ஜூடி கிரேர்

அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia

ஜூடி கிரேர்

ஜூடித் தெரேஸ் எவன்ஸ் (English: Judith Therese Evans) (பிறப்பு:சூலை 20, 1975) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் பெரும்பாலும் ஒரு குணச்சித்திர நடிகை என்று அழைக்கப்படுகிறார்[1] மற்றும் வாட் வுமேன் வாண்ட் (2000), 13 கோயிங் ஒன் 30 (2004), 27 ட்ரெஸ்ஸஸ் (2008), லவ் & அதர் ட்ரக்ஸ் (2010), டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் (2014),[2][3] ஜுராசிக் வேர்ல்ட் (2015)[4] போன்ற பல வகையான படங்களில் தோன்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் ஜூடி கிரேர், பிறப்பு ...
ஜூடி கிரேர்
Thumb
பிறப்புஜூடித் தெரேஸ் எவன்ஸ்
சூலை 20, 1975 (1975-07-20) (அகவை 49)
டிட்ராயிட், டிட்ராயிட், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, நகைச்சுவையாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
டீன் ஈ. ஜான்சன் (தி. 2011)
மூடு

2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களில் 'மேகி லாங்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[5]

கிரேர் தொலைக்காட்சியில் 'ஆர்ச்சர்' (2009-தற்போது வரை) என்ற நகைச்சுவை இயங்குபடத் தொடரில் செரில் டன்ட் என்ற குரல் பாத்திரத்தில் மிகவும் பிரபலமானவர். அதை தொடர்ந்து அர்ரெஸ்ட்ஸ் டெவெலப்மென்ட் (2003–2018),[6] டூ அண்டு எ ஹாஃப் மென் (2007–2015), மெரிட் (2014–2015), மற்றும் கிடிங் (2018–2020) ஆகிய நகைச்சுவைத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.