இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்

முதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி, மாநில அளவில் ஆளுநர் சட்டப்படி தலைவராக இருப்பினும், நடைமுறைப்படி செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

இந்தியாவில் தற்போது ஆளும் கட்சிகள்

அக்டோபர் 2019 முதல் ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. மற்ற 30 மாநிலங்களில் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி ஒருவரே பதவியில் உள்ள பெண் முதல்வர் ஆவார்.2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ள ஒடிசாவின் நவீன் பட்நாயக் நீண்ட காலம் பதவியில் உள்ள முதல்வர் ஆவார். மிசோரமின் ஜோரம்தங்கா மூத்த முதல்வரும் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு இளைய முதல்வரும் ஆவர். 12 மாநிலங்களில் பாஜகவும் 5 மாநிலங்களில் காங்கிரசு கட்சியும் 2 மாநிலங்களில் ஆம் அத்மியும் ஆட்சியில் உள்ளன. மற்ற கட்சிகள் எதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தில் ஆட்சியில் இல்லை.

29 இந்திய மாநிலங்களுக்கும் இரண்டு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்[1]. அவர்களது பட்டியல் வருமாறு:

மாநிலங்களின் முதலமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், மாநிலம் ...
எண் மாநிலம்
பெயர் புகைப்படம் பதவியேற்ற நாள்
(பதவிக்காலம்)
கட்சி சான்றுகள்
1 ஆந்திரப் பிரதேசம்
(பட்டியல்)
நா. சந்திரபாபு நாயுடு 12 சூன் 2024
(0 ஆண்டுகள், 260 நாட்கள்)
தெலுங்கு தேசம் கட்சி
2 அருணாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
பெமா காண்டு 17 சூலை 2016
(8 ஆண்டுகள், 225 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [2][3]
3 அசாம்
(பட்டியல்)
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 10 மே 2021
(3 ஆண்டுகள், 293 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [4]
4 பீகார்
(பட்டியல்)
நிதிஷ் குமார் 22 பெப்ரவரி 2015
(10 ஆண்டுகள், 5 நாட்கள்)
ஐக்கிய ஜனதா தளம் [5]
5 சத்தீசுக்கர்
(பட்டியல்)
விஷ்ணு தேவ் சாய் 13 டிசம்பர் 2023 பாரதிய ஜனதா கட்சி [6]
6 தில்லி தேசிய தலைநகர் பகுதி
(பட்டியல்)
ரேகா குப்தா 20 பெப்ரவரி 2025
(0 ஆண்டுகள், 7 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி
7 கோவா
(பட்டியல்)
பிரமோத் சாவந்த் 19 மார்ச்சு 2019
(5 ஆண்டுகள், 345 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [7]
8 குசராத்
(பட்டியல்)
புபேந்திர படேல் 13 செப்டம்பர் 2021
(3 ஆண்டுகள், 167 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [8]
9 அரியானா
(பட்டியல்)
நயாப் சிங் சைனி 12 மார்ச்சு 2024
(0 ஆண்டுகள், 352 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி
10 இமாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
சுக்விந்தர் சிங் சுகு 10 திசம்பர் 2022
(2 ஆண்டுகள், 79 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [9]
11 சம்மு காசுமீர்
(பட்டியல்)
உமர் அப்துல்லா 16 அக்டோபர் 2024
(0 ஆண்டுகள், 134 நாட்கள்)
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
12 சார்க்கண்டு
(பட்டியல்)
ஹேமந்த் சோரன் 4 சூலை 2024
(0 ஆண்டுகள், 238 நாட்கள்)
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [10]
13 கர்நாடகா
(பட்டியல்)
சித்தராமையா சித்தராமையா 27 சூலை 2021
(3 ஆண்டுகள், 215 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [11]
14 கேரளா
(பட்டியல்)
பினராயி விஜயன் 25 மே 2016
(8 ஆண்டுகள், 278 நாட்கள்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [12]
15 மத்தியப் பிரதேசம்
(பட்டியல்)
மோகன் யாதவ் 12 டிசம்பர் 2023 பாரதிய ஜனதா கட்சி [13]
16 மகாராட்டிரம்
(பட்டியல்)
தேவேந்திர பத்னாவிசு 5 திசம்பர் 2024
(0 ஆண்டுகள், 84 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [14]
17 மணிப்பூர்
(பட்டியல்)
குடியரசுத் தலைவர் ஆட்சி 13 பெப்ரவரி 2025
(0 ஆண்டுகள், 14 நாட்கள்)
18 மேகாலயா
(பட்டியல்)
கான்ராட் சங்மா 6 மார்ச்சு 2018
(6 ஆண்டுகள், 358 நாட்கள்)
தேசிய மக்களின் கட்சி [15]
19 மிசோரம்
(பட்டியல்)
லால்துஹோமா 8 டிசம்பர் 2023 ஜோரம் மக்கள் இயக்கம் [16]
20 நாகாலாந்து
(பட்டியல்)
நைபியூ ரியோ 8 மார்ச்சு 2018
(6 ஆண்டுகள், 356 நாட்கள்)
தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி [17]
21 ஒடிசா
(பட்டியல்)
மோகன் சரண் மாச்சி 11 சூன் 2024
(0 ஆண்டுகள், 261 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [18]
22 புதுச்சேரி
(பட்டியல்)
ந. ரங்கசாமி 7 மே 2021
(3 ஆண்டுகள், 265 நாட்கள்)
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் [19]
23 பஞ்சாப்
(பட்டியல்)
பகவந்த் மான் 16 மார்ச்சு 2022
(2 ஆண்டுகள், 348 நாட்கள்)
ஆம் ஆத்மி கட்சி [20]
24 ராஜஸ்தான்
(பட்டியல்)
பஜன்லால் சர்மா 13 திசம்பர் 2023
(1 ஆண்டு, 76 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [21][22]
25 சிக்கிம்
(பட்டியல்)
பிரேம் சிங் தமாங் 27 மே 2019
(5 ஆண்டுகள், 276 நாட்கள்)
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா [23]
26 தமிழ்நாடு
(பட்டியல்)
மு க. ஸ்டாலின் 7 மே 2021
(3 ஆண்டுகள், 296 நாட்கள்)
திராவிட முன்னேற்றக் கழகம் [24]
27 தெலங்கானா அனுமுலா ரேவந்த் ரெட்டி 1 ஆண்டு, 82 நாட்கள் இந்திய தேசிய காங்கிரசு
28 திரிபுரா
(பட்டியல்)
மாணிக் சாகா 15 மே 2022
(2 ஆண்டுகள், 288 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [25]
29 உத்தரப் பிரதேசம்
(பட்டியல்)
யோகி ஆதித்யநாத் 19 மார்ச்சு 2017
(7 ஆண்டுகள், 345 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [26]
30 உத்தராகண்டம்
(பட்டியல்)
புஷ்கர் சிங் தாமி 4 சூலை 2021
(3 ஆண்டுகள், 238 நாட்கள்) 4 சூலை 2021
பாரதிய ஜனதா கட்சி [27]
31 மேற்கு வங்காளம்
(பட்டியல்)
மம்தா பானர்ஜி 20 மே 2011
(13 ஆண்டுகள், 283 நாட்கள்)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு [28]
மூடு
  • ஆட்சிப்பகுதிகள்

கட்சிவாரியாக

2022ல் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளின் நடப்பு பட்டியல்:

மேலதிகத் தகவல்கள் கட்சி, மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் வென்ற எண்ணிக்கை ...
கட்சி மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் வென்ற எண்ணிக்கை மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் நடப்பு கூட்டணி (டிசம்பர், 2022ன் படி)
பாரதிய ஜனதா கட்சி 15 அருணாச்சல் பிரதேசம், அரியானா, குசராத், அசாம், உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, மகாராட்டிரம், திரிபுரா, மேகாலயா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான், புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 7 இமாச்சலப் பிரதேசம், கருநாடகம், தெலங்கானா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 கேரளா
திராவிட முன்னேற்றக் கழகம் 1 தமிழ்நாடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 சார்க்கண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 1 ஆந்திரப் பிரதேசம்
நாகாலாந்து மக்கள் முன்னணி 1 நாகாலாந்து தேசிய ஜனநாயக கூட்டணி
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 1 சிக்கிம்
ஐக்கிய ஜனதா தளம் 1 பீகார் ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆம் ஆத்மி கட்சி 1 பஞ்சாப், தில்லி†,
பிஜு ஜனதா தளம் 1 ஒரிசா
திரிணாமுல் காங்கிரசு 1 மேற்கு வங்காளம்
ஜோரம் மக்கள் இயக்கம் 1 மிசோரம்
தேசிய மக்கள் கட்சி 1 மேகாலயா
மூடு

தற்போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 மாநிலங்களிலும் 1 ஆட்சிப்பகுதியிலும் (புதுச்சேரி) ஆட்சி புரிகின்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 4 மாநிலங்கலும்; ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப்பகுதிலும் (தில்லி) பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி புரிகின்றது. மீதமுள்ள 9 மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் ஆட்சி புரிகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.