நேடலி போர்ட்மன்
இஸ்ரேலிய-அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
நடாலீ ஹெர்ஷ்லக் என்ற இயற்பெயர் கொண்ட நடாலீ போர்ட்மேன் (பி. ஜூன் 9, 1981) ஒரு இசுரேலிய-அமெரிக்கத் திரைப்பட நடிகை. 1994ல் லியான் என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். பின் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். ஸ்டார் வார்ஸ் முற்தொடர்ச்சி முத்திரைப்படங்கள், வி ஃபார் வெண்டட்டா, குளோசர், பிளாக் சுவான் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். 2005ம் ஆண்டு குளோசர் படத்துக்காக சிறந்த துணை நடிகை பகுப்பில் ஆசுக்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதே பாத்திரத்துக்காக கோல்டன் குளோப் விருதினை வென்றார். 2011ம் ஆண்டு பிளாக் சுவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆசுக்கர் விருது, பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது மற்றும் இசுகிரீன் ஆக்டர்சு கில்ட் விருதுகளை வென்றார். போர்ட்மேன், இசுரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார்.