ஆன்ட்-மேன்
From Wikipedia, the free encyclopedia
ஆன்ட்-மேன் (English: Ant-Man) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே மார்வெல் வரைகதை பாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகித்தது.
ஆன்ட்-மேன் | |
---|---|
![]() திரை வெளியீட்டுப் பதாகை | |
இயக்கம் | பெய்டன் ரீட் |
தயாரிப்பு | கேவின் பிகே[1] |
மூலக்கதை | அடிப்படையில் : ஆன்ட் மேன் (ஸ்டான் லீ லாரி லிபர் ஜாக் கிர்பி) |
திரைக்கதை | எட்கர் ரைட்[2] ஜோ கார்னிசு ஆடம் மெக்கே பால் ருத் |
இசை | கிறிஸ்டோப் பெக்[3] |
நடிப்பு | பால் ருத் இவாஞ்சலீன் லில்லி கோரே ஸ்டோல் பாபி கன்னவாலே மைக்கேல் பெனா அந்தோணி மேக்கி வூட் ஹாரிஸ் ஜூடி கிரேர் டேவிட் தஸ்ட்மால்ச்சியன் மைக்கேல் டக்ளஸ் டி.ஐ. |
ஒளிப்பதிவு | ரஸ்ஸல் கார்பெண்டர் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 17, 2015 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $ 130–169.3 மில்லியன் |
மொத்த வருவாய் | $ 519.3 மில்லியன் |
இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பன்னிரண்டாவது திரைப்படம் ஆகும். கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இத் திரைப்படத்தை பெய்டன் ரீட் என்பவர் இயக்க, பால் ருத், இவாஞ்சலீன் லில்லி, கோரே ஸ்டோல், பாபி கன்னவாலே, மைக்கேல் பெனா, டி.ஐ., அந்தோணி மேக்கி, வூட் ஹாரிஸ், ஜூடி கிரேர், டேவிட் தஸ்ட்மால்ச்சியன், மைக்கேல் டக்ளஸ்[4] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
ஆன்ட்-மேன் திரைப்படம் 29 ஜூன் 2015 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் முதலில் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை 17 ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் கடைசி படமாக வெளியாகி, உலகளவில் 519 மில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது. மற்றும் இதன் மூன்றாம் பாகம் 2022 ஆம் ஆண்டில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்
- பால் ருத் - ஸ்காட் லாங் / ஆண்ட் மேன்
- இவாஞ்சலீன் லில்லி[5] - ஹோப் வான் டைன்
- கோரே ஸ்டோல் - டேரன் கிராஸ் / யெல்லோஜாகெட்
- பாபி கன்னவாலே - ஜிம் பாக்ஸ்டன்
- டி.ஐ. - டேவ்
- மைக்கேல் பெனா[6] - லூயிஸ்
- அந்தோணி மேக்கி - சாம் வில்சன் / பால்கன்
- வூட் ஹாரிஸ் - கேல்
- ஜூடி கிரேர் - மேகி
- டேவிட் தஸ்ட்மால்ச்சியன் - கர்ட்
- மைக்கேல் டக்ளஸ்[7] - ஹாங்க் பிம்
தொடர்ச்சியான தொடர்கள்
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018)
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.