழுக்கள் மற்றும் பல பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மார்வெல் அண்டம் எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது[5]
செப்டம்பர் 2015 தொடக்கத்தில், மார்வெலின் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் 7.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல் செய்தது. [6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.