From Wikipedia, the free encyclopedia
எட்டெர்னல்சு (ஆங்கில மொழி: Eternals) என்பது 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.[6] இதே பெயரை கொண்ட மார்வெல் வரைகதையை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்[7] இருபத்தி ஆறாவது திரைப்படம் ஆகும்.[8]
எட்டெர்னல்சு | |
---|---|
இயக்கம் | சோலி ஜாவோ[1] |
தயாரிப்பு | கேவின் பிகே[2] |
மூலக்கதை | ஏடேர்னல்ஸ் (ஜாக் கிர்பி) |
திரைக்கதை |
|
இசை | ரமீன் ஜவாடி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பென் டேவிஸ் |
படத்தொகுப்பு | டிலான் டிச்செனோர் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 5, 2021 (ஐக்கிய அமெரிக்கா) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200 மில்லியன் |
மொத்த வருவாய் | $402.1 மில்லியன் |
இந்த திரைப்படத்தை சோலி ஜாவோ என்பவர் இயக்க,[9] 'காஸ் பிர்போ' மற்றும் 'ரியான் பிர்போ' ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கேவின் பிகே தயாரிக்கும் இந்த படத்தில் ஏஞ்சலினா ஜோலி,[10] ரிச்சர்ட் மேடன்,[11] குமைல் நஞ்சியானி,[12] இலாரன் ரிட்லோஃப், பிரையன் டைரி கேன்றி, சல்மா ஹாயெக்,[13] இலியா மிக்யூ, மா டோங் சியோக்கு,[14][15] கிட் ஹாரிங்டோன், ஜெம்மா சான்[16] மற்றும் பாரி கியோகன்[17] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது மார்வெல் ஸ்டுடியோஸின் முதல் அகனள், அகனன், ஈரர், திருனர்[18] பற்றிய கதைக்களத்துடன் சித்தரிக்க ஒரு மாறுபட்ட மீநாயகன் திரைப்படம் ஆகும்.[19]
எட்டெர்னல்சு படம் அக்டோபர் 18, 2021 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 5 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் $304 மில்லியன் வசூலித்து, விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர்கள் இதன் கருப்பொருள்கள் மற்றும் காட்சிகளைப் பாராட்டினர், ஆனால் அதன் வெளிப்பாடு, வேகம், இயக்க நேரம் மற்றும் பாத்திர வளர்ச்சியின் பற்றாக்குறை ஆகியவற்றை விமர்சித்தார்கள்.
இந்த தொடரின் கதை 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படத்தில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து எதிர்பாராத ஒரு சோகத்திற்குப் பிறகு, 7,000[20] ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் ரகசியமாக வாழ்ந்த விண்மீன்களால் உருவாக்கப்பட்ட ஒரு அழியாத அன்னிய இனம் தேவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட இனத்திடமிருந்து எப்படி மனிதகுலத்தை காப்பாற்றுகின்றனர் என்பதே கதை ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.