அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
கிளார்க் கிரெக் (ஆங்கில மொழி: Clark Gregg) (பிறப்பு: ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
கிளார்க் கிரெக் | |
---|---|
பிறப்பு | ராபர்ட் கிளார்க் க்ரேக் ஏப்ரல் 2, 1962 பாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் கிரே (2001-2021) |
பிள்ளைகள் | 1 |
கிரெக் ஏப்ரல் 2, 1962 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பாஸ்டனில் பிறந்தார்.[3] இவரது தாயார் மேரி லேனை மற்றும் தந்தையார் ராபர்ட் கிளார்க். இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்ததால் இவர் 17 வயதிற்குள் ஏழு நகரங்களில் வசித்து வந்தார்.[4][5][6] அவர் வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை அருகிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.