சூன் 6 (June 6) கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.
- 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார்.
- 1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது.
- 1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.[1]
- 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.[2]
- 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.
- 1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
- 1808 – பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் சகோதரன் யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.
- 1809 – சுவீடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் முழுமையான முடியாட்சியின் பின்னர் அரசியல் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. பதின்மூன்றாம் சார்லசு புதிய மன்னராகப் பதவியேற்றார்.
- 1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
- 1844 – கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
- 1859 – ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் டென்னிசி, மெம்பிசு நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றின.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிசு நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
- 1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.ஆனாலும் இந்தச் செய்தி பொய்யானது என பின்னர் நிரூபிக்கப்பட்டது.
- 1889 – அமெரிக்கா, சியாட்டில் நகரில் ஏற்பட்ட தீயில் நகர மையம் முழுவதும் அழிந்தது.
- 1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
- 1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
- 1932 – அமெரிக்காவில் எரிவாயுவிற்கு முதன் முதலாக கலனிற்கு ஒரு சதம் என்ற அளவில் வரி அறவிடப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே சமரில் அமெரிக்கக் கடற்படை மிக்குமா என்ற சப்பானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.
- 1958 – தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.[3]
- 1968 – அமெரிக்க அரசியல்வாதி இராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1971 – சோவியத் ஒன்றியத்தின் சோயூசு 11 விண்கலம் ஏவப்பட்டது.
- 1971 – கலிபோர்னியாவில் அமெரிக்க வான்படையின் எப்-4 பன்டெம் II போர் வானூர்தி பயணிகள் வானூர்தியுடன் வானில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
- 1971 – சோயுஸ் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1974 – சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.
- 1981 – பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.
- 1982 – லெபனான் போர் ஆரம்பமானது. இசுரேலியப் படையினர் தெற்கு லெபனானை ஊடுருவினர்.
- 1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
- 1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
- 2002 – 10 மீட்டர் விட்டமுள்ள புவியருகு விண்பொருள் ஒன்று நடுநிலக் கடலில் கிரேக்கத்திற்கும் லிபியாவிற்கும் இடையில் வீழ்ந்து வெடித்தது.
- 2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 1436 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1476)
- 1599 – டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (இ. 1660)
- 1799 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)
- 1850 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1918)
- 1875 – தாமசு மாண், நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 1955)
- 1877 – உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர், மலையாளக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1949)
- 1890 – கோபிநாத் பர்தலை, அசாம் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1950)
- 1891 – மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், இந்திய எழுத்தாளர் (இ. 1986)
- 1901 – சுகர்ணோ, இந்தோவேசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1970)
- 1905 – என். எம். பெரேரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1979)
- 1908 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1998)
- 1908 – சா. கணேசன், தமிழக இலக்கியவாதி; காந்தியவாதி, சிற்பக்கலைஞர், கல்வெட்டாய்வாளர், அரசியல்வாதி (இ. 1982)
- 1926 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1973)
- 1929 – சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2005)
- 1933 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 2013)
- 1936 – டி. ராமா நாயுடு, இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2015)
- 1949 – ஜி. ராமகிருஷ்ணன், தமிழக இடதுசாரி அரசியல்வாதி
- 1968 – அலீம் தர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர், நடுவர்
- 1986 – பாவனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1988 – அஜின்கியா ரகானே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
- 1832 – ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1748)
- 1916 – யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1859)
- 1920 – வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (பி. 1870)
- 1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1866)
- 1948 – லூயி லூமியேர், பிரான்சிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1864)
- 1961 – கார்ல் யுங்கு, சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (பி. 1875)
- 1968 – இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1925)
- 1990 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1932)
- 2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கை அறிவியலாளர், கல்வியாளர் (பி. 1939)
- 2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
- 2009 – ராஜமார்த்தாண்டன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர்
- 2015 – ஆர்த்தி அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1984)
- 2016 – எஸ். ஏ. ஐ. மத்தியு, இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (பி. 1939)
- 2021 – எஸ். இளையராஜா, தமிழக ஓவியர்
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6
"Principal Sri Lanka Events". Ferguson's Ceylon Directory, Colombo. 1959.