From Wikipedia, the free encyclopedia
இயேசுவின் விருத்தசேதனம் என்பது லூக்கா நற்செய்தியின்படி[1] இயேசு கிறித்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும். இதன் படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்த சேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்குக் அவரை கொண்டு சென்றார்கள். இந்த நாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது. இந்த நிகழ்வு கிறித்தவக் கலையில் 10ஆம் நூற்றாண்டு முதல் இடம்பெறத்துவங்கியது. முதலில் இயேசுவின் வாழ்க்கைச்சக்கரத்தில் ஒரு பகுதியாக மட்டுமே சித்தரிக்கப்பட்டாலும், பின்னாட்களில் இந்த நிகழ்வே தனி கருப்பொருளாக மாறியது.
இந்த நிகழ்வு இயேசுவின் விருத்த சேதன விழா என்னும் பெயரில் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் ஜனவரி 1 அன்றும், கத்தோலிக்க திருச்சபையில் ஜனவரி 3 அன்றும் விருப்ப நினைவு நாளாக ஜனவரி 3அன்று இயேசுவின் திருப்பெயர் எனவும் கொண்டாடப்படுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.