தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[1][2]

விரைவான உண்மைகள் தமிழ்நாட்டு முதலமைச்சர், பதவி ...
தமிழ்நாட்டு முதலமைச்சர்
Thumb
Thumb
தற்போது
மு. க. ஸ்டாலின்

7 மே 2021 (2021-05-07) முதல்
பதவிஅரசுத் தலைவர்
உறுப்பினர்
அறிக்கைகள்
வாழுமிடம்எண். 9, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு-600 028.
நியமிப்பவர்தமிழக ஆளுநர்
பதவிக் காலம்ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்)
உருவாக்கம்17 திசம்பர் 1920
(103 ஆண்டுகள் முன்னர்)
 (1920-12-17)
இணையதளம்www.tn.gov.in
மூடு

முதலமைச்சர் ஆட்சி முறைகள்

  • தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது சட்டமன்ற தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார்.
Thumb
தமிழ்நாடு 4 கோடியே அறுபது இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்டுள்ளது
  • முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார். ஆண்டு நிதி அறிக்கையை கால எல்லைக்குள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றா விட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். சட்டமன்ற உறுப்பினராய் இல்லாதவர் முதல்வர் ஆகினால், அவர் அடுத்த 6 மாதத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இல்லையேல், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
  • முதல்வர் இரண்டு ஆண்டுகளுக்கு மிகும் சிறை தண்டனை பெற்றால், பதவி விலக வேண்டும். தமிழக சட்டமன்ற தொகுதியான 234 தொகுதியில் 117க்கு குறையாத சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆக இருக்கமுடியும். மேலும் 117 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்தால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அக்கட்சிக்கு மற்றகட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் போனாலும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க நேரிடும்.
  • மேலும் தமிழக ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் வன்முறை செயல்கள், சட்டமன்றத்தில் சட்டமன்ற அமைச்சர்களிடையே ஏற்படும் அத்து மீறல்கள்களை மீறிய அசம்பாவித சம்பவங்கள், ஆளும் ஆட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நாட்டின் பிரதமர், முதலமைச்சர் பதவியில் உள்ளவர்களின் உடல்நல குறைவால் நீண்ட நாள் சிகிச்சையோ அல்லது துன்பியல் படுகொலையோ, இயற்கை மரணமோ ஏற்பட்டாலும். இந்திய அரசியலமைப்பு பிரிவு 356 (Article 356) சட்டத்தை பயன்படுத்தி தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நேரடியாக இந்திய சனாதிபதி (குடியரசு தலைவர்) தமிழக முதல்வரையும் அவர் மந்திரிசபையோடு சேர்த்து பதவி நீக்கம் செய்து ஆட்சியை கலைப்பதற்கு அதிகாரம் உண்டு.
  • இச்சட்டம் 1994க்கு பின் சனாதிபதியின் இந்த அதிகாரம் பயன்படுத்தபடுவது மிகவும் முக்கியமான கட்டமைப்புக்குள் வந்துள்ளது.
  • இவரே தமிழக அரசின் முழு தலைவர். இவரின் பரிந்துரைப்படியே ஆளுநர், மாநில அமைச்சரவையை நிர்மாணிப்பார். தமிழக அமைச்சரவை மாற்றங்களை முதல்வரின் பரிந்துரைப்படியே ஆளுநர் செய்ய முடியும். இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில், 1967க்கு பின், முதல்வர் தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசாணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்து நிர்வாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
  • இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.

சென்னை மாகாண முதல்வர்களின் பட்டியல்

Thumb
1913ல் சென்னை மாகாணம்

சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.

சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம்[3] 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

இந்திய அரசு சட்டம், 1935இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Legislative council)[4], எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.

1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.[5] 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[6]

மேலதிகத் தகவல்கள் வ. எண், உருவப்படம் ...
வ. எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அரசியல் கட்சி[lower-alpha 1] பதவிக் காலம் நியமித்தவர் சட்டமன்றத் தேர்தல்
தொடக்கம் முடிவு ஆட்சி[lower-alpha 2]
1 Thumb ஏ. சுப்பராயலு
(1855–1921)
மதராசு மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 17 திசம்பர் 1920 11 சூலை 1921[RES] 1ஆவது
(206 நாட்கள்)
பிரடெரிக் தேசிகெர் 1ஆவது
2 Thumb பனகல் ராஜா
(1866–1928)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 11 சூலை 1921 11 செப்டம்பர் 1923 1ஆவது
(792 நாட்கள்)
ரீடிங் பிரபு
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 19 நவம்பர் 1923 3 திசம்பர் 1926 2ஆவது
(1,111 நாட்கள்)
2ஆவது
3 Thumb பி. சுப்பராயன்
(1889–1962)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் சுயேட்சை 4 திசம்பர் 1926 27 அக்டோபர் 1930 1ஆவது
(1,423 நாட்கள்)
இர்வின் பிரபு 3ஆவது
4 Thumb பி. முனுசுவாமி நாயுடு
(1885–1935)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 27 அக்டோபர் 1930 4 நவம்பர் 1932[RES] 1ஆவது
(740 நாட்கள்)
இர்வின் பிரபு 4ஆவது
5 Thumb ராமகிருஷ்ண ரங்காராவ்
(1901–1978)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 5 நவம்பர் 1932 5 நவம்பர் 1934 1ஆவது
(730 நாட்கள்)
வெல்லிங்டன் பிரபு
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 5 நவம்பர்1934 4 ஏப்ரல் 1936[RES] 1ஆவது
(516 நாட்கள்)
5ஆவது
6 Thumb பி. டி. இராஜன்
(1892–1974)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 4 ஏப்ரல் 1936 24 ஆகத்து 1936[RES] 1ஆவது
(142 நாட்கள்)
(5) Thumb ராமகிருஷ்ண ரங்காராவ்
(1901–1978)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 24 ஆகத்து1936 1 ஏப்ரல் 1937 3ஆவது
(220 நாட்கள்)
விக்டர் ஹோப்
7 Thumb கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
(1875–1942)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் சுயேட்சை[lower-alpha 3][7][8][9] 1 ஏப்ரல் 1937 14 சூலை 1937[RES] 1ஆவது
(104 நாட்கள்)
1ஆவது
8 Thumb சி. இராஜகோபாலாச்சாரி
(1878–1972)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு 14 சூலை 1937 29 அக்டோபர் 1939[RES] 1ஆவது
(837 நாட்கள்)
Thumb ஆளுநர் ஆட்சி[10] பொ/இ 29 அக்டோபர் 1939 30 ஏப்ரல் 1946 (2,375 நாட்கள்)
9 Thumb த. பிரகாசம்
(1872–1957)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு 30 ஏப்ரல் 1946 23 மார்ச் 1947[RES] 1ஆவது
(327 நாட்கள்)
ஆர்ச்சிபால்ட் வேவல் 2ஆவது
10 Thumb ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
(1895–1970)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு 23 மார்ச் 1947 6 ஏப்ரல் 1949[RES] 1ஆவது
(745 நாட்கள்)
ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
11 Thumb பூ. ச. குமாரசுவாமி ராஜா
(1898–1957)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு 6 ஏப்ரல் 1949 26 ஜனவரி 1950 1ஆவது கிருஷ்ண குமாரசிங் பவசிங்
மூடு
குறிப்பு
  • பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • RES இராஜினாமா செய்தார்

சென்னை மாநில முதல்வர்களின் பட்டியல்

Thumb
1953ல் சென்னை மாநிலம் (மஞ்சள் நிறம்); இதற்கு முன் ஆந்திரா மாநிலத்தையும் உள்ளடிக்கி இருந்தது (நீல நிறம்)

சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.[11] சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ன் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.[3]

முதலமைச்சர்களின் கட்சியின் வண்ணக் குறிப்பு
குறிப்பு
  • பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • RES இராஜினாமா செய்தார்
மேலதிகத் தகவல்கள் வ. எண், உருவப்படம் ...
வ. எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அரசியல் கட்சி[lower-alpha 1] பதவிக் காலம் நியமித்தவர் சட்டமன்றத் தேர்தல்
தொடக்கம் முடிவு ஆட்சி[lower-alpha 2]
1 Thumb பூ. ச. குமாரசுவாமி ராஜா
(1898–1957)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு 26 ஜனவரி 1950 10 ஏப்ரல் 1952 1வது கிருஷ்ண குமாரசிங் பவசிங் 2ஆவது
2 Thumb சி. இராஜகோபாலாச்சாரி
(1878–1972)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு 10 ஏப்ரல் 1952 13 ஏப்ரல் 1954[RES] 2ஆவது
(733 நாட்கள்)
சிறீ பிரகாசா 1ஆவது
3 Thumb காமராசர்
(1903–1975)
குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு 13 ஏப்ரல் 1954 31 மார்ச் 1957 1ஆவது
(1,083 நாட்கள்)
சிறீ பிரகாசா
சாத்தூர் 13 ஏப்ரல் 1957 1 மார்ச் 1962 2ஆவது
(1,783 நாட்கள்)
ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் 2ஆவது
15 மார்ச் 1962 2 அக்டோபர் 1963[RES] 3ஆவது
(566 நாட்கள்)
விஷ்ணுராம் மேதி 3ஆவது
4 Thumb எம். பக்தவத்சலம்
(1897–1987)
திருப்பெரும்புதூர் இந்திய தேசிய காங்கிரசு 2 அக்டோபர் 1963 28 பிப்ரவரி 1967 1ஆவது
(1245 நாட்கள்)
விஷ்ணுராம் மேதி
5 Thumb சி. என். அண்ணாத்துரை
(1909–1969)
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம் 6 மார்ச் 1967 13 சனவரி 1969 1ஆவது
(680 நாட்கள்)
சர்தார் உஜ்ஜல் சிங் 4ஆவது
மூடு

தமிழக முதல்வர்களின் பட்டியல்

Thumb
தற்போதைய தமிழ்நாடு வரைபடம்

சென்னை மாகாணம் 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[12] தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.[4]

முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர் மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[13] முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.

முதலமைச்சர்களின் கட்சியின் வண்ணக் குறிப்பு
குறிப்பு
  • பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • RES இராஜினாமா செய்தார்
மேலதிகத் தகவல்கள் வ. எண், உருவப்படம் ...
வ. எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அரசியல் கட்சி[lower-alpha 1] பதவிக் காலம் நியமித்தவர் சட்டமன்றத் தேர்தல்
தொடக்கம் முடிவு ஆட்சி[lower-alpha 2]
1 Thumb சி. என். அண்ணாத்துரை
(1909–1969)
தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம் 14 சனவரி 1969 3 பிப்ரவரி 1969[†][14] 1ஆவது
(20 நாட்கள்)
சர்தார் உஜ்ஜல் சிங் 4ஆவது
இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
திருவல்லிக்கேணி திராவிட முன்னேற்றக் கழகம் 4 பிப்ரவரி 1969 9 பிப்ரவரி 1969 1ஆவது
(5 நாட்கள்)
2 Thumb மு. கருணாநிதி
(1924–2018)
சைதாப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 10 பிப்ரவரி 1969 5 சனவரி 1971 1ஆவது
(694 நாட்கள்)
* Thumb குடியரசுத் தலைவர் ஆட்சி பொ/இ 6 சனவரி 1971 14 மார்ச் 1971 1ஆவது
(68 நாட்கள்)
வி. வி. கிரி
(2) Thumb மு. கருணாநிதி
(1924–2018)
சைதாப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 15 மார்ச் 1971 31 சனவரி 1976 2ஆவது
(1783 நாட்கள்)
சர்தார் உஜ்ஜல் சிங் 5ஆவது
* Thumb குடியரசுத் தலைவர் ஆட்சி பொ/இ 1 பிப்ரவரி 1976 29 சூன் 1977 2ஆவது
(514 நாட்கள்)
பக்ருதின் அலி அகமது
3 Thumb எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
அருப்புக்கோட்டை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 30 சூன் 1977 17 பிப்ரவரி 1980 1ஆவது
(962 நாட்கள்)
பிரபுதாஸ் பட்வாரி 6ஆவது
* Thumb குடியரசுத் தலைவர் ஆட்சி பொ/இ 18 பிப்ரவரி 1980 8 சூன் 1980 3ஆவது
(111 நாட்கள்)
நீலம் சஞ்சீவ ரெட்டி
(3) Thumb எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
மதுரை மேற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9 சூன் 1980 15 நவம்பர் 1984 2ஆவது
(1620 நாட்கள்)
பிரபுதாஸ் பட்வாரி 7ஆவது
இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
ஆத்தூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16 நவம்பர் 1984 9 பிப்ரவரி 1985 2ஆவது
(85 நாட்கள்)
சுந்தர் லால் குரானா 8ஆவது
(3) Thumb எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
ஆண்டிப்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10 பிப்ரவரி 1985 24 திசம்பர் 1987[†] 3ஆவது
(1047 நாட்கள்)
இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
ஆத்தூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 25 திசம்பர் 1987 6 சனவரி 1988 3ஆவது
(12 நாட்கள்)
4 Thumb வி. என். ஜானகி
(1923–1996)
போட்டியிடவில்லை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 7 சனவரி 1988 30 சனவரி 1988 1ஆவது
(23 நாட்கள்)
* Thumb குடியரசுத் தலைவர் ஆட்சி பொ/இ 31 சனவரி 1988 26 சனவரி 1989 4ஆவது
(361 நாட்கள்)
ரா. வெங்கட்ராமன்
(2) Thumb மு. கருணாநிதி
(1924–2018)
துறைமுகம் திராவிட முன்னேற்றக் கழகம் 27 சனவரி 1989 30 சனவரி 1991 3ஆவது
(733 நாட்கள்)
பி. சி. அலெக்சாண்டர் 9ஆவது
* Thumb குடியரசுத் தலைவர் ஆட்சி பொ/இ 31 சனவரி 1991 23 சூன் 1991 5ஆவது
(143 நாட்கள்)
ரா. வெங்கட்ராமன்
5 Thumb ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
பர்கூர்,காங்கேயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 24 சூன் 1991 12 மே 1996 1ஆவது
(1784 நாட்கள்)
பீஷ்ம நாராயண் சிங் 10ஆவது
(2) Thumb மு. கருணாநிதி
(1924–2018)
சேப்பாக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 13 மே 1996 13 மே 2001 4ஆவது
(1826 நாட்கள்)
மாரி சன்னா ரெட்டி 11ஆவது
(5) Thumb ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
போட்டியிடவில்லை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 14 மே 2001 21 செப்டம்பர் 2001 2ஆவது
(130 நாட்கள்)[15]
எம். பாத்திமா பீவி 12ஆவது
6 Thumb ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
பெரியகுளம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 21 செப்டம்பர் 2001 1 மார்ச் 2002[RES] 1ஆவது
(160 நாட்கள்)
சக்ரவர்த்தி ரங்கராஜன்
(5) Thumb ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
ஆண்டிப்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2 மார்ச் 2002 12 மே 2006 3ஆவது
(1532 நாட்கள்)[15]
பி.எஸ். ராம்மோகன் ராவ்
(2) Thumb மு. கருணாநிதி
(1924–2018)
சேப்பாக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 13 மே 2006 15 மே 2011[16] 5ஆவது[17]
(1828 நாட்கள்)
சுர்சித் சிங் பர்னாலா 13ஆவது
(5) Thumb ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
திருவரங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16 மே 2011 27 செப்டம்பர் 2014 4ஆவது[18]
(1230 நாட்கள்)
14ஆவது
காலியாக இருந்தது (28 செப்டம்பர் 2014)
(6) Thumb ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
போடிநாயக்கனூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 29 செப்டம்பர் 2014[19] 22 மே 2015[RES][20] 2ஆவது
(235 நாட்கள்)
கொனியேட்டி ரோசையா
(5) Thumb ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
ஆர். கே. நகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 23 மே 2015[21] 22 மே 2016 5ஆவது
(366 நாட்கள்)
23 மே 2016[22] 5 திசம்பர் 2016[†] 6ஆவது
(196 நாட்கள்)
15ஆவது
(6) Thumb ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
போடிநாயக்கனூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6 திசம்பர் 2016[23] 15 பிப்ரவரி 2017[RES][24] 3ஆவது
(71 நாட்கள்)
சி. வித்தியாசாகர் ராவ்
7 Thumb எடப்பாடி கே. பழனிசாமி
(1954–)
எடப்பாடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16 பிப்ரவரி 2017[25] 06 மே 2021 1ஆவது (1540 நாட்கள்)
8 Thumb மு. க. ஸ்டாலின்
(1953–)
கொளத்தூர் திராவிட முன்னேற்றக் கழகம் 07 மே 2021[26] தற்போது 1ஆவது பன்வாரிலால் புரோகித் 16ஆவது
மூடு

புள்ளிவிவரம்

கட்சி வாரியாக முதலமைச்சர்களின் எண்ணிக்கை பட்டியல்
மேலதிகத் தகவல்கள் வ. எண், பெயர் ...
வ. எண் பெயர் கட்சி பதவிக் காலம்
அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்த காலம் பதவியில் இருந்த மொத்த நாட்கள்
1 மு. கருணாநிதி திமுக 6 ஆண்டுகள், 355 நாட்கள் 18 ஆண்டுகள், 360 நாட்கள்
2 ஜெ. ஜெயலலிதா அதிமுக 4 ஆண்டுகள், 323 நாட்கள் 14 ஆண்டுகள், 124 நாட்கள்
3 எம். ஜி. இராமச்சந்திரன் அதிமுக 7 ஆண்டுகள், 198 நாட்கள் 10 ஆண்டுகள், 65 நாட்கள்
4 கே. காமராஜ் காங்கிரசு 9 ஆண்டுகள், 172 நாட்கள் 9 ஆண்டுகள், 172 நாட்கள்
5 எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக 4 ஆண்டுகள், 79 நாட்கள் 4 ஆண்டுகள், 79 நாட்கள்
6 எம். பக்தவத்சலம் காங்கிரசு 3 ஆண்டுகள், 154 நாட்கள் 3 ஆண்டுகள், 154 நாட்கள்
7 சி. இராஜகோபாலாச்சாரி காங்கிரசு 2 ஆண்டுகள், 3 நாட்கள் 2 ஆண்டுகள், 3 நாட்கள்
8 சி. என். அண்ணாத்துரை திமுக 1 ஆண்டு, 334 நாட்கள் 1 ஆண்டு, 334 நாட்கள்
9 மு. க. ஸ்டாலின் திமுக 3 ஆண்டுகள், 157 நாட்கள் 3 ஆண்டுகள், 157 நாட்கள்
10 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 237 நாட்கள் 1 ஆண்டு, 106 நாட்கள்
11 ஜானகி இராமச்சந்திரன் அதிமுக 23 நாட்கள் 23 நாட்கள்
தற்காலிக முதல்வர் இரா. நெடுஞ்செழியன் அதிமுக/திமுக 14 நாட்கள் 21 நாட்கள்
மூடு
கட்சி வாரியாக பட்டியல்
மேலதிகத் தகவல்கள் வ. எண், அரசியல் கட்சி ...
வ. எண் அரசியல் கட்சி முதலமைச்சர்களின் எண்ணிக்கை முதல்வர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள்
1 அதிமுக 5+1 தற்காலிகம் 11004 நாட்கள்
2 திமுக 3+1 தற்காலிகம் 8893 நாட்கள்
3 காங்கிரசு 3 5442 நாட்கள்
மூடு
கட்சி வாரியாக முதலமைச்சர்களின் எண்ணிக்கை
1
2
3
4
5
6
அதிமுக
திமுக
காங்கிரசு
கட்சி வாரியாக முதல்வர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள்
2,500
5,000
7,500
10,000
12,500
15,000
அதிமுக
திமுக
காங்கிரசு

தற்போது வாழும் முன்னாள் முதல்வர்கள்

11 அக்டோபர் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் இருவர் வாழுகின்றனர்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்

24 சூன், 199112 மே, 1996,
14 மே, 200121 செப்டம்பர், 2001,
2 மார்ச், 200212 மே, 2006,
16 மே, 201127 செப்டம்பர், 2014,
23 மே, 2015 - 23 மே, 2016
23 மே, 2016 5 திசம்பர், 2016
10 பிப்ரவரி, 19694 சனவரி, 1971,
15 மார்ச்சு, 197131 சனவரி, 1976,
27 சனவரி, 198930 சனவரி, 1991,
13 மே, 199613 மே, 2001,
13 மே, 200613 மே, 2011.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. இந்த பத்தியில் முதல்வரின் கட்சி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; இவை இங்கே பட்டியலிடப்படவில்லை.
  2. தொடர்புடைய காலத்தில் குறிப்பிடப்பட்ட நபரின் ஆட்சி வரிசை எண்
  3. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அமைச்சரவை மீது ஆளுநரின் அதிகாரம் பிடிக்காததால், ஆட்சி அமைக்க மறுத்தது. மெட்ராஸ் கவர்னர் எர்ஸ்கின் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அல்லாத மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தார். சீனிவாச சாஸ்திரிக்கு முதலில் இடைக்கால அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியை வழங்கினார் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார். இறுதியில் 1 ஏப்ரல் 1937 இல் குர்மா வெங்கட ரெட்டி நாயுடுவின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அது சூலை வரை நீடித்தது. பிறகு காங்கிரஸ் வைஸ்ராய் லின்லித்கோ உறுதிமொழியை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்தது

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.