ஏப்ரல் 10 (April 10) கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.
- 1755 – சாமுவேல் ஹானிமன், செருமானிய-பிரான்சிய மருத்துவர் (இ. 1843)
- 1829 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (இ. 1912)
- 1847 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்க ஊடகவியலாளர், பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1911)
- 1865 – ஜாக் மைனர், அமெரிக்க-கனடிய சூழலியலாளர் (இ. 1944)
- 1887 – பெர்னார்டோ ஊசே, நோபல் பரிசு பெற்ற அர்ச்செந்தீன மருத்துவர் (இ. 1971)
- 1894 – கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1983)
- 1898 – ஆபிரகாம் கோவூர், இலங்கை-மலையாள பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர் (இ. 1978)
- 1917 – இராபர்ட் பர்ன்சு உட்வார்ட், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1979)
- 1927 – ஏ. சி. எஸ். ஹமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
- 1931 – கிஷோரி அமோன்கர், இந்துத்தானிப் பாடகர் (இ. 2017)
- 1932 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (இ. 2015)
- 1950 – எடீ ஹேசல், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1992)
- 1952 – ஸ்டீவன் சீகல், அமெரிக்க நடிகர்
- 1957 – அலிக்கோ டங்கோட்டே, நைஜீரியத் தொழிலதிபர்
- 1959 – இரா. கோபால், தமிழக பத்திரிகையாளர், இதழாசிரியர்
- 1979 – இரேச்சல் கோரீ, அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2003)
- 1980 – சார்லீ ஹூன்னம், ஆங்கிலேய நடிகர்
- 1986 – நாமல் ராசபக்ச, இலங்கை அரசியல்வாதி
- 1986 – ஆயிஷா தாக்கியா, இந்திய நடிகை
- 1990 – அலெக்ஸ் பெட்டிஃபேர், ஆங்கிலேய நடிகர்
- 1995 – இயன் நெல்சன், அமெரிக்க நடிகர்
- 1585 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502)
- 1656 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், இலங்கையின் இடச்சு இராணுவத் தளபதி (பி. 1621)
- 1688 – பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617)
- 1813 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1736)
- 1863 – ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி, இத்தாலிய வானியலாளர், நுண்ணோக்கியாளர் (பி. 1786)
- 1922 – பிரம்மானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1863)
- 1931 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (பி. 1883)
- 1954 – அகுத்தே லூமியேர, பிரான்சிய இயக்குநர் (பி. 1862)
- 1964 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழ்நாட்டு தவில் கலைஞர் (பி. 1910)
- 1993 – கிரிசு ஹானி, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1942)
- 1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1896)
- 1998 – அ. துரையரசன், தமிழக அரசியல்வாதி (பி. 1922)
- 1999 – தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (பி. 1912)
- 2010 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1949)
- 2012 – என். வரதராஜன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி
- 2013 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1925)
- 2015 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் (பி. 1930)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3