மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | |
---|---|
சுருக்கக்குறி | மதிமுக |
நிறுவனர் | வைகோ |
பொதுச் செயலாளர் | வைகோ |
மாநிலங்களவைத் தலைவர் | வைகோ |
தொடக்கம் | மே 6, 1994 |
தலைமையகம் | தாயகம், எழும்பூர், சென்னை |
தொழிலாளர் அமைப்பு | மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி |
கொள்கை | சமூக சனநாயகம் |
கூட்டணி | 1)மதிமுக : சொந்த கூட்டணி மக்கள் ஜனநாயக முன்னணி (1996–1998) & மக்கள் நலக் கூட்டணி (2015–2016) 2)பாரதிய ஜனதா கட்சி : (தேஜகூ) (1998–2004 & 2014–2014) 3)அதிமுக : ஜனநாயக மக்கள் கூட்டணி (2006–2009) 4)அதிமுக–சிபிஎம் : (ஐதேமுகூ) (2009–2011) 5)திமுக–காங்கிரஸ் : (ஐமுகூ) (2004–2007) & (2019–தொடர் கூட்டணி) 6)திமுக : (மமுகூ) (2021–தற்போது வரை) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 245
(தற்போது 242 உறுப்பினர்கள்) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 4 / 234
|
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
mdmk.org.in | |
இந்தியா அரசியல் |
தேர்தல் பங்களிப்பு
- 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தலில் தனது மதிமுகவுடன் அன்றைய மத்திய காங்கிரசின் எதிர்கட்சியான ஜனதா தளம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது ஆனால் கூட்டணி பெயர் பிரச்சனையால் பாமக, திவாரி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், தமது சொத்துக்கணக்கை வெளியிட்டார் வை. கோபால்சாமி. கழகத்தின் தலைமையில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், எதிர்பாராத முடிவாக அவ்வாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளோடு இணைந்து போட்டியிட்ட மதிமுகவும் படுதோல்வி அடைந்ததை அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தனது மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றிருந்த ஜனதாதளமும், சிபிஎம்மும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மாறாக வைகோவை வெளியேற்றிய கட்சியான திமுக இம்முறை வெற்றி பெறவும் தனது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலே பெரும் தோல்வி அடைந்தது.
- 1998 ஆம் ஆண்டு மத்தியில் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்ததால். மீண்டும் நடைபெற்ற 1998 நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க தனது திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அங்கம் வகித்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமராக வாஜ்பாய் மத்தியில் ஆட்சி ஆளுவதற்க்கு ஆதரவு அளித்த ம.தி.மு.க முதல் முறையாக வைகோ மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்பேற்றார்.
- 1999 ஆம் ஆண்டு அதிமுக-பாஜக விற்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் ஒரே ஆண்டில் மீண்டும் வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்த போது வைகோவை வெளியேற்றிய கட்சியான திமுக–பாஜகவின் தலைமையிலான தேஜகூ கூட்டணியில் இணைந்ததால். பிரதமர் வாஜ்பாய் அவர்களின் வேண்டுகோளை மதித்து வைகோ அக்கூட்டணியில் தொடர்ந்தார். சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. இம்முறை வாஜ்பாய் அமைச்சரவையில் மதிமுக சார்பில் இரண்டு அமைச்சர்கள் மத்திய இலாக்கா மந்திரியாக பொறுப்பெற்று கொண்டனர். இரண்டாவது முறை வைகோ மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்பு வகித்தார்.
- 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையால் ம.தி.மு.க தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
- 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் அங்கம் வகிக்கித்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க இம்முறையும் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக–மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆதரவுக்கு ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. அதை காரணம் காட்டி வைகோ அவர்கள் மதிமுக ஆட்சியில் பங்கு ஏற்காமல் பிரச்சாரங்களின் அடிப்படையில் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தார். பின்பு வைகோ ஈழ தமிழர்கள் விவகாரத்தில் எதிராக செயல்பட்ட கூட்டணி தலைமை கட்சியான காங்கிரசின் செயல்பாட்டை கண்டித்து 2007 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார்.
- 2006 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்த ம.தி.மு.க இத்தேர்தலில் தொகுதி உடன்பாட்டு பிரச்சனையால் வைகோ அவர்கள் எதிர்கட்சியான அதிமுகவில் தன்னை முந்தைய ஆட்சி காலத்தில் 19 மாதங்கள் சிறையில் அடைத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைந்தது மக்களிடையே விமர்சிக்கபட்டாலும். இத்தேர்தலில் அதிமுக-மதிமுகவிற்க்கு 35 தொகுதிகள் வழங்கியது அதில் வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், கம்பம், தொண்டான்முத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்கு சென்றனர். மேலும் இத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பலமான எதிர்கட்சித்தலைவியாக ஜெயலலிதா செயல்பட்டார். அதே போல் கூட்டணியில் மதிமுகவின் வைகோ அவர்கள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் சவாலாக செயல்பட்டார்.
- 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக இத்தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இத்தேர்தலின் போது எதிர்கட்சியான திமுக-காங்கிரஸ் கூட்டணியையும் அக்கட்சியில் நடந்த குறைகளையும், ஈழதமிழற்களின் இனபடுகொலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்குகள், திமுக அமைச்சர்களின் அத்து மீறிய அதிகார வன்முறை செயல்களை கண்டித்து வைகோ அவர்கள் இக்குற்றங்களை நீதிமன்றத்தில் வழக்காக உருவாக்கி தாக்கல் செய்தும். அதை மக்களிடையே வீதி வீதியாக சென்று பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்தார்.
- 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த ம.தி.மு.க இத்தேர்தலில் தொகுதி பங்கீடு தராத காரணத்தால் கூட்டணியிலிருந்து விலகியது. இதை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தது.
- 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் ம.தி.மு.க கட்சி அப்போது மத்தியில் நடந்து கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய காங்கிரஸ் இடியமீன் ஆட்சியை நாட்டைவிட்டு விரட்டவேண்டும். என்ற நோக்கத்துடன் காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை ஆதரித்து மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை அதற்கு விரைவில் மோடி இந்தியாவிற்கு பிரதமராக தேவை என்று கூறி தமிழகம் முழுவதும் மோடி அலையை உருவாக்கினார். அதே போல் தமிழகத்திலும் திமுக, அதிமுக கட்சிக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி வரவேண்டும் என்று வைகோ பிரச்சாரத்தில் முழங்கினார். அதனால் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு ம.தி.மு.க-பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 10 வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது அக்கட்சியில் நரேந்திர மோடி பிரதமரானார். ஆனால் தமிழகத்தில் பாஜகவின் தலைமையிலான தேஜகூவில் பாஜக மற்றும் பாமக ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்றாலும் ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதைவிட வைகோ தான் இத்தேர்தல் பிரச்சாரத்தில் உயிர் மூச்சாக முழங்கி வெற்றி பெற வைத்த பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை பிரதமர் இராஜபக்சே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட வைகோ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என்ற தமிழக தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆளும் கட்சிகளிடம் கூட்டணியில் ஈடுபடாமல் ம.தி.மு.க தலைமையில் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சராக அறிவித்து அவரது தேமுதிக-மதிமுகவுடன் விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் போன்ற தமிழக உள்நாட்டு கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மிக பெரிய கூட்டணியாக அமைந்தது. இக்கூட்டணி தமிழக தேர்தல் வரலாற்றிலே தமிழகத்தில் வெற்றி பெறும் கட்சிகளான திமுக–அதிமுக கட்சிகளுடன் கூட்டணியில் இணையும் பெரும் கட்சிகளை தனது கூட்டணியில் இணைத்து கொண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று சவாலாக மாற்று ஆட்சி தத்துவத்தில் வைகோ அவர்கள் வழி நடத்தி சென்ற போதிலும் இத்தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது.
- 2019 நாடாளமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரும் முதலமைச்சர்கள் ஆன கருணாநிதி, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த இத்தேர்தலில் வைகோ அவர்கள் அதற்கு முந்தைய காலத்தில் கடுமையாக விமர்சித்து வந்த திமுக மற்றும் காங்கிரசுடன் வெகுநாள் கழித்து மீண்டும் தனது மதிமுக இக்கூட்டணியில் சேர்ந்து செயல்பட்டது. தேர்தலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே திமுகவின் அடுத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்று திமுகவே அறிவிக்காத நிலையில் வைகோ அவர்கள் ஸ்டாலினை திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். பின்பு வைகோவும், ஸ்டாலினும் தோழமை பாராட்டி வந்த நிலையில் இந்த பாராளமன்ற தேர்தலில் வைகோ அவர்களை திமுகவில் விலக்கபட்டதிலிருந்து தனது தந்தை கருணாநிதியே வெகுநாட்களாக வழங்காத மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் வழங்கி பெருமைபடுத்தினார். இத்தேர்தலில் எதிரணியில் அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா மர்மமான இறப்பை கண்டித்தும் அவர் இறப்பிற்கு பின் அவரது அதிமுக ஆட்சி கலைக்கபடாமல் மத்திய பாஜகவின் பிரதமர் மோடியின் வரைமுறையற்ற அதிகாரத்தையும் அடிமை கூட்டணி அதிமுக-பாஜக அரசை எதிர்த்தும் மத்தியில் பாஜக அரசின் மதவாத செயல்களையும் கண்டித்து வைகோ பிரச்சாரம் செய்தார். இத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இம்முறை மதிமுகவிற்க்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு திமுகவின் அதிகார பூர்வமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். இம்முறை 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 30 வருடங்கள் கழித்து நான்காவது முறையாக வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
- 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக அக்கட்சி உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் திமுக தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
தேர்தல் வெற்றிகள்
வரிசை எண் | நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு | தொகுதிகள் |
---|---|---|
1 | 1998 | சிவகாசி, திண்டிவனம், பழநி |
2 | 1999 | சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு |
3 | 2004 | சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி |
4 | 2009 | ஈரோடு |
5 | 2019 | ஈரோடு |
6 | 2024 | திருச்சிராப்பள்ளி |
வரிசை எண் | 2006 சட்டமன்றத் தேர்தல் | 2021 சட்டமன்றத் தேர்தல் |
---|---|---|
1 | சிவகாசி | சாத்தூர் |
2 | விருதுநகர் | வாசுதேவநல்லூர் |
3 | வாசுதேவநல்லூர் | மதுரை தெற்கு |
4 | திருமங்கலம் | அரியலூர் |
5 | கம்பம் | |
6 | தொண்டாமுத்தூர் |
ஒன்றிய அமைச்சரவையில் பங்கு
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
செஞ்சி என். இராமச்சந்திரன் | நிதி | 30 செப்டம்பர் 2000 - 1 யூலை 2002 |
செஞ்சி என். இராமச்சந்திரன் | நிதி & பெருநிறுவன விவகாரம் | 1 யூலை 2002 - 24 மே 2003 |
செஞ்சி என். இராமச்சந்திரன் | நெசவு (டெக்சுடைல்) | 13 அக்டோபர் 1999 - 30 செப்டம்பர் 2000 |
செஞ்சி என். இராமச்சந்திரன் | நெசவு (டெக்சுடைல்) | 8 செப்டம்பர் 2003 - 30 டிசம்பர் 2003 |
மு. கண்ணப்பன் | மரபுசாரா எரிசக்தி | 13 அக்டோபர் 1999 - 30 டிசம்பர் 2003 |
தேர்தல் சின்னம்
1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது.
சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[1][2]
2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.
முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்
பதவி | பெயர் |
---|---|
நிறுவன பொதுச்செயலாளர் | வைகோ |
அவைத்தலைவர் | ஆடிட்டர் அர்ஜூனராஜ் |
முதன்மை செயலாளர் | துரை வைகோ |
துணை பொதுச்செயலாளர்கள் | மல்லை சத்யா |
செஞ்சி ஏ. கே. மணி | |
ஆடுதுறை முருகன் | |
ரொகையா பீவி சேக் அகமது | |
தி. மு.இராசேந்திரன் | |
கொள்கை விளக்க அணி செயலாளர் | வந்தியத்தேவன் |
பொருளாளர் | நெய்வேலி செந்திலதிபன் |
மாணவர் அணி மாநில செயலாளர் | பால.சசிகுமார் |
அமைப்புச்செயலாளர் | பிரியக்குமார் |
செய்தி தொடர்பு செயலாளர் | நன்மாறன் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.