அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia
ஜோ சால்டனா (ஆங்கில மொழி: Zoe Saldaña) (பிறப்பு: சூன் 19, 1978) என்பவர் அமெரிக்கா நாட்டு நடிகை ஆவார். இவர் 1999ஆம் ஆண்டு ஒளிபரப்பான லா & ஆர்டர் என்ற தொடரில் மூலம் அறிமுகமானார். ஒரு ஆண்டு கழித்து 2000 இல் பாலே நடனக் கலைஞராக சென்டர் ஸ்டேஜ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
ஜோ சால்டனா | |
---|---|
பிறப்பு | சூன் 19, 1978 பசைக், நியூ செர்சி அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | மார்கோ பெரெகோ (தி. 2013) |
பிள்ளைகள் | 3 |
இவர் 2009 இல் அறிவியல் புனைகதை திரைப்படமான "ஸ்டார் ட்ரெக்" என்ற திரைப்படத்தில் நியோட்டா உஹுரா என்ற கதாபாத்திரத்திலும், அதே ஆண்டு வெளியான அவதார்[1] என்ற திரைப்படத்தில் நேதிரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு திறன் பலரால் அறியப்பட்டது.
2014ஆம் ஆண்டு முதல் மார்வல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான காமோரா என்ற மீநாயகன் கதாபாத்திர மூலம் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[2] கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017),[3] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார் (தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து படங்களில் மூன்றில் இவர் நடித்திருக்கிறார்) மற்றும் இவர் நடித்த திரைப்படங்கள் உலகளாவிய ரீதியில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.