மார்வெல் திரைப் பிரபஞ்சம்

From Wikipedia, the free encyclopedia

மார்வெல் திரைப் பிரபஞ்சம்
Remove ads

மார்வெல் திரைப் பிரபஞ்சம் (ஆங்கிலம்: Marvel Cinematic Universe) என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட பிரபஞ்சம் ஆகும். இது மார்வெல் வரைகதைகளில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் பற்றி மார்வெல் இசுடியோசினால் சுயாதீனமாகத் தயாரித்து வெளியிடப்படும் பட வரிசைகளின் தொகுப்பாகும். மேலதிகமாக, வரைகதைகள், குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்பனவும் இந்நாமத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. மார்வெல் வரைகதைகளின் பாணியில் பல்வேறு கதாபாத்திரங்கள், கதையமைப்புகள் மற்றும் நடிகர்களைக் கொண்ட படங்களை உள்ளடக்கியதாக இது காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் மார்வெல் திரைப் பிரபஞ்சம், வகை ...
Remove ads

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டமாக 2008 இல் அயன் மேன்[1] வெளியீட்டில் தொடங்கி 2012 இல் தி அவேஞ்சர்ஸ்[2] வெளியீட்டில் முடிந்தது.[1] இரண்டாம் கட்டமாக 2013 இல் அயன் மேன் 3[3] வெளியீட்டில் தொடங்கி 2015 இல் ஆன்ட்-மேன் வெளியீட்டில் முடிந்தது. மூன்றாம் கட்டமாக 2016 இல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் வெளியீட்டில் தொடங்கி 2019 இல் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் வெளியீட்டில் முடிந்தது. இந்த மூன்று கட்டங்களையும் கூட்டாக தி இன்பினிட்டி சாகா என்று அழைக்கப்படுகின்றது. நான்காம் கட்டமாக 2021 இல் பிளாக் விடோ உடன் தொடங்கி 2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் உடன் முடிந்தது. ஐந்தாம் கட்டமாக 2023 இல் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா உடன் தொடங்கி 2025 ஆம் ஆண்டு தண்டர்போல்சு* வெளியீடுடன் முடிவடையும், மேலும் ஆறாம் கட்டமாக 2025 இல் பெண்டாஸ்டிக் ஃபோர் உடன் தொடங்கும்.

திரைப்படங்களோடு மட்டும் நின்றுவிடாமல் 2010 இல் மேற்குறிப்பிடப்பட்ட திரைப்படங்களுடன் தொடர்புடைய வரைகதைப் புத்தகங்களின் வெளியீட்டுடன் இது இன்னமும் விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் 2011 முதல் மார்வெல் ஒன்-சாட்சு என்ற பெயரின்கீழ் குறும்படங்களும் 2013 முதல் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் எனும் பெயருடைய தொலைக்காட்சித் தொடரும் வெளியானது.

அமெரிக்காவிலும் உலகளவிலும் வசூலில் முதலிடம் பிடிக்கும் திரைப்படத் தொடர்களைக் கொண்டிருப்பதுடன், வரைகதைக் கதாபாத்திர உரிமங்களைக் கொண்டுள்ள பல்வேறு படங்கள் தமது சொந்தப் பிரபஞ்சத்தை அமைப்பதற்கு முன்னோடியாகவும் உள்ளது.

Remove ads

அபிவிருத்தி

திரைப்படங்கள்

2005 ஆம் ஆண்டளவில் மார்வெல் மகிழ்கலை தனது சொந்த திரைப்படங்களை சுயாதீனமாக தயாரித்து அவற்றை பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கத் தொடங்கியது. முன்னதாக கொலம்பியா பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா மற்றும் பலவற்றோடு பல மீநாயகன் திரைப்படங்களை இணைந்து தயாரித்தது, இதில் 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஏழு ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மார்வெலின் திரைப்படப் பிரிவின் தலைவரான அவி ஆராட் ஆனார்.[4]

அதே தரும் கேவின் பிகே என்பவரும் இரண்டாம் தலைமையாளர் ஆனார்.[5] ஸ்பைடர் மேன் மற்றும் எக்ஸ்-மென் போன்றவற்றின் திரைப்பட உரிமைகள் சோனி மற்றும் பாக்ஸ் நிறுவனகளுக்கு வழங்கப்பட்டன, இருப்பினும் அவெஞ்சர்ஸின் முக்கிய உறுப்பினர்களுக்கான உரிமைகளை மார்வெல் இன்னும் வைத்திருந்து. 1960 களின் முற்பகுதியில் படைப்பாளிகளான ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் தங்கள் வரைகதை புத்தகங்களில் செய்ததைப் போலவே, கேவின் பிகே என்பவரும் பகிரப்பட்ட பிரபஞ்சத்தை உருவாக்குவது போன்று கற்பனை செய்தார். அதற்காக மெர்ரில் லிஞ்ச் மூலம் ஏழு வருட ஒப்பந்தத்தில் $525 மில்லியன் கடன் வசதி நிதியைப் பெற்றார். மார்வெலின் திட்டம் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களுக்கான தனிப்பட்ட படங்களை வெளியிடுவதும், பின்னர் அவற்றை ஒன்று சேர்ந்து மகா சங்கமம் போன்று ஒரே படத்தில் இணைப்பதும் ஆகும். ஆனால் படத்தின் விளைவை பற்றி சந்தேகித்த அவி ஆராட், ஆரம்ப நிதியுதவியைப் பாதுகாக்க வலியுறுத்தினார், அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு தனது பதவியில் இருந்து அவராகவே விலகினார்.

Thumb
மார்வெல் ஸ்டுடியோ தலைவர்: கேவின் பிகே

2007 இல் தனது 33 வயதில் கேவின் பிகே என்பவர் மார்வெல் ஸ்டுடியோ தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன் மார்வெல் ஸ்டுடியோஸ் அதன் கலை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்களின் வரைகதை புத்தகக் கதையை நன்கு அறிந்த ஆறு நபர்களைக் கொண்ட ஒரு படைப்புக் குழுவை உருவாக்கியது: பிகே உடன் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைத் தலைவராக லூயிஸ் டி'எஸ்போசிடோ என்பவரும், மார்வெல் வரைகதை பதிப்பகத்தின் தலைவராக டான் பக்லியும், மார்வெலின் தலைமை படைப்பாற்றல் அதிகாரியாக ஜோ கசாடாவும், எழுத்தாளராக பிரையன் மைக்கேல் பெண்டிஸ் மற்றும் மார்வெல் என்டர்டெயின்மென்ட் தலைவராக ஆலன் பைன் ஆகியோர்களும் குழுவை மேற்பார்வையிட்டனர். பிகே என்பவர் ஆரம்பத்தில் இந்தத் திரைப்படங்களின் பகிரப்பட்ட விவரிப்பு தொடர்ச்சியை "மார்வெல் சினிமா யுனிவர்ஸ்" என்று குறிப்பிட்டார், ஆனால் பின்னர் "மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்" (மார்வெல் திரைப் பிரபஞ்சம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

மார்வெல் திரைப் பிரபஞ்சம் (MCU) திரைப்படங்கள் "கட்டங்கள்" என்று அழைக்கப்படும் குழுக்களாக முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம்ம் போன்று வெளியிடப்படுகின்றன. மேலும் திசம்பர் 2009 இல், வால்ட் டிஸ்னி நிறுவனம் மார்வெல் என்டர்டெயின்மென்ட்டை $4 பில்லியனுக்கு வாங்கியது. அத்துடன் டிஸ்னி கூறுகையில், மார்வெல் இசுடியோவின் எதிர்காலத் திரைப்படங்கள், பாரமவுண்ட் உடனான தற்போதைய ஒப்பந்தம் காலாவதியானவுடன் அதன் சொந்த இசுடியோவால் விநியோகிக்கப்படும் என்று கூறினார். அக்டோபர் 2014 இல், மார்வெல் ஸ்டுடியோஸ் அவர்களின் மூன்றாம் கட்ட படங்களின் தலைப்புகளை அறிவிக்க ஒரு பத்திரிகை நிகழ்வை நடத்தியது. பின்னர் செப்டம்பர் 2015 வாக்கில், மார்வெல் ஸ்டுடியோசு நிறுவனம் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. பின்னர் மார்வெல் என்டர்டெயின்மென்ட் முதன்மை செயல் அலுவலர் ஐசக் பெர்ல்முட்டருக்குப் பதிலாக த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் தலைவர் ஆலன் எஃப். ஹார்னிடம் கேவின் பிகே அறிக்கை செய்தார். அத்துடன் ஐசக் பெர்ல்முட்டரின் கட்டுப்பாட்டில் இருந்த மார்வெல் தொலைக்காட்சி தயாரிப்புகள் குறித்து அவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து முன்னோக்கி செல்லும் அனைத்து முக்கிய திரைப்பட முடிவுகளும் கேவின் பிகே, டி'எஸ்போசிட்டோ மற்றும் நிர்வாக துணைத் தலைவர் விக்டோரியா அலோன்சோ ஆகியோரால் எடுக்கப்பட்டது.

இந்த இசுடியோ 'மார்வெல் இசுடியோசு பார்லிமென்ட்டை' நிறுவியது, இது நிறுவனத்தின் நீண்டகால நிர்வாகிகளின் "மூளை நம்பிக்கை (பிரைன் டிரஸ்ட்)" ஆகும், அவர்கள் ஒருவருக்கொருவர் திட்டங்களை உயர்த்த உதவினார்கள். அத்துடன் நவம்பர் 2017 இல் கேவின் பிகே கூறுகையில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) இதுவரை வந்த படங்களுக்கு ஒரு உறுதியான முடிவை வழங்கும் மற்றும் உரிமைக்கான புதிய காலகட்டத்தைத் தொடங்கும் என்று கூறினார். பின்னர் அவர் மூன்றாம் கட்டம் "தி இன்ஃபினிட்டி சாகா" உடன் முடிவடையும் என்று கூறினார்.

மல்டிவர்சு சாகா திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

டிஸ்னி தனது புதிய இஸ்ட்ரீமிங் (ஓடிடி) சேவையான டிஸ்னி+க்காக மார்வெல் தொலைக்காட்சித் தொடரை நவம்பர் 2017க்குள் உருவாக்குவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து ஆடி (ஜூலை) 2018 இல், மார்வெல் இசுடியோசு இஸ்ட்ரீமிங் சேவையில் ஈடுபடக்கூடிய சாத்தியமான ஈடுபாடு குறித்து டிஸ்னியுடன் விவாதங்கள் தொடங்கியதாக கேவின் பிகே கூறினார், ஏனெனில் இந்த சேவை பரந்த நிறுவனத்திற்கு முக்கியமானது என்று அவர் உணர்ந்தார். பின்னர் புரட்டாசி (செப்டம்பர்) 2018 இல், மார்வெல் இசுடியோசு மார்வெல் திரைப் பிரபஞ்சம் (MCU) படங்களின் "இரண்டாம் அடுக்கு" கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பல வரையறுக்கப்பட்ட தொடர்களை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது, அத்துடன் ஒவ்வொரு தொடரும் ஆறு முதல் எட்டு அத்தியாயங்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மேலும் மார்வெல் தொலைக்காட்சியை விட மார்வெல் இசுடியோசு தயாரிக்கும், ஒவ்வொரு தொடரின் வளர்ச்சியிலும் கேவின் பிகே ஒரு "கையாளும் பாத்திரம்" எடுக்கிறார். மார்வெல் இசுடியோசு டிஸ்னி+க்காகத் திட்டமிடத் தொடங்கிய முதல் தொடர் திட்டம் 'தி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி ஹாலிடே ஸ்பெஷல்' (2022) ஆகும்.

மார்கழி (திசம்பர்) 2017 இல் வால்ட் டிஸ்னி நிறுவனம் 20ஆம் சென்சுரி பாக்ஸ் உட்பட 21வது சென்சுரி பாக்ஸிடமிருந்து பங்குனி (மார்ச்) 19, 2019 அன்று சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக வாங்கியது. அத்துடன் டெட்பூல், எக்ஸ்-மென் கதாபாத்திரங்கள் மற்றும் பென்டாஸ்டிக் போர் போன்ற திரைப்பட உரிமைகள் அனைத்தும் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு திரும்பப் பெறப்பட்டது, இருப்பினும் 2019 இல் கையகப்படுத்தல் இறுதி செய்யப்பட்ட போதிலும், இந்த கதாபாத்திரங்கள் மற்றும் கருத்துகளின் அணுகல் மற்றும் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை என்று கேவின் பிகே விளக்கினார். பின்னர் ஆடி (ஜூலை) 2019 இல் கேவின் பிகே என்பவர் டிஸ்னி+ இல் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுத் தொடர்களை உள்ளடக்கிய நான்காவது கட்டம் பற்றி அறிவித்தார்.

ஆடி (ஜூலை) 2019 இல், சான் டியாகோ காமிக்-கானில் நான்காம் கட்ட அட்டவணையை அறிவித்தார், இதில் திரைப்படங்கள் மற்றும் முதல் முறையாக டிஸ்னி+ தொலைக்காட்சி நிகழ்வுத் தொடர்கள் இருந்தன. இந்த கட்டத்தின் முதல் இயங்குபட தொடர் வாட் இப்...? ஆகும். அத்துடன் மார்வெல் ஸ்டுடியோஸ் செப்டம்பர் 2021 க்குள் பல்வேறு கட்ட வளர்ச்சியில் சுமார் 31 திட்டங்களைக் கொண்டிருப்பதை விக்டோரியா அலோன்சோ என்பவர் உறுதிப்படுத்தினார். ஏப்ரல் 2022 இல், கேவின் பிகே, தானும் மார்வெல் ஸ்டுடியோவும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களைத் திட்டமிட்டு விவாதிக்க ஆக்கப்பூர்வமான பின்வாங்கலில் இருப்பதாகக் கூறினார். அந்த ஜூலையில், சான் டியாகோ காமிக்-கானில், ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்டங்கள் கூட்டாக "தி மல்டிவர்ஸ் சாகா" என்று அறியப்படுத்தினர்.

தொலைக்காட்சி

Thumb
மார்வெல் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் ஜெப் லோப்

மார்வெல் தொலைக்காட்சி

ஜூன் 2010 இல் ஜெப் லோப் என்பவரை தலைவராக நியமிக்கப்பட்டு மார்வெல் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஜூலை 2012 வாக்கில் மார்வெல் தொலைக்காட்சி மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் ஒரு நிகழ்ச்சியை உருவாக்க ஏபிசியுடன் கலந்துரையாடியது, இறுதியில் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட், ஏஜென்ட் கார்ட்டர் மற்றும் இன்கியுமன்சு போன்ற தொடர்களை உருவாக்கியது.

நவம்பர் 2013 இல் டிஸ்னி அவர்களின் நேரடி தொடர்களான டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, லூக் கேஜ் மற்றும் அயன் பிஸ்ட் ஆகிய தொடர்களை நெற்ஃபிளிக்சுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 2016 இல் டேர்டெவில் தொடரின் வழி தொடரானா தி டிபென்டெர்சு உருவாக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2019 வாக்கில் நெற்ஃபிளிக்சு அவர்களின் அனைத்து மார்வெல் தொடர்களையும் ரத்து செய்தது.

அக்டோபர் 2019 இல் மார்வெல் என்டர்டெயின்மென்ட்டின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரியாக கேவின் பிகே நியமிக்கப்பட்டார். டிசம்பர் 2019 இல் மார்வெல் தொலைக்காட்சி நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோ உடன் இணைக்கப்பட்டது, அந்த நேரத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் தற்போதைய தொடரின் தயாரிப்பை எடுத்துக் கொண்டது.

மார்வெல் இசுடியோசு

நவம்பர் 2017 வாக்கில் டிஸ்னி அவர்களின் புதிய ஓடிடி சேவையான டிஸ்னி+க்காக ஒரு புதிய மார்வெல் தொலைக்காட்சித் தொடரை உருவாக்க விரும்பியது. அதை தொடர்ந்து ஜூலை 2018 இல் மார்வெல் ஸ்டுடியோஸ் ஓடிடி தள சேவையில் ஈடுபடக்கூடிய சாத்தியமான ஈடுபாடு குறித்து டிஸ்னியுடன் விவாதங்கள் தொடங்கியதாக கேவின் பிகே குறிப்பிட்டார், ஏனெனில் இந்த சேவை "நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான விஷயம்" என்று கேவின் பிகே உணர்ந்தார். மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் செப்டம்பர் 2018 இல் மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களின் "இரண்டாம் அடுக்கு" கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல வரையறுக்கப்பட்ட தொடர்களை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தது. அத்துடன் ஒவ்வொரு தொடரும் ஆறு முதல் எட்டு அத்தியாயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மேலும் மார்வெல் தொலைக்காட்சியை விட மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும், ஒவ்வொரு தொடரின் வளர்ச்சியிலும் "ஹேண்ட் ஆன் ரோல் (கையில் ஒரு கதாபாத்திரம்)" என கேவின் பிகே கூறினார்.

இந்த தொடர்களை ஜூலை 2019 இல் சான் டியாகோ காமிக்-கானில் நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்தார். இந்த நான்காம் கட்டத்திற்கான மூன்று கூடுதல் டிஸ்னி+ தொடர்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டன, மேலும் நான்கு தொடர்கள் டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டன. அத்துடன் வாட் இப்...? என்ற முதல் இயக்குபடத் தொடரும் ஜூலை 2021 இல் ஒளிபரப்பானது.

Remove ads

திரைப்படங்கள்

மார்வெல் ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்த அவர்களின் படங்களை "கட்டங்கள்" என்று அழைக்கப்பட்டு குழுக்களாக வெளியிட்டனர். இதன் முதல் கட்டமாக 2008 இல் அயன் மேன் திரைப்பட வெளியீட்டில் தொடங்கி 2012 இல் தி அவேஞ்சர்ஸ் வெளியீட்டில் முடிந்தது. இரண்டாம் கட்டமாக 2013 இல் அயன் மேன் 3[3] வெளியீட்டில் தொடங்கி 2015 இல் ஆன்ட்-மேன் வெளியீட்டில் முடிந்தது. மூன்றாம் கட்டமாக 2016 இல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் வெளியீட்டில் தொடங்கி 2019 இல் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் வெளியீட்டில் முடிந்தது.

நான்காம் கட்டதின் தயாரிப்புகள் அனைத்தும் 2021 முதல் 2023 வரை வெளியிடப்படுகிறது. இந்த கட்டத்தில் முதல் படாமாக பிளாக் விடோவ் 2021 இல் வெளியானது.

Remove ads

திரைப்படங்கள்

தி இன்பினிட்டி சகா

மேலதிகத் தகவல்கள் திரைப்படம், வெளியான திகதி ...

தி மல்டிவர்சு சகா

மேலதிகத் தகவல்கள் திரைப்படம், வெளியான திகதி ...
Remove ads

தொலைக்காட்சி தொடர்கள்

மார்வெல் தொலைக்காட்சி தொடர்கள்

மேலதிகத் தகவல்கள் தொடர்கள், பருவங்கள் ...

மார்வெல் இசுடியோசு தொடர்கள்

இந்த தொடர்கள் நான்காம் கட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு அனைத்து தொடர்களும் டிஸ்னி+ இல் வெளியிடப்படுகின்றன.

மேலதிகத் தகவல்கள் தொடர்கள், பருவங்கள் ...
Remove ads

குறும்படங்கள்

மார்வெல் ஒன்-சாட்சு

மேலதிகத் தகவல்கள் திரைப்படம், அமெரிக்கா வெளியீடு ...

ஐ ஆம் குரூட்

ஐ ஆம் க்ரூட் என்பது டிஸ்னி+க்கான உருவாக்கப்படும் இயங்குபட குறும்படங்களின் தொடராகும், இதில் பேபி க்ரூட் என்பவர் புதிய மற்றும் அசாதாரண சக்திகளுடன் சாகசங்களைச் செய்கிறார். இது நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 2021 இல் வெளியாகவுள்ளது.

Remove ads

மற்ற ஊடகங்கள்

எண்முறை (டிஜிட்டல்) தொடர்கள்

நியூஸ்பிராண்ட் (2015–16) என்பது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் உள்ள நடப்பு நிகழ்வுகளை பற்றிய நிகழ்ச்சியாகும், இது சில மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களுங்களை தொற்று விளம்பர முறையில் பிரசாரப்படுத்துவதில் செயல்படுகிறது, இந்த தொடர் யூடியூப்பிற்காக கூகுள் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி அறிக்கையிடுவதைக் காணலாம்.

ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் சிலிங்ஷாட் (2016) என்பது ஏபிசி.காம் க்காக உருவாக்கப்பட்ட ஒரு வலைத் தொடர் ஆகும். இந்த தொடர் ஷீல்ட் இன் முகவர்களுக்கு துணையாக மார்வெல் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்டது.

Remove ads

இசை

பல்வேறு இசையமைப்பாளர்கள் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஒன்-ஷாட்ஸ் மற்றும் பிற மார்வெல் திரைப் பிரபஞ்சத்துடன் தொடர்புடைய திட்டங்களின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் இசை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர்களான பிரையன் இடைலர் மற்றும் மைக்கேல் ஜெய்சினோ இருவரும் மார்வெல் ஸ்டுடியோஸ் சின்னத்திற்காகக உருவாக்கிய பின்னணி இசை ரசிகர்களை மத்தியில் மிகவும் பிரபலமானது.

Remove ads

மார்வெல் இசுடியோசு: நவம்பர் 2018 முதல் 10 வருட காலவரிசை

Remove ads

மல்டிவர்சு

இது 2008 இல் வெளியிடப்பட்ட மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் அதிகாரப்பூர்வ கைப்புத்தகம் ஏ முதல் ஜ, தொகுதி. 5, ஆகும். இது கற்பனையான மாற்று பிரபஞ்சங்களின் தொகுப்பான மார்வெலின் வரைகதையின் மல்டிவர்சின் தொடர்ச்சியில் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் எர்த்-199999 என நியமித்தது.

நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்

மேலதிகத் தகவல்கள் கதாபாத்திரம், திரைப்படங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads