![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/Idris_Elba-4580_%2528cropped%2529.jpg/640px-Idris_Elba-4580_%2528cropped%2529.jpg&w=640&q=50)
இட்ரிசு எல்பா
நடிகர் / From Wikipedia, the free encyclopedia
இட்ரிசா அகுனா எல்பா (ஆங்கிலம்:Idrissa Akuna Elba; OBE (/ˈɪdrɪs/; பிறப்பு 6 செப்டம்பர் 1972) ஆங்கிலேய நடிகர் ஆவார்.[3] எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் தி வயர் இல் நடித்ததற்காக அறியப்படுகிறார். நெல்சன் மண்டேலாவாக மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம் (2013) திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டப்பட்டுள்ளார்.
இட்ரிசு எல்பா Idris Elba OBE | |
---|---|
![]() 2018 இட்ரிசு எல்பா | |
பிறப்பு | இட்ரிசா அகுனா எல்பா 6 செப்டம்பர் 1972 (1972-09-06) (அகவை 51) இலண்டன், இங்கிலாந்து |
மற்ற பெயர்கள் |
|
குடியுரிமை |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1994–தற்காலம் |
துணைவர் | நையானா கார்த் (2013–2016) |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் | லைம் கொர்டியாலெ |
ரிட்லி சுகாட்டின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.. கய்ம்டலாக மார்வெல் திரைப் பிரபஞ்ச (MCU) திரைப்படம் தோர் (2011) மற்றும் அதன் தொடர்ச்சிகள் தோர்: த டார்க் வேர்ல்டு (2013), தோர்: ரக்னராக் (2017), மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பசிபிக் ரிம் (2013), சூடோபியா (2016), டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்ச (DCEU) திரைப்படம் தி சூசைட் ஸ்க்வாட் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில், உலகின் அதிக செல்வாக்குடைய டைம் 100 பட்டியலில் இடம்பெற்றார்.[4] மே 2019 வரை, இவரின் திரைப்படங்கள் ஐஅ$9.8 பில்லியன் (₹70,085.7 கோடி) வருவாயினை ஈட்டியுள்ளன.[5][6]