தமிழக ஓவியர் From Wikipedia, the free encyclopedia
எஸ். இளையராஜா (S. Ilayaraja, 4 ஏப்பிரல் 1979 – 6 சூன் 2021) என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர்.[1] இவர் தமிழ்நாட்டில் உயிரோவியப் பாணி ஓவியங்களை வரைவதில் முன்னணி ஓவியராக இருந்தார். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என உலக அளவில் பல கண்காட்சிகளை நடத்தியுள்ளார். விகடன் இதழ்களில் இவருடைய ஓவியங்கள் வெளிவந்தன.
இவர் கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை தச்சுத் தொழில் செய்பவர். குடும்பத்தில் இவர் கடைசி. ஐந்து அண்ணன்மாரும், ஐந்து அக்காமாரும் உள்ளனர்.
கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை 1996 இல் முடித்தார். 2001 ஆம் ஆண்டு கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.[1] 2003 இல் சென்னை கவின் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். உடன் 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் மிகுந்த கவனம் பெற்றார். 2009 ஆம் ஆண்டு "திராவிடப் பெண்கள் கண்காட்சி" என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரியில் கண்காட்சி நடந்தது. இதில் இளையராஜாவின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.[1] அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் விகடன் இதழ்களில் வாங்கி வெளியிட்டப்பட்டன.[1]
தமிழ்நாட்டில் உயிரோவியப் பாணி ஓவியர்களில் முன்னணியில் இருந்த இவர் வரைந்த ஓவியங்களில் குறிப்பாக அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்த பெண், ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் பெண், பூப்பெய்த நேரத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் போன்றவை புகழ் பெற்ற ஓவியங்களாகும்.[2]
இவர் இயக்குநர் பார்த்திபன் இயக்கிய இவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.[1] அத்திரைப்படத்தில் சிறுவயது பார்த்திபனாகவும் நடித்துள்ளார்.[1]
தனது 43 ஆவது வயதில் 2021 ஜூன் 6 இல் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.