From Wikipedia, the free encyclopedia
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (ஆங்கில மொழி: Doctor Strange in the Multiverse of Madness)[3] என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி எட்டாவது திரைப்படமும் ஆகும்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் | |
---|---|
இயக்கம் | சாம் ரைமி[1] |
தயாரிப்பு | கேவின் பிகே[2] |
மூலக்கதை | |
திரைக்கதை |
|
இசை | டேனி எல்ப்மேன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜான் மதிசன் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 2, 2022 (டால்பி திரையரங்கம்) மே 6, 2022 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 126 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200 மில்லியன் |
மொத்த வருவாய் | $953.3 மில்லியன் |
இந்த திரைப்படத்தை சாம் ரைமி[4] என்பவர் இயக்க, ஜேட் பார்ட்லெட் மற்றும் மைக்கேல் வால்ட்ரான் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கேவின் பிகே[5] தயாரிக்கும் இந்த படத்தில் பெனடிக்ட் கம்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சென்,[6] பெனடிக்ட் வோங், ரேச்சல் மெக்காடம்ஸ்,[7] சிவெட்டல் எஜியோஃபர் மற்றும் ஸோகிட்ல் கோம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற படத்தின் இயக்குநரும் இணை எழுத்தாளருமான இசுகாட் டெரிக்சன்[8] அக்டோபர் 2016 க்குள் இந்த திரைப்படத்தின் அடுத்த தொடர்ச்சியை இயக்க திட்டம் கொண்டிருந்தார்.[9] 2018 ஆம் ஆண்டு இவர் இப்படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்திட்டார்.[10]இப்படத்தின் தலைப்பு ஜூலை 2019 இல் அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் இப்படத்தில் நடிகை எலிசபெத் ஓல்சென்[11] என்பவர் நடிப்பார் என்றும் மற்றும் அக்டோபர் மாதம் படத்தை எழுத ஜேட் பார்ட்லெட் பணியமர்த்தப்பட்டார். பல வேறுபாடுகள் காரணமாக இசுகாட் டெரிக்சன் 2020 ஜனவரியில் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்.[12] அடுத்த மாதம், மைக்கேல் வால்ட்ரான் இந்தத் திட்டத்தில் சேர்ந்தார், சாம் ரைமி [13][14] ஏப்ரல் 2020 க்குள் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.[15] 2020 நவம்பரில் இலண்டனில் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் 2021 ஜனவரியில் நிறுத்தப்பட்டது. மார்ச் 2021 க்குள் உற்பத்தி மீண்டும் தொடங்கி ஏப்ரல் நடுப்பகுதியில் சோமர்செட்டில் முடிந்தது.
இந்த திரைப்படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக மே 2, 2022 அன்று டால்பி திரையரங்கத்தில் திரையிடப்பட்டது மற்றும் மே 6, 2022 அமெரிக்காவில் வெளியானது. இது உலகளவில் $954 மில்லியன் வசூல் செய்து 2022 இல் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.