நாள் From Wikipedia, the free encyclopedia
சனவரி 1 (January 1) என்பது கிரெகொரியின் நாட்காட்டியில் ஆண்டின் முதலாவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 நாட்கள் (நெட்டாண்டுகளில் 365 நாட்கள்) உள்ளன. இந்நாள் புத்தாண்டு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
<< | சனவரி 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXV | ||||||
ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச்சு 1, மார்ச்சு 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.
12ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச்சு 25இல் ஆண்டுத் தொடக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக, இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது.
சனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கோடு பின்வருமாறு:
Seamless Wikipedia browsing. On steroids.