![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Tom_Hiddleston_%252836109110291%2529_%2528cropped%2529.jpg/640px-Tom_Hiddleston_%252836109110291%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
டாம் ஹிடில்ஸ்டன்
From Wikipedia, the free encyclopedia
தாமஸ் வில்லியம் ஹிடில்ஸ்டன் (ஆங்கில மொழி: Thomas William Hiddleston) (பிறப்பு: பெப்ரவரி 9, 1981) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவரின் நடிப்பு திறனுக்காக டோனி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது மற்றும் இரண்டு பிரைம் டைம் எம்மி விருதுகளுக்கான பரிந்துரைகளுடன், கோல்டன் குளோப் விருது மற்றும் லாரன்ஸ் ஆலிவர் விருது உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றார்.
டாம் ஹிடில்ஸ்டன் | |
---|---|
![]() | |
பிறப்பு | தாமஸ் வில்லியம் ஹிடில்ஸ்டன் 9 பெப்ரவரி 981 ( 981-02-09) (அகவை 1043) லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–இன்றுவரை |
உறவினர்கள் | எம்மா ஹிடில்ஸ்டன் (சகோதரி) |
இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்,,[1] தி அவெஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), தோர்: ரக்னராக் (2017),[2] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் 2021 ஆம் ஆண்டில் டிஸ்னி+ தொடரான லோகி[3] என்ற வலைத் தொடரிலும் லோகி[4][5] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.