தோர்: த டார்க் வேர்ல்டு
From Wikipedia, the free encyclopedia
தோர்: த டார்க் வேர்ல்டு (ஆங்கில மொழி: Thor: The Dark World) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஆலன் டெய்லர் என்பவர் இயக்க மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
தோர்: த டார்க் வேர்ல்டு | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆலன் டெய்லர் |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | |
திரைக்கதை | |
இசை | பிரையன் இடைலர்[1][2] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கிராமர் மோர்கெந்தாவ் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 22, 2013 (2013-10-22) (ஓடியான் லீசெஸ்டர் சதுக்கம்) நவம்பர் 8, 2013 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 112 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150-170 மில்லியன் |
மொத்த வருவாய் | $644.8 மில்லியன் |
இது 2011 இல் வெளியான தோர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியும், மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் எட்டாவது திரைப்படமும் ஆகும். தோர் என்ற கதாபாத்திரத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் என்பவர் நடிக்க இவருடன் சேர்ந்து நேடலி போர்ட்மன், டாம் ஹிடில்ஸ்டன், அந்தோணி ஹோப்கின்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், இட்ரிசு எல்பா, கிறிஸ்டோபர் எக்லெஸ்டன், அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே, கேட் டென்னிங்ஸ், ரே ஸ்டீவன்சன், சக்கரி லேவி, தடனோபு அசனோ, ஜெய்மி அலெக்சாண்டர், ரெனே ருஸ்ஸோ போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
தோர்: த டார்க் வேர்ல்டு என்று படம் நவம்பர் 8, 2013 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது திரைப்படம் ஆகும். இப் படம் உலகளவில் 644 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. மற்றும் 2013 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த எட்டாவது படமாக அமைந்தது. இதன் தொடர்சியாக 2017 ஆம் ஆண்டு தோர்: ரக்னராக் மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்கள் வெளியானது.
இந்த திரைப்படம் தமிழ் மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி 2013 இல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.