பச்சை = அதிமுக மற்றும் ஆரஞ்சு = தேசிய ஜனநாயகக் கூட்டணி
மூடு
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை பொதுமக்களிடையே பரப்பும்முகமாக அரசு சார்பற்ற அமைப்புகள் இரண்டுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், ஒப்பந்தம் செய்தது.[1]
தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.[2] தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது.[3]
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அதிமுக அமைத்தது.[6]
தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாக இடதுசாரிகள் தெரிவித்தனர்.[7][8]இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளதாக இவ்விரு கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.[9]
ஒரு தருணத்தில், தமிழ்நாட்டில் அதிமுகவும்இந்திய பொதுவுடமைக் கட்சியும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.[10][11][12] தமிழ்நாட்டில் அதிமுக - இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெறுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.[13]
ஆனால் தொகுதி உடன்பாட்டால் இம்முறை இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் இணையாததால். அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவின்அதிமுக கட்சி வென்று மத்தியில் நாடாளுமன்றத்தில் மதவாத கட்சிக்கு இடையே தனிப்பெரும் மாநில கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றியின் ரகசியத்தை செல்வி ஜெயலலிதாவிடம் கேட்டபோது இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட இது பெரியாரின் சித்தாந்ததிற்க்கு, கிடைத்த வெற்றி அண்ணாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, புரட்சி தலைவர் புகழிற்க்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
அதே போல் மத்தியில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பாண்மை இல்லாமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எங்கள் அதிமுகழக அரசு சார்பில் வெற்றி பெற்ற அனைத்து மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பாஜக அல்லாத அரசு ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலரும், தமிழக முதலவருமான ஜெயலலிதா அவர்கள் கூறினார்.
மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும், புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டது.[19]
முஸ்லிம் லீக்கிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது[20]
பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி
பொதுவுடமைக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது இல்லையென்றான பின் அவை எக்கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டன.[21]
இரு பொதுவுடமைக் கட்சிகளும் தலா ஒன்பது இடங்களில் போட்டியிட்டன.[22]இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கோயம்புத்தூர், மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட்டது.
காங்கிரசு
எக்கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.
புதுச்சேரியில் இதன் வேட்பாளராக நடுவண் அரசின் அமைச்சர் நாராயணசாமியை அறிவித்தது.[23]
ஆம் ஆத்மி கட்சியின் ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 8 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என்றும் சுப. உதயகுமார் கன்னியாகுமரியிலிருந்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது[26]
ஆம் ஆத்மி கட்சியின் பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 9 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது [27]
அதிமுக, புதுச்சேரியையும் சேர்த்த 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[28]. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.[29]
திமுக புதுச்சேரிக்கும் சேர்த்து 35 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[30][31][32].
பாசக கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியலை பாசக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார், இதில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும் பாசக 8 இடங்களிலும் மதிமுக 7 இடங்களிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சியும் இந்திய ஜனநாயக கட்சியும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றனர்.[34]
அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதற்கட்ட பரப்புரையை, அதிமுக பொதுச் செயலராகிய ஜெயலலிதா மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை ஈடுபடுவாரென தெரிவிக்கப்பட்டது. விரிவான பயண விவரமும் வெளியிடப்பட்டது.[38]
அதிமுகவின் தேர்தல் அறிக்கை பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டது.[39]
திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது.[40]
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)த்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.[41]
பெப்ரவரி 13, 2014 அன்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சி - CVoter நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம், வெளியிடப்பட்டது[42]:
மேலதிகத் தகவல்கள் கட்சி, கணிக்கப்பட்ட இடங்கள் ...
கட்சி
கணிக்கப்பட்ட இடங்கள்
அதிமுக
27
திமுக
5
தேமுதிக
2
காங்கிரஸ்
1
மதிமுக
1
சிபிஐ
1
சிபிஎம்
1
விடுதலை சிறுத்தைகள் கட்சி
1
மூடு
மேலதிகத் தகவல்கள் நிறுவனம், கருத்துகணிப்பு வெளியான தேதி ...