![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/5/57/%25E0%25AE%2585%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D_2.jpg/640px-%25E0%25AE%2585%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D_2.jpg&w=640&q=50)
அயன் மேன் 2
From Wikipedia, the free encyclopedia
அயன் மேன் 2 (ஆங்கில மொழி: Iron Man 2) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜான் பெவ்ரோ என்பவர் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
அயன் மேன் 2 | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜான் பெவ்ரோ |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | அயன் மேன் (வரைகதை) ஸ்டான் லீ லாரி லிபர் டான் ஹெக் ஜாக் கிர்பி |
திரைக்கதை | ஜஸ்டின் தெரூக்சு |
இசை | ஜான் டெப்னி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மத்தேயு லிபாடிக் |
படத்தொகுப்பு | டான் லெபண்டல் ரிச்சர்ட் பியர்சன் |
கலையகம் | |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 26, 2010 (2010-04-26) (எல் கேப்டன் திரையரங்கம்) மே 7, 2010 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 119 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $170–200 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $623.9 மில்லியன்[4] |
இது 2008 இல் வெளியான அயன் மேன் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் மூன்றாவது திரைப்படமும் ஆகும். கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், ஸ்கார்லெட் ஜோஹான்சன், சாம் ராக்வெல், மிக்கி ரூர்கி மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
அயர்ன் மேன் 2 என்ற படம் ஏப்ரல் 26, 2010 இல் எல் கேப்டன் திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் 7 மே 2010 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் மூன்றாவது திரைப்படமாக வெளியானது. இந்த படம் பொதுவாக நடிகர் ராபர்ட் டவுனியின் நடிப்பு மற்றும் அதிரடி காட்சிகள், இசை மற்றும் திரை வண்ணம் ஆகியவற்றிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் பல விமர்சகர்கள் இது முதல் படத்தை விட தாழ்ந்ததாகக் கருதி வில்லன் கதாபாத்திரத்தை விமர்சித்தனர். இப் படம் வசூல் ரீதியாக 623.9 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது 2010 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது. இது சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அயன் மேன் 3 என்ற படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.