தேசியவாத காங்கிரசு கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

தேசியவாத காங்கிரசு கட்சி

தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் 10.10 நேரத்தை காட்டும் கடிகாரம் ஆகும். இந்த கட்சியானது மகாராட்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது.

விரைவான உண்மைகள் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுருக்கக்குறி ...
தேசியவாத காங்கிரஸ் கட்சி
சுருக்கக்குறிஎன். சி. பி
தலைவர்அஜித் பவார்
நிறுவனர்சரத் பவார்,
பி. ஏ. சங்மா,
தாரிக் அன்வர்
மக்களவைத் தலைவர்சுனில் தட்கரே
தொடக்கம்10 சூன் 1999 (25 ஆண்டுகள் முன்னர்) (1999-06-10)
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
தலைமையகம்10, பிஷாம்பர் மார்க், புது தில்லி, இந்தியா-110001
மாணவர் அமைப்புதேசியவாத காங்கிரஸ் மாணவர் அணி
இளைஞர் அமைப்புதேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணி
பெண்கள் அமைப்புதேசியவாத காங்கிரஸ் மகளிர் அணி
கொள்கை
அரசியல் நிலைப்பாடுசற்றே வலதுசாரி கோட்பாடு
நிறங்கள்     பசிபிக் நீலம்
இ.தே.ஆ நிலைமாநில கட்சி[2]
கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
3 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
இந்திய மாநிலங்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மராட்டிய சட்டமன்ற மேலவை)
8 / 78
தேர்தல் சின்னம்
Thumb
இணையதளம்
ncponline.in
இந்தியா அரசியல்
மூடு

சரத் பவார், பி. ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்ததினால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.[3] நீக்கப்பட்ட இம்மூவரும் 1999 மே 25 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.

மகாராட்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரசு கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் நெருக்கமடைந்ததை தொடர்ந்து சரத்பவாருடன் ஏற்பட்ட வேறுபாடுகளால் பி. ஏ. சங்மா, 2004-ல் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். பின்பு டிசம்பர் 20, 2005 ல் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.[4]

2004 பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட இக்கட்சி 9 தொகுதிகளை வென்றது. 2004 லிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கமாக உள்ள இக்கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் பங்கு பெற்று வந்துள்ளது. மகாராட்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்த கூட்டணி அரசில், இக்கட்சி அங்கம் வகித்தது. மேலும் துணை முதல்வர் பதவி இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

கட்சியில் பிளவு

1 சூலை 2023 அன்று அஜித் பவார் தலைமையில் இக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. இக்கட்சியின் 34 மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர்கள், 1 மக்களவை உறுப்பினர் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) பிரிவில் இணைந்தனர்.[5] [6] மேலும் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரசு கட்சியின் அனைத்து 6 சட்டமன்ற உறுப்பினர்களும் அஜித் பவார் தலைமையிலான அணியில் இணைந்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளிஇணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.