![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Mark_Kassen%252C_Tony_C%25C3%25A1rdenas_and_Chris_Evans_%2528cropped%2529.jpg/640px-Mark_Kassen%252C_Tony_C%25C3%25A1rdenas_and_Chris_Evans_%2528cropped%2529.jpg&w=640&q=50)
கிறிஸ் எவன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்டோபர் ராபர்ட் எவன்ஸ் (ஆங்கில மொழி: Christopher Robert Evans) (பிறப்பு: ஜூன் 13, 1981)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.
கிறிஸ் எவன்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | கிறிஸ்டோபர் ராபர்ட் எவன்ஸ் சூன் 13, 1981 (1981-06-13) (அகவை 42) பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
உறவினர்கள் | ஸ்காட் எவன்ஸ் (சகோதரன்) மைக் கேப்னொ (மாமா) |
இவர் 2000 ஆம் ஆண்டில் 'ஆப்போசிட் செக்ஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல் 'இன் நாட் அனதர்' உள்பட பல விடலைப்பருவ திரைப்படங்களில் தோன்றியதைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் மற்றும் 2007 இல் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 போன்ற படங்களில் 'கியூமன் டோர்சு' என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தில் நடித்தார்.
2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.