ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ) என்பது காங்கிரஸ் கட்சி தலைமையில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தொடங்கப்பட்ட ஒரு கூட்டணி அமைப்பாகும்.
கூட்டணி வரலாறு
- இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலமான 2004 முதல் 2014 வரையிலான ஆட்சி காலம் வரை ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும். இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் அக்காலகட்டத்தில் இடம் பெற்று இருந்தது.
- இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கும் மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி தலைவராக இருந்தார்.
- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆனது காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு 2004 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோல்வியுறச் செய்தது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.
குறைந்தபட்ச செயல் திட்டம்
- இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன்படி ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.
ஆரம்பகால ஆதரவுகள்
ஆரம்பத்தில் 59 எம்பிக்களை கொண்டிருந்த இடது சாரிகள் ஐமுகூ க்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கினர். அதேபோன்று கூட்டணியில் இல்லாவிட்டாலும் சிறு கட்சிகளும் வெளியிலிருந்து வழங்கினர். அதில் 39 எம்பிக்களைக் கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சி, 4 எம்பிக்களைக் கொண்டிருந்த அஇஅதிமுக, 3 எம்பிக்களை கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 19 எம்பிக்களை கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நம்பிக்கை வாக்கெடுப்புகள் வந்தால் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தன. எனினும் இக்கட்சிகள் அரசின் அங்கமாக இருக்கவில்லை. எனவே குறைந்தபட்சம் 543 மொத்த எம்பிக்களில் 335 எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தது.
காங்கிரசுடன் கொள்கை முரண்பாடு இருந்த போதிலும், இடது சாரிகள் மதச்சார்பற்ற அரசு தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.[1]
ஆதரவை திரும்பப் பெறுதல்
தெலுங்கானா இராஷ்டிரிய சமிதி
கூட்டணியிலிருந்து வெளியேறிய முதல் கட்சி. ஆந்திரப்பிரதேச அரசிலிருந்து முதலில் வெளியேறி அக்கட்சி பின்னர் மத்திய அரசிலிருந்து வெளியேறினார் அதன் தலைவர் சந்திரசேகர ராவ். பின்னர் அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.[2]
மதிமுக
16 மார்ச்சு 2007ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.
பகுஜன் சமாஜ் கட்சி
உபியில் தமது கட்சிக்கு எதிர்த்து வந்த்தைத் தொடர்ந்து 21 சூன் 2008ல் விலகிக் கொண்டது.
இடது சாரிகள்
இந்திய-அமெரிக்க நியூக்லியர் ஒப்பந்ததில் இந்தியா கைசாத்தியதைத் தொடர்ந்தது இதை எதிர்த்து பிரகாஸ் காரத் தலைமையிலான மார்க்சிஸ் கம்யூ கட்சி 8 சூலை 2008ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.
ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி
காங்கிரசின் உமர் அப்துல்லா தலைமையிலான அரசிற்கு ஆதரவைத் தொடர்ந்து மஹ்பூபா முப்தி 4 சனவரி 2009ல் தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார்.[3]
பாட்டாளி மக்கள் கட்சி
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக 26 மார்ச்சு 2009ல் பாமக தலைவர் அறிவித்தார். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தமது கட்சி உறுப்பினர்கள் இருவர் பதவி விலகுவர் என்று அறிவிக்கப்பட்டது.
அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்
12 நவம்பர் 2012ல் தமது ஆதரவை விலக்கிக் கொண்டது.
திரிணாமுல் காங்கிரஸ்
சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கை காரணமாக 18 செப்டம்பர் 2012ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா
சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கை காரணமாக 2012ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
திராவிட முன்னேற்றக் கழகம்
- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட திமுக கட்சியினர் செய்த ஊழல் வழக்கை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நீக்கம் செய்யாததாலும். 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் இனப்படுகொலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை எதிராக செயல்பட்டதால். திமுக மக்களவை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதவி விலக வலியுறுத்தப்பட்டு கடிதம் பெறப்பட்டது.
- எனினும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மக்களிடம் தனிப்பெரும்பான்மை வாக்குகள் இல்லாததால் 2016 சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது.[4]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.