பின்லாந்து
வடகிழக்கு ஐரோப்பிய குடியரசு நாடு From Wikipedia, the free encyclopedia
வடகிழக்கு ஐரோப்பிய குடியரசு நாடு From Wikipedia, the free encyclopedia
பின்லாந்து (Finland; பின்னிய மொழி: Suomi [ˈsuo̯mi] ( கேட்க); சுவீடிய: Finland [ˈfɪ̌nland] (ⓘ)), அதிகாரபூர்வமாக பின்லாந்துக் குடியரசு (Republic of Finland) என்பது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நோர்டிக் நாடுகளில் ஒன்றாகும். இது வடமேற்கில் சுவீடன், வடக்கில் நோர்வே, கிழக்கில் உருசியா, மேற்கில் பொத்னியா வளைகுடா, தெற்கில் பின்லாந்து வளைகுடா, மற்றும் எசுத்தோனியாவின் குறுக்கேயும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. 5.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பின்லாந்து 338,455 சதுர கிலோமீட்டர்கள் (130,678 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. எல்சிங்கி இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகையின் பெரும்பாலானோர் பின்னிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பின்னியம், சுவீடியம் ஆகியன அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். 5.2% மக்கள் சுவீடிய மொழி பேசுகின்றனர்.[11] பின்லாந்தின் காலநிலை தெற்கில் ஈரப்பதத்தில் இருந்து வடமுனக் காலநிலை வரை மாறுபடும். நிலப்பரப்பு முதன்மையாக 180,000 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட ஒரு ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ளது.[12]
பின்லாந்துக் குடியரசு Republic of Finland
| |
---|---|
நாட்டுப்பண்: Vårt land ("நமது நிலம்") | |
தலைநகரம் | எல்சிங்கி 60°10′15″N 24°56′15″E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | |
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் |
|
இனக் குழுகள் |
|
சமயம் (2021)[3] |
|
மக்கள் |
|
அரசாங்கம் | ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு[4] |
• குடியரசுத் தலைவர் | சௌலி நீனிசுட்டோ |
• பிரதமர் | சன்னா மரீன் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
விடுதலை உருசியாவிடம் இருந்து | |
• உருசியப் பேரரசில் இணைவும் தன்னாட்சியும் | 29 மார்ச் 1809 |
• விடுதலை அறிவிப்பு | 6 திசம்பர் 1917 |
• பின்லாந்து உள்நாட்டுப் போர் | சனவரி – மே 1918 |
• அரசியலமைப்பு உருவாக்கம் | 17 சூலை 1919 |
30 நவம்பர் 1939 – 13 மார்ச் 1940 | |
• தொடர் போர் | 25 சூன் 1941 – 19 செப்டம்பர் 1944 |
• ஐ.ஒன்றியத்தில் இணைவு | 1 சனவரி 1995 |
• நேட்டோவில் இணைவு | 4 ஏப்ரல் 2023 |
பரப்பு | |
• மொத்தம் | 338,455 km2 (130,678 sq mi) (65-ஆவது) |
• நீர் (%) | 9.71 (2015)[5] |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 5,567,868[6] (116-ஆவது) |
• அடர்த்தி | 16.4/km2 (42.5/sq mi) (213-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $321.2 பில்.[7] (60-ஆவது) |
• தலைவிகிதம் | $58,010[7] (21-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $267.61 பில்.[7] (46-ஆவது) |
• தலைவிகிதம் | $53,745[7] (16-ஆவது) |
ஜினி (2021) | 25.7[8] தாழ் |
மமேசு (2021) | 0.940[9] அதியுயர் · 11-ஆவது |
நாணயம் | € (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கி.ஐ.நே) |
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே) | |
திகதி அமைப்பு | நா.நா.மா.ஆஆஆஆ[10] |
வாகனம் செலுத்தல் | வலம் |
அழைப்புக்குறி | +358 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | FI |
இணையக் குறி | .fi, .axa |
|
பின்லாந்தில் இறுதிப் பனிப்பாறைக் காலத்திற்குப் பிறகு ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுகள் முதல் மக்கள் வசிக்கின்றனர்.[13] கற்காலம் பல்வேறு வெண்களிமண் பாணிகளையும் மற்றும் கலாச்சாரங்களையும் அறிமுகப்படுத்தியது. வெண்கல, இரும்புக் காலங்கள் பெனோசுக்காண்டியா மற்றும் பால்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பிற கலாச்சாரங்களுடனான தொடர்புகளால் வகைப்படுத்தப்பட்டன.[14] 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, வடக்கு சிலுவைப் போரின் விளைவாக பின்லாந்து சுவீடனின் ஒரு பகுதியாக மாறியது. 1809 இல், பின்னியப் போரின் விளைவாக, பின்லாந்து உருசியப் பேரரசின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக மாறியது, இதன் போது பின்னியக் கலை செழித்து வளர்ந்தது, விடுதலை பற்றிய உணர்வும் தொடங்கியது. 1906 இல், பின்லாந்து பொது வாக்குரிமையை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடானது. அத்துடன் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் பொது அலுவலகத்திற்குப் போட்டியிடுவதற்கான உரிமையை வழங்கிய உலகின் முதல் நாடாக மாறியது.[15][note 2] 1917 உருசியப் புரட்சியை அடுத்து, பின்லாந்து உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. புதிதாக உருவாகியிருந்த இந்நாடு 1918 இல் பின்னிய உள்நாட்டுப் போரால் பிளவடைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், பின்லாந்து பனிக்காலப் போரில் சோவியத் ஒன்றியத்துடனும், நாட்சி செருமனியுடன் இலாப்லாந்துப் போரிலும் ஈடுபட்டது. அதன் பின்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை இழந்தது, ஆனால் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
1950கள் வரையிலும் பின்லாந்து பெரும்பாலும் ஒரு வேளாண்மை நாடாகவே விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர், அது விரைவாகத் தொழில்மய நாடாக மாறியதோடு, மேம்பட்ட பொருளாதாரத்தையும் உருவாக்கியது. அதே வேளையில் நோர்டிக் மாதிரியின் அடிப்படையில் ஒரு விரிவான நலன்புரி அரசை உருவாக்கியது; நாடு விரைவில் பரவலான செழிப்பையும் அதிக தனிநபர் வருமானத்தை அனுபவித்தது.[16] பனிப்போரின் போது, பின்லாந்து அதிகாரப்பூர்வமான நடுநிலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. பனிப்போர் முடிவில், 1995 இல் பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும், 1999 இல் யூரோ வலயத்திலும், 2023 இல் நேட்டோவிலும் இணைந்தது. கல்வி, பொருளாதாரப் போட்டித்தன்மை, குடியியல் உரிமைகள், வாழ்க்கைத் தரம், மனித மேம்பாடு உள்ளிட்ட தேசிய செயல்திறனின் எண்ணற்ற அளவீடுகளில் பின்லாந்து முன்னணியில் உள்ளது.[17][18][19][20]
பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர்கள் | ||
---|---|---|
பெயர் | பிறப்பு–இறப்பு | பதவிக்காலம் |
கே. ஜே. ஸ்டால்பர்க் | 1865–1952 | 1919–1925 |
எல். கே. ரெலாண்டர் | 1883–1942 | 1925–1931 |
பி. இ. ஸ்வின்ஹூப்வுட் | 1861–1944 | 1931–1937 |
கே. கால்லியொ | 1873–1940 | 1937–1940 |
ஆர். றைட்டி | 1889–1956 | 1940–1944 |
கார்ல் மன்னெர்ஹெயிம் | 1867–1951 | 1944–1946 |
ஜூஹோ பாசிக்கிவி | 1870–1956 | 1946–1956 |
ஊரோ கெக்கோனென் | 1900–1986 | 1956–1981 |
மௌனோ கொய்விஸ்ட்டோ | 1923–2017 | 1982–1994 |
மார்ட்டி ஆட்டிசாரி | 1937– | 1994–2000 |
டார்ஜா ஹேலோனென் | 1943– | 2000–2012 |
சௌலி நீனிசுட்டோ | 1948– | 2012– |
நகராட்சி | மக்கட்தொகை | பரப்பளவு | அடர்த்தி |
---|---|---|---|
ஹெல்சின்கி | 564474 | 184.47 | 3061.00 |
யெஸ்ப்பூ | 235100 | 312.00 | 751.60 |
டாம்பரெ | 206171 | 523.40 | 393.90 |
வன்டா | 189442 | 240.54 | 780.40 |
டுர்க்கு | 177502 | 243.40 | 720.50 |
உளு | 130049 | 369.43 | 351.40 |
லகதி | 98773 | 134.95 | 730.10 |
குவோப்பியோ | 91026 | 1127.40 | 81.00 |
ஜய்வாச்கைலா | 84482 | 105.90 | 789.00 |
பொரி | 76211 | 503.17 | 150.83 |
லப்பேன்ரண்டா | 59077 | 758.00 | 77.70 |
ரொவனியெமி | 58100 | 7600.73 | 7.60 |
ஜொயென்ஸு | 57879 | 1173.40 | 49.10 |
வாசா | 57266 | 183.00 | 311.20 |
கோட்கா | 54860 | 270.74 | 203.00 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.