From Wikipedia, the free encyclopedia
கேப்டன் அமெரிக்கா என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும்.
கேப்டன் அமெரிக்கா | |
---|---|
![]() கேப்டன் அமேரிக்காவின் வைப்ரேனியம் உலோகத்தாலான கேடயம் | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் #1 (மார்ச் 1941) |
உருவாக்கப்பட்டது | ஜோ சைமன் ஜாக் கிர்பி |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | ஸ்டீவன் "ஸ்டீவ்" கிரான் ரோஜர்ஸ் |
குழு இணைப்பு | அவென்ஜர்ஸ் புதிய அவென்ஜர்ஸ் |
பங்காளர்கள் |
|
திறன்கள் |
|
கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் #1 (1941 மார்ச்) ல் முதன்முதலாக இக்கதாபாத்திரம் அறிமுகமானது. 1940களில் ஜோ சைமன் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் மார்வெல் காமிக்ஸின் டைம்லி காமிக்ஸில் இக்கதாப்பாத்திரத்தினை உருவாக்கினர். 1944 ஆம் ஆண்டு திரைப்பட தொடராக கேப்டன் அமெரிக்கா வெளியானவுடன் வரைகதைக்கு வெளியே ஊடகங்களில் தோன்றிய முதல் மார்வெல் வரைகதை கதாபாத்திரம் கேப்டன் அமெரிக்கா. அப்போதிருந்து இந்த கதாபாத்திரம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இடம் பெற்று வருகின்றது. மார்வெல் திரைப் பிரபஞ்சம் இந்த கதாபாத்திரத்தை நடிகர் கிறிஸ் எவன்ஸ் மூலம் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு சிறப்புத் தோற்றம் (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் (2015), ஆண்ட்-மேன் சிறப்புத் தோற்றம் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் சிறப்புத் தோற்றம் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல் சிறப்புத் தோற்றம் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் சித்தரித்தனர்.
2011 இல் கேப்டன் அமெரிக்கா "எல்லா நேரத்திலும் சிறந்த 100 காமிக் புத்தக ஹீரோக்களில்" ஆறாவது இடத்தைப் பிடித்தது.[1] 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் இரண்டாவது இடமும்[2] மற்றும் 2014 இல் அவர்களின் "சிறந்த 25 சிறந்த மார்வெல் சூப்பர் ஹீரோக்கள்" பட்டியலிலும் இடம் பெற்றார்.[3]
இக்கதாப்பாத்திரத்தினை மையமாகக் கொண்ட திரைப்படங்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.